கலாமின் பேராசை பெருநட்டம்!
வல்லரசு ஆகவேண்டும் என சதா கூறிக்கொண்டிருக்கும் பாரத நாட்டின் தலைவர் கூற்று ஒருசில மக்களுக்கு எந்தெந்த வகையில் பிரச்சினைகளை உண்டுபண்ணும் என்பதற்கு என் விளக்கம்.
இதற்கு உதாரணமாக வேறு ஒரு தொலை நோக்கத்திட்டத்தை ஒப்பிட்டு விளக்க ஆசைப்படுகிறேன்.
ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் மின்சாரம் தயாரிப்பதற்கு பிரமாண்டமான அணைக்கட்டுகள் கட்டுகிறார்கள். "இது ஒரு தொலை நோக்கு திட்டம்." அணைக்கட்டுகளை கட்டும் இடம் பொதுவாக காட்டுப்பகுதிகளில். ஆனால், இம்மாதிரியான காட்டுப் பகுதிகளில்தான் பழங்குடிகள், ஆதிவாசிகள் இன்றும் வசித்துவருகின்றனர். மண், காடு,இயற்கை ஆகியவைகளையே இதுவரை நம்பி வாழ்ந்துவந்த இவர்களுக்கு இப்போது ஆபத்து வந்துவிட்டது. இருந்தாலும் அணைகட்டியே ஆகவேண்டும் என்ற நிர்பந்தமும் மறுபக்கம்.
திட்டம்போட்டபடி அணையும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.
ஆதிவாசிகள், பழங்குடிகள் இடம் பெயர்க்கப்பட்டனர். இவர்கள்து பண்பாடு, வாழும் முறை, கலாச்சாரம், குடும்பம் நம்பிக்கைகள் வேறுடன் அழிக்கப்பட்டது. இவர்களது வாழ்க்கை சூறையாடப்பட்டது. இம்மக்கள் அலைகழிந்தனர். குடிக்கும் போதைக்கு ஆட்பட்டனர். பின், திருட்டு, கொலை, குற்றம், விபச்சாரம் மற்றும் பலவிதமான சமூக விரோத செயல்களுக்கு ஆளாகினர். எதற்கும் உபயோகமில்லாத ஜடங்கள் ஆகினர். இனி இவர்களை கண்டுகொள்வதற்கு யாரும் இல்லை. சமுதாயத்திற்கு தேவைப்படாத, ஒதுக்கப்பட வேண்டியவர்கள் ஆகிவிட்டனர்.
குறைகாலத்திலேயே உயிர் மாய்த்து விரைவில் மறைவர்.
நான் மேற்கூறிய அணைக்கட்டு திட்டத்தை போல்தான் கலாமின் வல்லரசு திட்டமும். யார்யார் மடியப்போகிறார்களோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக