5 பிப்ரவரி, 2007

வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ஏர்-இந்தியா விமான விபத்து!

***
<< விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா? >>

***
உலக தட்ப வெப்ப நிலை மாற்றங்களினால் சில சமயங்களில் சில வியக்கத்தக்க உண்மைகள் வெளி வருகின்றன. பிரான்ஸில ஆல்ப் (Alpes) மலைத்தொடரில் 'மோன் ப்லான்' (Mont Blanc) பனிமலையில் உள்ள 'பொஸ்சொன்' (Bossons) குன்றில் பனி உருகியதால், 1950 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் மர்மமான ஏற்பட்ட இரண்டு ஏர்-இந்தியா விமான விபத்துகளின் தடயங்கள் தெரிய ஆரம்பித்து இருக்கின்றன. தனியல் ரோஷ் எனும் மலைஏறுனர் கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் செய்த ஏற்றங்களின்போது சிக நகைகள், பணிப்பெண் கைப்பை, ஒரு புகைப்பட பெட்டி என்பன போன்ற பொருள்களை கண்டெடுத்தார். இன்று, விசாரனை வேண்டி, இப்பொருள்கள் விஞ்ஞான காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. முகமில்லா மறைந்த இந்த பணிப்பெண்ணின் வாழ்க்கை பற்றிய புத்தகம் எழுத ஆரம்பித்து இருக்கும் ரோஷ்'க்கு புகைப்படங்களில் உள்ள விடயங்களை வெளிவிட காவல்துறையினர் கால தாமதம் செய்து வருகின்றனர்.

இது இப்படி இருக்க, இவ்விரண்டு சோக நிகழ்ச்சிகள் இப்போது நிறைய கேள்விகளை எழுப்பி தீவிர புயல்வீச செய்ய ஆரம்பித்து இருகின்றன. பதினாறு ஆண்டுகள் இடைவெளிகள் இருந்தாலும், ஒரே குழுமத்தை சேர்ந்த இரண்டு விமானங்கள் (போயிங் 707 - லாக்ஹீட் எல்-749) ஒரே மாதிரியான முறையில் விபத்துக்கு உள்ளானது எப்படி சாத்தியம் என்பதே கேள்வி! என்னதான் இது நடக்க கூடியதே இருந்தாலும், மிகவும் அரிதானதே!

இதைப்பற்றிய புரளிகள் புற்றீசல் போல் நிறைய கிளம்ப ஆரம்பித்துவிட்டன. ஒரு புரளியின் கருத்துப்படி, இந்திய அணு திட்டத்தின் தந்தை எனப்பட்ட ஹோமி பஹாபா (Homi Bahabha), 117 பயணர்கள் மற்றும் இருபது மக்காக் குரங்குகளை ஏற்றிச்செசென்ற இந்திய போயிங் விமானத்தை ஒரு இத்தாலிய இராணுவ விமானம் 'மோதி' இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மலை இன்னும் என்னென்ன தடயங்களை வெளியிட போகிறதோ?
*
*
ஆதாரம் : சியான்ஸ் எ அவெனீர்.
பிரஞ்ச் மாத இதழ்
மொழி பெயர்ப்பு : மாசிலா.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக