20 நவம்பர், 2009

அத்துமீறி உயிர் பிழைக்க வைத்ததற்காக தண்டிக்கப்பட்ட மருத்துவர்கள்!

குழந்தை பிறப்பிலேயே மரணம் அடைந்துவிட்டது என பொறுப்புள்ள மருத்துவர் ஒருவரால் அதிகார பூர்வ அறிவிப்பு செய்த பிறகும், இறந்த குழந்தையை முட்டி முரண்டி போராடி 40 நிமிடத்திற்கு பிறகு மறுபடியும் இவ்வுலகிற்கு கொண்டு வந்த சில மருத்துவர்களை பிரான்சின் சட்டம் தண்டித்து இருக்கிறது.

உயிர் உடலைவிட்டு பிரிந்திருந்த 40 நிமிட நேரமும் மூளையில் எந்தவித இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால், இன்றும், இனி எப்போதும் குழந்தையின் உடல் முழுதும் சொரணை அற்று கை, கால் அனைத்து அங்கங்களும் செயலிழந்து விட்டன. தங்களது பிள்ளையின் இந்த பரிதாபகர வாழ்க்கையின் நிலையை பார்க்க மனம் கொள்ளாத பெற்றோர்களே உயிர் பிழைக்க வைத்த மருத்துவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இறப்பின் அதிகார பூர்வ அறிவிப்பை மீறியும் மற்றும் பெற்றோர்களில் வேண்டுகோளை பொருட்படுத்தாமலும் (அத்துமீறி) போராடி உயிர் பிழைக்க வைத்த இக்குழந்தை இப்போது பெற்றோர்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் சுமையாகிவிட்டது. இதனால், இப்போது குழந்தையும் சாதாரண நிலை வாழ்க்கையை இழந்து, பெற்றோர்களின் வாழ்க்கையையும் சிதைத்து விட்டதாலும், இவை அத்தைனைக்கும் இம்மருத்துவர்களே முழு காரணம் என கூறி பிரான்ஸ் நாட்டு சட்டம் தண்டனையை உறுதி செய்யது.

2 கருத்துகள்:

  1. இப்படியும் நடக்குமா?:((

    பதிலளிநீக்கு
  2. கட்டாயம் அந்த குழந்தை ஒரு சுமைதான்.. தாங்கள் செய்வதன் பலனறிந்து செய்ய வேண்டும் மருத்துவர்கள்..

    பதிலளிநீக்கு