//‘தண்ணி தண்ணி' என்று அரற்றிய எடிசனுக்கு தலை தொங்கியிருக்கிறது. தன் பேண்ட்டின் ஜிப்பைக் கழற்றி எடிசனின் அருகில் வந்து தொங்கியிருக்கிற அவருடைய தலையை கையால் நிமிர்த்தி தண்ணியெல்லாந் தர முடியாது, என் ஒண்ணுக்க குடிடா' என்று தன் பிறப்புறுப்பை எடிசனின் வாயில் திணித்திருக்கிறார் காவலர் செல்வராஜ்.//
தலித் முரசில் படித்த இந்த சமுதாய பிரச்சினை பற்றிய நிகழ்வுகளை வலைப்பூ பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இங்கு இதை பதிக்கிறேன். அனைத்து தர மக்களை பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்கள் இப்படி நலிந்தவர்களை தங்களது காட்டுமிராண்டி உணர்ச்சிகளுக்கு சோதனை தளமாக உபயோகிப்பதை எப்போது நிறுத்துவார்கள். மக்கள் வரிப்பணத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்ட இந்த வேலை ஆட்கள் சட்டத்தை மதிக்காமல் இப்படி அனாவசிய வன்முறை இச்சைகளை நலிந்தவர்களிடம் கட்டவிழ்த்துவிட்டு மகிழ்வடைதுதான் இவர்கள் படித்த படிப்பும் கற்ற பழக்கமுமா? மன நோய் பீடித்த சீக்காளிகள், ஆதிக்க வெறி பிடித்த கீழ்தர புத்தியுடைய சிலர் காவலாளி சீருடை அணிந்து நலிந்தவர்களை வேதனைக்கு உள்ளாக்கி நோகடிப்பதை தீர்க்கத்துடன் கண்டிப்போம்.
(முழு கட்டுரையை தலித் முரசு சென்று படிக்க வேண்டுகிறேன்.)
:(
பதிலளிநீக்குகாவல் நாய்களின் குதறல் !
ஐயோ.. ஏனப்பா அவன் அதைக் கடித்து துப்பவில்லை.
பதிலளிநீக்குஜேர்மனிலும் மற்றய இடங்களிலும் இப்படி நடந்திருக்கு
_______
CAPitalZ
அடடா
காக்கிச் சீருடையில் காட்டு மிராண்டிகள்!
பதிலளிநீக்கு:(
மிகக் கொடூரம்..மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல். நீட்டிய உறுப்பை வெட்டியிருந்தாலும் தப்பில்லை.
பதிலளிநீக்கு//மிகக் கொடூரம்..மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல். நீட்டிய உறுப்பை வெட்டியிருந்தாலும் தப்பில்லை. //
பதிலளிநீக்குRepeatuuuu
என்னடா உலகம் என்று நினைக்க தோன்றுகின்றது!! சமூக நீதியாம்...சமூக நீதி...என்ன ம...ர்...நீதியோ!! எங்கய்யா இருக்கு தமிழகத்துல சமூக நீதி? கலைஞர் ஆட்சியிலும் கூடவா இப்படி?
பதிலளிநீக்குநினைக்கவே இரத்தம் கொதிக்கின்றதய்யா!! என்ன செய்கின்றன நமது தலித் அமைப்புகள்?
இது போன்ற காவல்துறையினரின் கொடுஞ்செயல்கள் வண்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை. செய்தியை பிளாக்கரில் பதிந்து எம்மைப்பூல் அறியாத பலரும் படிக்க உதவியதற்கு நன்றி!!
தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படுபவர்களுக்கு எதிரான வன்முறை ஒழியாத வரை எந்த ஒரு தனிமனிதனும் தன்னைக் குறித்துப் பெருமைப்பட்டுக் கொள்ள அருகதையில்லை.
பதிலளிநீக்கு:(
நலிந்தவர்களுக்கு ஆதரவு குரல் மற்றும் ஆதிக்க திமிர் பிடித்தவர்களை அடக்க எதிர் குரல் கொடுத்த அன்பர்கள் திரு. கோவி.கண்ணன், CAPital, நாமக்கல் சிபி, G.Ragavan, சந்தோஷ் aka Santhosh, முகவைத்தமிழன் மற்றும் சேவியர் அனைவருக்கும் தாழ்மையுடனான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஇப்பிரச்சினையை மதப்பிரச்சினையாய் மாற்ற நினைத்து வந்த இரண்டு அனானி பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டன.
தற்காலங்களில் காவல் அதிகாரிகள் ஆவதற்கு நிறைய இளைஞர்கள் தேர்வுகள் எழுதி வருகிறார்கள். திறமையுள்ளவர்கள் அதிகார உரிமையாளர் ஆகும்கால், தமக்கு கீழ் இதுபோன்ற துஷ்பிரயோகங்கள் நடவா இருக்க உறுதி எடுப்போர் என நம்புவோம்.
இதைப்போன்ற அடாவடி செயல்கள் பற்றிய செய்திகளை படிப்பவர்கள் தங்களது சுற்றத்தில் இதைப்பற்றி பேசி விவாதித்து விழிப்புணர்வு ஏற்படத்தினால் நாம் சார்ந்த சமுதாயத்திற்கு நன்றே.
இதுபோன்ற ஆயிரமாயிரம் கொடுமைகள் வெளியே தெரியாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன...
பதிலளிநீக்குஇன்றைக்கு திருமா போன்றவர்களின் எழுற்சி இல்லை என்றால் இந்த விடயம் கீற்றுக்கு கூட தெரியாமலேயே அடங்கிப்போயிருக்கும்..
சாதித்திமிரில் எடிசன் மீது வன்கொடுமை செய்திருக்கும் காவல்துறை காட்டுமிராண்டி நாய்க்கு கடுமையான கண்டணங்கள். நீட்டிய உறூப்பை கடித்துத் துப்பியிருக்க வேண்டும். ஆயுளுக்கும் அது பாடமாக இருந்திருக்கும். காலங்கள் மாறினாலும் வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருப்பது வருந்தத்தக்கது. இன்னும் அதிகப்படியான விழிப்புணர்வு மக்களிடையே வளரவேண்டும்.
பதிலளிநீக்குதிமிறி எழு!
திருப்பி அடி!!.
சாதித்திமிரில் எடிசன் மீது வன்கொடுமை செய்திருக்கும் காவல்துறை காட்டுமிராண்டி நாய்க்கு கடுமையான கண்டணங்கள். நீட்டிய உறூப்பை கடித்துத் துப்பியிருக்க வேண்டும். ஆயுளுக்கும் அது பாடமாக இருந்திருக்கும். காலங்கள் மாறினாலும் வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருப்பது வருந்தத்தக்கது. இன்னும் அதிகப்படியான விழிப்புணர்வு மக்களிடையே வளரவேண்டும்.
பதிலளிநீக்குதிமிறி எழு!
திருப்பி அடி!!.
நலிந்தவர்களுக்கு குரல் கொடுத்த திரு. செந்தழல் ரவி, முத்துக்குமரன் மற்றும் அய்யனார் அனைவருக்கும் தாழ்மையுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குமாசிலா,
பதிலளிநீக்குபோலிஸ் பயிற்சியின்போது பொதுமக்களிடம் பண்போடு பழகுவது எப்படி என்பதையும் சொல்லித்தர வேண்டும். அதுபோன்ற பயிற்சி நம் நாட்டில் வழங்கப்படுகிறதா என தெரியவில்லை.
உளவியல் ரீதியில் பார்த்தால் போலிஸ்காரர்கள் தமது மேலதிகாரிகளால் நாயை விட கேவலமாக நடத்தப்படுகின்றனர். ஆர்டர்லி வேலை என்கிற பெயரில் போலிஸ்காரர் மனைவி புடவையை துவைப்பது முதல் காய்கறி வாங்கிவரும் வேலை முதல் செய்ய வைக்கப்படுகின்ரனர்.மேலதிகாரி வீட்டு குழந்தைகூட இவர்களை வாடா, போடா என அழைக்கிறது.
இம்மாதிரி ஒடுக்கப்படும் போலிஸ் அதிகாரிகள் அந்த கோபத்தையும், வெறியையும் இப்படி எதிர்க்குரலற்ற ஏழைகளிடம் தணித்துக் கொள்கின்றனர்.கல்லூரிகளில் கடுமையாக ராகிங் செய்யப்படும் மாணவன் சீனியராகும்போது தனது ஜூனியரை அதை விட கடுமையாக ராகிங் செய்வது இதனால்தான். புருஷனும், மாமியாரும் மருமகளை அடிக்கும்போது அவள் அந்த கோபத்தை பிள்ளைகளை அடிப்பது மூலம் தீர்த்துகொள்கிறாள்.
போலிஸ் துறையில் வேலைநேரத்தை குறைப்பது, விடுமுறையை அதிகரிப்பது, பணிச்சுமையை குறைப்பது, ஆர்டர்லி முறையை ஒழிப்பது, சம்பளத்தை அதிகரிப்பது ஆகிய சீர்த்திருத்தங்களை செய்தால் இம்மாதிரி நிகழ்வுகள் குறையும்.
ஆனால் இந்த போலிஸ் அதிகாரியை தண்டிக்காமல் விடக்கூடாது. வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கிறிஸ்த்துவனாக இருப்பதால் மட்டுமே ஒருவருடைய தலித் அந்தஸ்த்தை அரசியல் சட்டம் வேண்டுமானாலும் போய்விட்டது என்று கூறலாம்.. ஆனால் சமுதாயம் ஏன் காவல்துறையே அவர்களை இன்னமும் தலித்தாகவே காண்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்..
பதிலளிநீக்குமாசிலா,
பதிலளிநீக்குஇதுபோன்ற ஆயிரமாயிரம் கொடுமைகள் வெளியே தெரியாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.???