தொழில்நுட்பம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில்நுட்பம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 பிப்ரவரி, 2007

அதி-நுன்மூலப்பொருள். (nano-materiels or super-small materiels)


1.அறிமுகம் :
.
அதி-நுன்மூலப்பொருள் : (nanomateriel) என்பது சில பத்தாயிரம் அணுக்களால் (atoms)ஆன துகள்கள் இவை. இதன் அளவு ஒரு சில நூறு 'நனோமீட்டரை' (1/1000000000 ml.m) கூட தாண்டாது. இதன் சில அரிய சிறப்பு தன்மைகளால் இது பல துறைகளிலும் ஈடுபடுத்தபட இருக்கிறது.
.
2.வரலாறு :
.
மூலப்பொருள் என்பது பல நுறு கோடி அணுக்களால் ஆன ஒரு சேர்மம். பொதுவாக, இது போன்ற துகள்களின் குறுக்களவு ஒரு மிக்ரோ.மீ (1/1000 மி.மீ)லிருந்து ஒரு மி.மீக்கு இடைப்பட்டவையாக இருக்கும். சாதாரணமாக நாம் காணும் புகைகளில் இருப்பவை இதுபோன்ற துகள்களே. இருபதாம் நூ.ஆண்டில், பௌதீகத்தின் முன்னேற்றத்தினால் இம்மூலப்பொருள்களை அணு அளவுக்கு ஆராய்ச்சி செய்ய முடிந்தது. இம்முன்னேற்றங்கள், 1959இல் 'ரிச்சார்டு ஃபெய்மேன்' எனும் பௌதீகவியலாறை ஒரு மிக்ரோ.மீ க்கும் குறைவான அளவுள்ள கூட்டு சேர்மங்களை ஆராந்து பார்க்க ஊக்குவித்தன. இது போன்ற துகள்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கிய மூலப்பொருள்களுக்கு வியக்கத்தக்க குணாதிசயங்கள் இருக்கும் என 'பெய்மேன்' உறுதியாக இருந்தார். இப்படியாக அதி-நுன்மூலப்பொருள் பற்றி ஆராய்ச்சிகள் மும்முரமாக நடக்க ஆரம்பித்தன. முதலில் இவ்வாராய்ச்சிகள் ரஷ்யாவிலும், ஜப்பானிலும் இரகசிமாக நடத்திவரப்பட்டன. இவை நனோமுகப்பு (nanophase)எனும் ஆராய்ச்சி நிலையில் இருந்தது. பிறகு, 1980இல், நனோமுகப்பு மூலப்பொருள்கள் உருவாக்கி தொழிற்சாலைகளில் உபயோகிக்கப்பட்டு வந்தன. ஆதியில் ஒரே மாதிரியான இரசாயன மூலமாக இருந்தாலும், சாதாரண மூலப்பொருளுக்கும் இவ்வகை நனோ மூல பொருளுக்கும் உள்ள வித்தியாசம் ஆனது, இவைகளை அடிப்படையில் உருகொடுக்க உதவிய சேர்மங்களின் அளவும் அணுக்களின் எண்ணும்தான் காரணமாக அமைகிறது. இதன்படி, துகள்களின் அளவை பொருத்தே மூலப்பொருளின் தன்மையும் சிறப்படைகிறது.
.
3.உற்பத்தி :
.
நனோ-மூலப்பொருளின் உற்பத்தியை இரண்டு பெரிய பாகங்களாக பிரிக்கலாம். முதலில் நனோ.மீ அளவு சேர்மங்களின் ஆக்கம். பிறகு, இவைகளின் பிணைப்பு.
.
3.1. சேர்மங்களின் ஆக்கம் : தற்போதைக்கு பலவித பௌதீக இரசாயன முறைகளில் சேர்மங்களை உற்பத்தி செய்யலாம். இதில் முக்கியம் வாய்ந்தது : முதலில் ஒரு மூலப்பொருளை சூடேற்ற வேண்டும். அதாவது, பெரிய துகள்கள் உருப்பெற செய்யவேண்டும். ஒரு குறிப்பிட்ட சூட்டளவிற்கு பிறகு, கருப்பொருளின் தன்மையை பொறுத்து, அணுக்கள் ஆவியாகும். அந்த சமயத்தில், அவைகளை ஒரு செயலற்ற வாய்வுகொண்டு குளிர்ச்சி செய்யப்பட்டதும் அணுக்கள் சேர்மங்களாகிவிடும். அணுக்களின் ஆவியாகும் வேகத்தை உபயோகித்து மேலும் செயலற்ற வாய்வின் தன்மை மற்றும் அழுத்தம் ஆகியவைகளின் மூலம் நனோ.மீ துகள்களின் அளவுகளை தேர்வு செய்யலாம்.
.
3.2. சேர்மங்களின் கூட்டு : இப்படி உருவாக்கப்பட்ட துகள்களை கூட்டாக கோர்வை செய்வதற்கு, பாவிக்கப்படும் ஒரு தொழில்-நுட்பமானது : ஒரு திரவத்தில் இந்த சேர்மங்களை உசுப்பிவிடச்செய்து தொடர் மாற்றத்தை உருவாக்குவது. இதனால் ஒருவகை மாவு (powder) கிடைக்கப்பெறுகிறது. இதை இறுக்கி கட்டியான நுன்பொருள் எதையும் உருவாக்க முடியாது. ஆனால் இதற்கு மாறாக, இம்மாவை இறுக்கி சூடேற்றினால் நனோ.மீ சேர்மங்களில் இருந்து கட்டிகள் (block) கிடைக்கின்றன. சேர்மங்களை இறுக்கி சூடாக்கியதால் அணுக்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புகள் ஏற்படுத்தி கொள்கின்றன. அடிப்படை மூல கருப்பொருளின் தன்மையை பொருத்து இந்த வகை கோர்வைகள் திருப்திகரமான விடையை அளிக்கிறது. நுன்னிய கடின பொருள்கள் உருவாக்க பயண்படும் இவைகளின் தன்மையை ஆராய்ந்து பெரும் பயணடையலாம்.

.
4.தன்மைகள் :
.
ஆதியில் ஒரே வகை இரசாயண தன்மைகளை பெற்றிருப்பினும், சாதாரண மூலப்பொருள்களின் தரங்களை பின்னுக்கு தள்ளி நனோ-மூலப்பொருள்கள் அதிக தரங்களுடன் மிளிர்கின்றன. பலவித ஆக்க தொழில்நுட்ப உத்திகள் ஊடே அதிக வலுவான, எளிதில் மாற்றுத்தன்மைக்கு உட்படக்கூடிய மேலும் நீர்போல் நிறமற்ற மூலப்பொருள்களை பெறமுடியும்.
.
4.1 கடினத்தன்மை : ஒரு பொருளின் கடினத்தன்மையானது, அது அழுத்தங்களுக்கு எந்த அளவு தாக்கு பிடிக்க வல்லது என்பதை பொருத்தது. ஒரு உலோகத்தின் துகள்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நுன்னியதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கும் அது கடின தன்மை உடையது. இதன்படி, நனோமுகப்பு நிலை துகள்களினால் ஆன செப்பு சாதாரண செப்பைவிட இரு மடங்கு கடினமானது. ஒரே வகையான சாதாரண உலோகத்தினுள், சேர்மங்களின் கோர்வைகளில் உள்ள குறைபாடுகளால், சில ஊனங்கள் இருக்க வாய்ப்புள்ளது. உலோகத்தின் மீது நாம் கட்டாய தாக்கத்தை ஏற்படுத்தும்போது, இந்த ஊனம் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு, உலோகம் வலைகிறது. மாறாக, நனோ-பேஸ் உலோகத்தில், சேர்மங்கள் மிக சிறியவையாக இருக்கிறது ஆகையால் குறைபாடுகள், ஊனங்கள் இருக்கும் வாய்ப்பு இல்லை. இதனால், அதிக வலுப்பெற்று நசுங்காமல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கிறது. ஆகையால், சாதாரண உலோகத்தைவிட நனொ-மூலப்பொருள் மிகவும் கடின தன்மை கொண்டது.
.
4.2 வளைந்து கொடுக்கும் தன்மை : ஒரு மூலப்பொருளின் சுலபமான உருவம் மாறும் தன்மையானது, தான் உடையாமல் வளையக்கூடிய சிறப்படைய பெறுகிறது. இதன்படி, நனோமுகப்பு நிலை பீங்கான் சாமான்கள் சாதாரண பீங்கான்களைவிட வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாக இருக்கிறதாம். இது ஏனென்றால், ஒரு பீங்கான் கடின பொருளில் வீரல் விழும்போது, அருகில் உள்ள அணுக்கள் நகர்ந்து காலியான இடத்தை நிறப்புகின்றன. எவ்வளவுக்கு எவ்வள்வு இங்கு சேர்மங்கள் நுன்னியதாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கும் செப்பனிடும் செயல்கள் சுலபமாகவும் சீக்கிரமாகவும் நடைபெறும். துகள்கள் ஒன்றோடு ஒன்று இழைகின்றன, அணுக்கள் மிக குறைவான தூரத்திற்கே நகர்கின்றன. இதனால், சேர்மங்களின் அடிப்படை அளவை பொறுத்து நனோ-பீங்கானுக்கு வளையும் தன்மை கூடுகிறது.
.
4.3 ஊடேதெரியும் (transparence) தன்மை : சாதாரண மூலப்பொருள் ஒன்று மந்தமாக (opaque) இருக்கும்போது, அதே ஈடான நனோ-மூலப்பொருள் தாண்டித்தெரியும் தன்மை கொண்டதாக இருக்கும். அதாவது, நனோமுகப்பு நிலை மூலப்பொருளின் துகள்கள் மிகசிறியதாக இருப்பதால் ஒளியை அலைகழிப்பதில்லை. மூல பொருளின் கட்டுமானத்தில் எந்த வித கோளாறும் இல்லையெனில், நனோ-மூலப்பொருள் ஒளியை தடுத்து நிறுத்தாது.
.
4.4 ஏனைய தன்மைகள் :
இம்மூன்று தன்மைகளை தவிர ( கடினம், வளைவு, தாண்டித்தெரிதல்), நனோ-மூலப்பொருள்கள் வேறு சில சிறப்புகளையும் கொண்டிருக்கின்றன. அவை : இரசாயண மாற்றங்களை கட்டுப்படுத்துதல் (catalytic), பல வண்ண நிறங்களை பெறுதல், அதிர்வேக-ஊதா கதிர்களை உட்கொள்ளுதல், மின்காந்த சக்திகள், இதர பல...
.
5. பயண் துறைகள் :
.
நனோ-மூலப்பொருள்களின் எண்ணிலடங்கா பயண் துறைகள் வெகு வேகமாக முன்னேற்றல் அடைந்துவிட்டன. இப்படியாக, இருபது வருடங்களுக்கு முன் விஞ்ஞான ஆராய்வுகளின் 'பொருளாக' இருந்தது, இன்று அனைவரது அன்றாட வாழ்க்கையில், மின் சாதனங்கள், வண்டி (auto-mobile) தொழில் அல்லது இன்னும் அழகு சாதனங்கள் என பல வடிவங்களில் நம்மை சூழ்ந்து வருகிறது.
*
*
ஆதாரம் : ஆங்க்கார்த்தா
பிரஞ்ச் அறிவுக்களஞ்சியம்
படங்கள் : இணைய சேகரிப்பு.
.
மொழி பெயர்ப்பு : மாசிலா.
.
பட விளக்கம் :
.
படம் எண்.1 : ஒவ்வொரு சிகப்பு துகளும் பல ஆயிரம் அணுக்களை கொண்டிருக்கின்றன. நம் ஒரு முடி இழையை சுற்றி வலைக்க இதுபோல் ஏறக்குறைய 20,000 துகள்கள் தேவை.
படம் எண்.2 : அணு கட்டமைப்பு.
படம் எண்.3 : STM எனப்படும் சுரங்கவழி ஆய்வுக்கருவி. இதன் உதவியுடன் தான் IBM முதன் முதலில் நனோ வகை தொழில்நுட்பத்திற்கு வழி கோளியது.
படம் எண்.4 : என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா முழுதும் இந்த வட்ட வில்லையில் அடங்கி இருக்கிறது. 100கோடி நனோ துளைகளால் (holes)ஆனது இது.
.
எச்சரிக்கை: நனோ-தொழிநுட்பத்தால் மனித குலத்திற்கே பயங்கர ஆபத்தும் உருவாக கூடிய சாத்தியமும் இருக்கிறது. இதைப்பற்றி இன்னொறு பதிவில் .
.
1 நனோ.மீ = 10~9m
1 நனோ மீட்டர் = 1/1000000000 மில்லி. மீட்டர்.
சேர்மம் = aggregates
கூட்டு, கோர்வை, பிணைப்பு = agglomerates.

9 பிப்ரவரி, 2007

நுகர்வோர்கள் கவனத்திற்கு!

உங்களது கற்பனை குதிரையை கொஞ்சம் அவிழ்த்துவிடுங்கள். இப்போது, நீங்கள் ஒரு தயார்-ஆடை கடையினுள் கால்சட்டை ஒன்றை போட்டு கண்ணாடியில் நேர்த்தி பார்க்கிறீர்கள். அப்போது உங்கள் முன் உள்ள கண்ணாடியில் மேலோட்டமாக, ஒரு படம் வந்து நீங்கள் போட்டிருக்கும் ஆடைக்கு பொருத்தமான மேல்சட்டையை ஒன்றை உங்கள் முன்வைத்து ஆலோசனை கூறுகிறது. கடைசியாக நீங்களும் அந்த சட்டையை சேர்த்தே வாங்க ஆசைபடுகிறீர்கள். விருப்பபட்ட அந்த ஆடையை போய் எடுக்கையில் அங்கிருக்கும் இன்னொரு திரையில் ஆடையின் விலை, அவ்வகை ஆடைகளின் கிடைக்கும் அளவுகள், செப்பனிட ஆலோசனைகள் அனைத்தும் பளிச்சிடுகின்றன.
.
இவை எல்லாவற்றையும் ஒரு ஆச்சரிய தூதன கண்கொண்டு பார்த்து மகிழ்கிறீர்கள். நீங்க வாங்க ஆசைப்பட்ட அந்த சட்டைகளில் ஒரு செய்தி-கிடங்கு செயலி (chips) மறைந்திருக்கிறது உங்களுக்கு தெரியுமா? இந்த செய்தி-கிடங்கின் உள்ள அனைத்து கோப்புகளையும் உங்கள் வீட்டு துணி-துவை இயந்திரம் படித்து அதற்கு தகுந்தாற்போல் நீரின் சூடு, சுற்றும் நேரம், பிழியும் வேகம் ஆகிய அனைத்தையும் சரி படுத்திகொள்ளும். இதுபோன்ற நூதன அதி-நவீன விஞ்ஞான காலம் வருவதற்கு இன்னும் பத்தாண்டுகளாவது ஆகும். இருந்தாலும், நியூ யார்க்கில், ப்ரேடா எனும் சொகுசு ஆடைகள் தொழிற்குழுமம் ஏற்கனவே இம்முறை 'புத்திசாலித்தன கண்ணாடி, சட்டை முறையை பரிசோதித்து முடித்துவிட்டது. இத்தாலியின் துணிதுவை இயந்திர உற்பத்தியாளர் 'மெர்லொனி' ஒரு சோதனை இயந்திரத்திற்கு இவ்வகை செய்தி-கிடங்கை படிக்கும் தொழில் நுட்பத்தை பொறுத்தி தயாராக கைவசம் வைத்திருக்கிறார்.
.
இன்று நாம் கனவுகாணும் இந்த முற்போக்கு காலம், RFID (radio frequency identification) என சொல்லப்படும் தொலைவில் இருந்தபடியே செய்தி அலைகளை அனுப்பும் செயலிகள் மூலம் இது சாத்தியம். சிறப்பங்காடிகள் மயமான இந்த காலத்தில் இந்த வித தொழில்நுட்பம் ஒரு பெரிய அடிப்படை மாற்றத்தையே உருவாக்க போகிறது. இதன்படி, கடைகளில் உள்ள ஒவ்வொரு பொருள்களின் உறை, பெட்டிகள் மீது இதுபோன்ற செயலி (chips) சிறிய ஏரியலுடன் பொருத்த பட்டிருக்கும். இந்த (ரேடியோ)விளக்க உரை செயலி, பொருள்களின் அனைத்து விடயங்களையும் தொலைவில் இருந்தபடியே தன்னுள் தங்க வைத்துக்கொள்ளும். இந்த செயலி பொருளுக்கு ஒரு மூளையை போன்றது. பணக்கார நாடுகளில் மிகபெரிய சிறப்பங்காடிகளில், நிர்வாகிகள் எண்ணில் அடங்கா பொருள்களை இம்முறை செயலிகளை பாவித்து இருப்பு-விற்றது-கொள்முதல் ஆகிய கணக்குகளை சுலபமாக நல்ல விதத்தில் நிர்வகிக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு இச்செயலியின் வியக்க வைக்கும் முக்கியகட்டமானது, இத்தொழில் நுட்பத்தை கடைகளில் செயல்படுத்தும்போதுதான் தெரியும். அமெரிக்காவில் இரண்டு சிறப்பங்காடிகள் இத்திட்டத்தை அமுல்செய்யும் பேரில் செயலியின் அலைகளை அலசும் இயந்திரம் பொருத்தப்பட அறிவு-கூடைவண்டியை (carrier) சோதனை செய்து வருகின்றனர். இவ்வண்டி வைத்திருப்பவர்கள், பொருட்களை வண்டிக்கருகில் கொணர்ந்ததும், பொருத்திய திரையில் பொருளைபற்றி அனைத்து விடயங்களும் தெரிந்துவிடும். ஜெர்மெனியின் 'மெட்றோ' சிறப்பங்காடி, ரைன்ஸ்பெர்க் எனும் ஊரில் ஏற்கனவே இம்முறையை செய்து பார்த்தாகிவிட்டது.
.
இந்த 'ரேடியோ-அலை-அடையாளம்' செயலி (RFID) பயண்களை கண்டறிய, கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய ஐம்பது விதமான கண்டுபிடிப்புகள், சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
.
கணக்காளர் (cashier) இல்லாத கடைகள் : முழுவதும் எர்பிட் பொருத்தப்பட்ட சரக்குகளை கொண்ட அங்காடிகளில், RFID அலை படிக்கும் செயலியின் உதவியுடன் நீங்கள் வண்டியில் வைத்திருக்கும் அத்தனை பொருள்களின் மொத்த விலை நிலவரங்கள் ஏற்கனவே கணக்கிடப்பட்டடு இருக்கிறதாகையால், கடையை விட்டு வெளியே வரும்போது, சேகரித்த பொருட்களை வண்டியில் இருந்து வெளியே எடுத்து கணக்காளரிடம் காட்டவேண்டிய அவசியம் ஏதுமில்லை. மேற்கொண்டு வண்டியில் உள்ள மொத்த சரக்குகளையும் ஒரே வினாடியில் அலசி கணக்கெடுக்கும் சாத்தியமும் உண்டு.
.
டன்மார்க்கில் நுகர்வோர் உதவியுடன் ஒரு புதுவித அதி-நவீன சோதனை செய்யப்பட்டது. இதன்படி, ஒருவர் கடையில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு இருக்கும்போது, வீட்டில் குளிர்சாதன பெட்டியில் ஏற்கனவே அவ்வகை பண்டங்கள் இறுப்பு இருக்கிறதா, அதன் கடைசி உபயோக தேதி போன்றவற்றை தெரிந்துகொள்ள அவரது கணினி பொருத்திய குளிர்சாதன பெட்டிக்கு ஒரு "SMS" அனுப்பினால் போதும். உடனே கைமீது பலண்.
.
இணையம் மூலம் வீட்டில், அலுவலகத்தில் இருந்தபடியே நிறைய பேர் பொருள்களை வாங்கி வருவதால், மன வேதனையில் இருக்கும் சிறப்பங்காடி விற்பனையாளர்கள் பல்வேறு உத்திகளையும் கையாள தயங்குவதிலை. இதன்படி, மென்பொருள் பொருத்திய ஒளிப்பதிவு கருவி உதவியுடன், கடையின் முக்கியம் வாய்ந்த இடங்களில் உலாவும் நுகர்வோரின் வயது, விருப்பம், வாடிக்கையாளர்கள் பிடித்த நேரம் என இன்னும் பலாதரப்பட்ட விடயங்கள் கணக்கெடுக்க படுகின்றன. நுகர்வோரின் ஒவ்வொரு அசைவையும் கண்கானித்து, அவர் விருப்பத்துக்கு ஏற்றார்போல் உத்திகளை கையாள்வதே இப்போது நடக்கும் சிறப்பங்காடிகளின் வியாபார போராக ஆகிவிட்டது. அங்காடிக்கு வருபவர், தான் ஒரு அதி-நவீன கனவுலகத்தில் இருப்பது போன்ற நினைப்பை உருவாக்குவதும் இதில் அடங்கும்.
.
ஒரு பக்கம் இப்படி இருக்கிறது என்றால், மறு பக்கத்தில் இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதகங்களையும் எண்ணி பார்க்காமல் இருக்க முடியாது. நுகர்வு, வியாபாரம், போட்டி என்ற பெயரில், அளவுக்கும் அதிகமான கண்கானிப்புக்கு ஆளாகி இருக்கும் நுகர்வோர்களின் அந்தரங்கம் இதனால் உடைக்கப்பட்டு எல்லை தாண்டபடுகிறது.
*
*
நன்றி : லெ மோந்
மொழி பெயர்ப்பு : மாசிலா.
.

