7 செப்டம்பர், 2006

பில் கேட்ஸ் ஒரு பிள்ளை பிடிக்கும் திருடன்!

புள்ள விக்கிலியோ, புள்ள!

அட அமாங்க. அதே தானுங்க!

சரி நாங்க இப்படி சொன்னாக்கா நம்ப மாட்டீங்க. நீங்க கொஞ்சமாவது புரிஞ்சிகினுன்னு கொஞ்ச செரம பட்டு நம்ம ஷேக்ஸ்பீரு டமிள்ள எழுதிக்கீறேன் படிச்சிப் பாத்துபுட்டு அப்ரம் ஒங்க கர்த்த சொல்லுங்க.

ஏ, புள்ள விக்கிலியோ, புள்ள!

நிற்க!

------------------------------------------------------------------------------------------------

அமெரிக்காவிலேயே இனப்பிரச்சினை நிறைய இருக்கிறது. ஆப்ரிக்க கருப்பர்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள். அம்மக்களிடம் ஏழ்மை தலை விரித்தாடுகிறது. சென்ற கத்ரீனா சீற்றத்தின் போது இம்மக்கள் கவனிப்பாரற்று கிடந்தனர். இது போதாதற்கு தென் அமெரிக்க மக்களின் பிரச்சினை வேறு நிறைய உண்டு. இதையெல்லாம் பெரிய பிரச்சினையாய் எடுத்துக் கொள்ளாமல், ஏன் இவர்கள் நம் இந்திய நாட்டின் மீதும், முக்கியம்மாக இளைஞர்கள் மீதும் அதிக அக்கரை காட்டி வருகிறார்கள்? படித்த திறமை வாய்ந்த இளைஞர்கள் எல்லாரையும் திருடி கொண்டு போவதற்கு தானுங்க!

உதாரணத்திற்கு, அமெரிக்காவிலேயோ அல்லது ஐரோப்பாவிலேயோ ஒரு குழந்தை பிறந்து, அதனை வளர்த்து, படிக்க வைத்து, ஒரு பொருப்புள்ள ஆலாக்குவதற்கு அரசாங்கத்திற்கு எக்கச்சக்க செலவு பிடிக்கிறது. உணவு, எரிபொருள், வீடு, இடம், மூலத்னம், பொறுப்பு, ஒழுக்கம், நற்குணம், அமைதி விரும்பல், குடும்ப பாசம், கலை, கலாச்சாரம் என்பவை இவைகளில் ஒரு சில் எடுத்துக்காட்டு. அமெரிக்க மாதிரியான காட்டுமிராண்டிகள் நாடுகளில் ஒழுக்கத்துடன் குழந்தை வளர்ப்பதென்பது மிகவும் கடினம். ஒரே ஒரு குழந்தையை அவர்கள் ஆலாக்குகிற பணத்தை வைத்து நம் இந்தியா போன்ற நாடுகளில் ஒரு நூறு குழந்தைகளை ஆலாக்கிவிடலாம்.

இப்படி, இந்தியா போன்ற வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்து ஆலாகி திறமையுடன் படித்து கையில் தொழிலுடன் அவர்கள் நாட்டுக்கு செல்லும் பிள்ளைகள் அந்நாட்டினருக்கு ஒரு பெரிய பரிசு. ஒரு பைசா செலவு செய்யாமல் அவர்களுக்கு தானாக வரும் அன்பளிப்புகள். இதனுடன் நல் ஒழுக்கமும் இலவசமாக கிடைக்கிறது. இது அவ்வலவும், நாம் நம் தாய் நாட்டுக்கு செய்யும் தியாகம். மோசம்!

இப்போது கதை எப்படி போகிறதென்றால்,

பள்ளிகளையும், கல்லூரிகளையும் நேரடியாக அவர்களே ( உதவி, நன்கொடை, அன்பளிப்பு, தன் ஆர்வ சங்கம், சேவை சங்கம் என்ற பெயரில், உலக வங்கி கடன்) கட்டி, அவர்களுக்கு வேண்டிய எதிகால உழைப்பாலிகளை நம் நாட்டில் நம்மை வைத்தே வளர்க்கிறார்கள். அதாவது நம் கை விரல்களையே நம்மிட எடுத்துக் கொடுத்து, இந்தா உன் கண்களை நீயே குற்றிக்கொள் என செய்து கொண்டு இருக்கிறார்கள். எதிர்த்து ஏதாவது கேட்டாள், நீ பேசுவதற்கு மிச்சம் உனக்கு வாயாவது (பணம்) இருக்கிறதே அதை வைத்து க் கொண்டு சந்தோஷமாக இரு என்கிறார்கள். இதெல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், இந்த அநியாயங்களுக்கெல்லாம் துணை போகும் நம்ம ஊர் மக்கள் தலைவர்கள்!

சுறுக்கச் சொல்லப் போனால், நம் இந்தியா, அமெரிக்கர்களுக்கு ஒரு துணை மாநிலமாகிவிட்டது என்றே சொல்லாம்.

மேற்கொண்டு இந்திய நாடு பூலோக ரீதியில் ஒரு முக்கிய ராஜ தந்திர இடத்தில் இருக்கிறது. சைனாவை பார்த்து மிரண்டுகொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு இந்தியா மீது எப்போதுமே, ஆடு நனைகிறதே என்று அழுகிற ஓநாய் கண்தான். அமெரிக்க மோகத்தையும், கலாச்சாரத்தையும் பரப்பி இங்குள்ள இளைஞர்களின் மனதை அபகரித்துவிட்டால், நாளைய இந்தியா இவர்களுக்கு விசுவாசமாக இருக்கமல்லவோ!

நிலமை இப்படியெ போய் கொண்டிருந்தால், நாளைக்கு மத்திய கல்வி அமைச்சகத்தை அரசாங்கம் பில் கேட்ஸுக்கு தாரை வார்த்து கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமிருக்காது.

இனிமேல், இப்போதிலிருந்தே, நம் பிள்ளைகள் நமது இல்லை நினைத்து, பழகி, பெற்றோர்களாகிய நாமெல்லாம் அமெரிக்கா போன்ற பேராசை பிடித்த பணக்கார நாட்டுகளின் கூலிகள் எனபதனை நன்றாக புரிந்த்து கொண்டு பிள்ளைகளை வளர்த்து அவர்களிடம் கொடுத்துவிட்டு அவன் போடும் பிச்சை கார காசுகளை வைத்து ஊரெல்லாம் வாய் வலிக்க டமாரமடித்து, மினு மினுவென்று நகைகளை நட்டுகளையும் போட்டுகொண்டு, கார் பங்களா வைத்துக் கொண்டு உள்ளூரில் பிதற்றிக்கொண்டு வருவோம். நமது மூதாதையர்களும் முன்னோர்களும் காலம் காலமாய் கட்டி காப்பாத்தி வளர்த்து வந்த அவர்களது பண்பாடு, கலாச்சாரம், குலம் இன்னும் பல மனித பொக்கிஷங்களையும் (patrimoine) அடியோடு அழித்து பெருங்குழி தோண்டி ஆழ புதைத்து அவர்களது சிறு நினைவுகூட இல்லாதபடி எல்லாவற்றையும் எரிப்போம். இன்றை இளைஞர்கள், வருங்கால தலைகள், நாளைக்கு தத்தமது சொந்த

கலாச்சாரமின்றி, பண்பாடு ஏதுமின்றி, அவர்களுக்கென்று சொந்த அடையாலமின்றி, அந்நிய நாட்டில் வாழ்நாள் முழுதும் நாய் போன்ற அடிமை வாழ்க்கை வாழ வழி செய்வோமாக!

நாம் பிள்ளைகளை வளர்க்கவில்லை. மாறாக வெளிநாட்டினருக்கு உழைக்கும் இயந்திரத்தைத்தான் வளர்த்து வருகிறோம். இப்போதைக்கு நாம் குடும்பத்திலிருந்து பிரிக்கிறோம். நாளைக்கு அவர்கள் நாடு, இனம், மக்கள் சுற்றம், முற்றம் அனைவரையும் பிரிந்து, ஒரு சாதாரண காற்றாடியைப் போல் பலமில்லாமல் உதறிக்கொண்டிருப்பார்கள்.

முன்னொரு காலத்தில், வெள்ளையர்கள், நம் மண் வளத்தை மட்டும் திருடிக் கொண்டிருந்தார்கள். இப்போது மக்கள் தலைவர்களின் மிகுந்த சிரந்த ஆசிகளுடன் நம் மனித வளத்தையும் சேர்த்து முழுதும் திருடுகிறார்கள்.

இதனால் வரும் கேடுகள் என்னெனவாக இருக்க முடியும்?

குடும்பங்கள் உடையும், பண்பாடு மறையும், கலாச்சாரம் அழியும், அநாகரிகம் தலை தூக்கும், ஒழுக்கம் கெடும், கலகங்கள் உருவாகும், நாடே பிளவு படும், அரசாங்கம் பலவீணமடையும், குழப்பங்கள் உருவாகும். கடைசியில் நாட்டின் பாதுகாப்பிற்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து வரும்.

இன்றைக்கு நமது பிள்ளைகள் நமதில்லை என்று பழகி வருகிறோமோ, அதே போல் ஒரு நாள், நமது நாடும் நமதில்லை என பழகிகிகொள்ள வேண்டிய காலம் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

விழிப்போமா? அல்லது இப்படி உறங்க்கிகொண்டே இருப்போமா?

சுதந்திரமே, உன் விலை என்ன?

------------------------------------------------------------------------------------------------

ஏ, புள்ள விக்கிலியோ, புள்ள!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக