இன்றைய தினமணி மூலம் சூர்யா-ஜோதிகா = ஒரு கலப்புத் திருமணம் என அறிந்து கொண்டேன். இப்படித்தான் சிறுபான்மையினர் என்றாவது ஒருநாள் சிறிது சிறிதாய் பெரும்பான்மையினரில் கலந்து கரைந்து மறைந்துபோவர். அதே கதிதான் கிறித்தவர்களுக்கும் வந்து சேரும். பிறகு, ஒரு நாளைக்கு, "இந்து என்ற சிறுபான்மையினர், தலித்துக்கள் என்ற பெரும்பான்மையில் கலந்தும், கரைந்தும், மறைந்தும் போவர்". இது காலத்தின் நியதி. இயற்கையின் சட்டம். இதை யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது! ஏனென்றால், இந்தியா என்பது பல இனங்கள், குலங்கள், குழுக்கள், மொழிகள், கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் அடையப்பெற்ற "உலகத்தின் ஒரு தன் நிகரில்லா மனித குலத்தின் தனிப்பெரும் மகா சமுத்திரம்". இதன் ஆழத்தை யாராலும் எக்காலமும் எட்டிப்பிடிக்கவே முடியாது. மீறினால், மறைந்துபோவது தின்னமே! இப்பெருஞ்சமுத்திரத்தில் நீ உன் படகில் புயல் எதையும் சந்திக்காமல் அமைதியுடன் பிரயாணம் செய்ய விரும்பினால் ஒழுங்காய் இங்குள்ள இயற்கையின் சட்டத்தை மதித்து நடந்து பழகிக்கொள். இயற்கையை எதிர்த்து வாழந்ததாக உலக சரித்திரத்தில் இதுவரை எவருமே இருந்ததில்லை. அவர் மதத்தின் பெயரில் வந்தாலும், அவர்களுக்கு கதி இதுதான். தங்கள் மதத்தை பரப்பவேண்டும் என்ற ஒரே கொள்கையில் உள்ளே நுழைந்த அனைத்து மதத்தினரும் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு வகை தெரியாமல் மாட்டிகொண்டு குய்யோ முறையோ என ஓலமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மதமற்ற தலித்துக்களுக்கு மற்றும் பல பூர்வீக குடிகளுக்கு இம்மாதிரியான பிரச்சினை எண்ணத்தலவிலும் இருக்க வாய்ப்பே கிடையாது.
இப்போது "மதம்" என்கிற வார்த்தைக்கு பதில் அதையே "குலம்" என கூறிகொள்வது சாலச்சிறந்தது. ஏனென்றால், இன்னும் சரியாக ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளில் இப்படித்தான் ஆகியிருக்கும் நமது இப்போதைய இந்தியா!
"இந்திய தேசத்தை ஒரே மதத்தின் கீழ் கொண்டுவர நினைப்பவர் எவராய் இருந்தாலும் அவர் ஒரு மகாபெரும் மடையராகவே இருப்பார்!"
"கெடுவான் கேடு நினைப்பான்."
ஓ! மனதகுலத்தின் தன் நிகரில்லா தனிப்பெரும் மகா சமுத்திரமே, பாரத மாதாவே, நீ வாழ்க! உனை வணங்குகிறேன், என் தாயே! மதம், மாயம் என்ற
பெயரில் உன் பிள்ளைகளில் ஒரு சில துஷ்டர்கள், ஏதுமறியா மற்றவர்களை துன்புருத்திக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் வீணாய் அழிந்துபோவதற்குள், நல்ல புத்தி சொல்லி, மன்னித்து அவர்களையும் கும்பலோடு கும்பலாய் சேர்ந்து அமைதியாய் வாழக்கற்றுக்கொடம்மா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக