23 ஆகஸ்ட், 2007

தமிழ்மணம் தளம் வழியாக அல்-கையிதாவிற்கு உளவு மொழியில் செய்திகள் பரிமாற்றம் நடக்கின்றதா? ஐ.நா சபை காட்டம்!

இது ஒரு மீள்பதிவு.
.
ஆம் நண்பர்களே. இதை உங்களால் கொஞ்சமும் நம்ப முடியவில்லையா? இருந்தும் நம் அனைவரின் கண் முன்னும் இந்த அநியாயங்கள் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன.
.
தமிழ் எழுத்துக்களை வடமொழி எழுத்துக்களுடன் கலந்து சாதா தமிழனுக்கு ஒரு எழவும் புரியாத வகையில், கெட்ட புத்தி உடைய சிலர் தமிழ்மணம் வலை திரட்டியையே ஒரு பயங்கரவாத நாசக்கார கும்பல்களுக்கு செய்தி பரிமாற்றம் செய்யும் தளமாக மாற்றி உலக அழிவுக்கு வழிவகுத்து வருகின்றனர். உலக அமைதியை விரும்பும் நாம் அனைவரும் இவைகளை கடுமையாக கண்டிப்போம். மனம் தளராமல் போராடுவோம்.
.
இது போன்ற செய்தி பரிவர்த்தனைகளை இடைமறித்து உங்களுக்காக இதோ சூடாக சில தளங்களும் அதில் உள்ள அசல் பித்தலாட்டங்களின் எடுத்துக்காட்டும்.
.
//ஸீதா ஸதீ சம விஸுத்த ஹ்ருதம்புஜாதா
பஹ்வங்கனா கரக்ருஹீத ஸுபுஷ்பஹாரா
ஸ்துன்வந்தி திவ்ய நுதிபி: பணிபூஷணம்
த்வாம்ஸ்ரீ சத்ய சாயி பகவன் தவ சுப்ரபாதம்//
உங்களுக்கு ஏதாவது புர்ந்ததா?
.
//ஸுப்ரபாதம் இதம் புண்யம் யே படந்தி தினே தினே
தே விசந்தி பரந்தாம ஞான விக்ஞான ஸோபிதா//
இதில்தான் ஏதாவது விளங்கியதா?
.
//தேசாந்தராகத புதாஸ் தவ திவ்ய மூர்த்திம்
சந்தர்ஸனாபிரதி ஸம்யுத சித்த வ்ருத்யா
வேதோக்த மந்த்ர படனேன லஸந்த்ய ஜஸ்ரம்
ஸ்ரீ சத்ய சாயி பகவன் தவ சுப்ரபாதம்//
.
//ச்ருத்வா தவாத்புத சரித்ரம் அகண்ட கீர்த்திம்
வ்யாப்தாம் திகந்தர விசால தராதலேஸ்மின்
ஜிக்ஞாஸு லோக உபதிஷ்டதி சாஸ்ரமேஸ்மின்
ஸ்ரீ சத்ய சாயி பகவன் தவ சுப்ரபாதம்//
அய்யய்யோ! என்ன இதெல்லாம்?
.
எந்த இனங்களை, எந்த ஊரை, எந்த இரயிலை, எந்த விமானத்தை அழிக்க சதி திட்டங்களோ இவைகள். பயமாக இருக்கிறது. ஏ! மோசக்கார பாவிகளே! நிறுத்துங்கள் உங்கள் அநியாயத்தை.
.
இந்திய உளவுத்துற்றை என்ன 'ரா' அடித்துக்கொண்டிருக்கிறாய்?
.
இப்படியாக நிறைய எழவு பிடித்த கண்றாவிகளை எக்கச்சக்கமாக கொண்டு மக்களின் உயிர் குடிக்க அலைந்து திரிந்து கொண்டிருக்கும் கும்பலுக்கு தமிழ்மணம் துணை போகலாமா?
.
ஏ! தமிழ்மண நிர்வாகிகளே! வேண்டாம் உங்களுக்கு இந்த வீண் வேலைகள். உடனே நிறுத்திவிடுங்கள். ஐக்கிய நாடுகளின் சாபம் உனக்கு தேவையா? அமெரிக்கா ரவுடிகளிடம் பேட்டை பிஸ்தாக்களிடமும் மோதல் உனக்கு தேவையா? காட்டுமிராண்டி சங்கோத மொழி பழகுபவர்களை வெளியே தள்ளிவிடு. உலக அமைதிக்கு பாடுபடு.
.
நண்பர்களே, இத்தளத்தையும் அவர்களின் தலைவன் படத்தையும் இங்கு சென்று பார்க்கலாம். பத்திரமான இடத்தில் பாதுகாப்புடன் உங்கள் பிள்ளை குட்டிகளை பார்த்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால் அவர்கள்தான் பார்த்துக் கொல்வார்கள்!

5 கருத்துகள்:

  1. மாசிலா,

    சாய் பாபாவோ, அவர்களுடைய பக்தர்களோ யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை.

    உங்களுக்கு ஏதேனும் கெடுதல் செய்தார்களா ?

    200 கோடி சென்னை தண்ணீருக்கு உதவியிருக்கிறார். பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. தூற்றாமல் இருப்பது நலம்.

    பதிலளிநீக்கு
  2. 06/06 சதியினைத் தக்க சமயத்தில் அறியத் தந்து, பேரழிவிலிருந்து உலகைக் காப்பாற்றிய மாசிலா!

    ச்ருத்வா தவாத்புத சரித்ரம் அகண்ட கீர்த்திம் வ்யாப்தாம் திகந்தர விசால தராதலேஸ்மின்

    பதிலளிநீக்கு
  3. கோவி.கண்ணன் சொன்னது
    //மாசிலா, சாய் பாபாவோ, அவர்களுடைய பக்தர்களோ யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை.//

    உங்க மனச புண்படுத்தியதுக்கு மன்னிச்சிக்கிங்க ஐயா. இருந்தாலும் நான் சொல்ல வந்த சேதிய சொல்லிடறேனுங்க.

    மக்கள மயக்கி, முண்டமாக்கி மடையனா ஆக்குவது தீங்காகுதுங்களா? வேடம் போட்டு பஜன வெச்சி சால்ஜாப்பு செய்றது தீங்காகுதுங்களா? பெண்களை, சிறுமிகளை கற்பழிக்கறது தீங்காகுதுங்களா? இளைஞர்களை, விடலை பருவத்தினரை மனம் மயக்க வைத்து மத பைத்தியம் பிடிக்க வைப்பது தீங்காகுதுங்களா? மாயா ஜால பொய் பித்தலாட்டங்கள் தீங்காகுதுங்களா?

    பதிலளிநீக்கு
  4. அழகு ஐயா, வருக வருகவே.
    பின்னூட்டம் போடுகிற சாக்குல நீங்களும் அல்கையிதாவுக்கு என் தளத்த வெச்சே ஒரு சேதி அனுப்பறீங்களா? இதெல்லாம் அதிகம்யா. வேண்டாங்க விட்டுடுங்க.

    ஐயா, நான் யாரு கிட்டேயும் எதுவும் சொல்ல மாட்டேன். இந்த மெசேஜ்ல இன்னாதான் இருக்குதுன்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்களேன்.

    //ச்ருத்வா தவாத்புத சரித்ரம் அகண்ட கீர்த்திம் வ்யாப்தாம் திகந்தர விசால தராதலேஸ்மின்//

    பூதம் போன்ற பறந்த 'அத' உடைய விசாலமான...

    ஐய்யய்யோ, ஜெயலலிதாவுக்கு வேட்டு வெக்கப்போறீங்களா. மொதல்ல அத செய்ங்க செய்ங்க...

    பதிலளிநீக்கு
  5. நல்லாயிருக்கு பதிவு ....

    பதிலளிநீக்கு