4 பிப்ரவரி, 2007

கணினியின் இதயத்திற்கே வேட்டு!

***

கணினி மூளை ( micro-processor) : இதுதான் கணினி கயவர்களின் புதிய இலக்கம். உற்பத்தியாளர்கள் இதை தடுக்க புதிய பாதுகாப்பு முறையை தேடுகின்றனர்.

***

கணினி பாதுகாப்புக்கு புதுவகை ஆபத்து ஒன்று உருவாகியுள்ளது, குறிப்பாக மறைவு-மொழி-முறை (cryptography) பாவிக்கும் மென்-திட்டங்களை பற்றியது. ஆஸ்ற்றீயா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மூன்று கணினி வல்லுனர்கள் இப்படி எச்சரிக்கின்றனர். இதை நிரூபிக்க, இம்மூவரும் கணினி கயவர் போல் 'வேடமிட்டு' ஒரு நூதனமான வழிமுறையை கையாண்டனர் : கணினி மூளையானது மறைவு-மொழி-முறை பாவித்து கோப்புகளை மூடுவதையும் திறப்பதையும் 'காது' கொடுத்து 'கேட்டு' கடவு சாவிகளை யூகிப்பது என்பதே அது. சென்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்தே அறியப்பட்ட இச்செய்தியானது பாதுகாப்பு வல்லுனர்களை உசுப்பி விட்டிருக்கிறது. ஏற்கனவே இண்டெல் இதற்கான பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு தனது பங்கை அளித்து வருகிறது. இரகசிய டிஜிட்டல் கடவு சாவிகளை வேண்டும் அனைத்து ஆக்கங்கள் மீதும் கயவர்களின் பார்வை இப்போது திரும்பி உள்ளது. நியாயப்படி, ஒரு கணக்கு மூலம் கடவு செய்திகளில் உள்ள இச்சாவிகளை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இதற்கான வழிமுறைகள் மிகவும் நீண்டதும், கடினமானதும் வெகு நேரமும் தேவையானது ஆகும். ஏற்கனவே, கடந்த பத்து ஆண்டுகளாக, துணை-பாதை (auxilary chanal) வழியாக ஒரு நூதன தாக்குதல் முறை பாவித்து கணினியின் இதயத்தை அடைய செய்த உத்திகள் : மின்சார நுகர்வு, சத்தம், மின்-காந்த கதிர்... ஆகியவைகளை கணக்கிடுதல் என்பவை ஆகும். இந்தமுறை கணிதம் இதுவரை சிப்ஸ்'இல் உள்ள கடவுகளை களையவே உபயோகிக்கப்பட்டு வந்தது.

இம்மூன்று வல்லுனர்களும், ஒரு கணித முடிவை முன்னேற்பாட்டுடன் கணக்கிட்டு, செய் திறமையை செம்மை படுத்தும் நோக்குடன் கணினி மூளையின் ஒரு அந்தரங்க பகுதியை குறிவைத்து சோதித்தனர். இதன் குறிக்கோள் : 'கடவுகள் ஆராய்தல் போது, கணினி செய்முறையை (system) ஏமாற வைத்து, இதை பின்னுக்கு இழுத்து வருவது.' இதற்கு ஆகும் நேரத்தை ஆராய்ந்து செய்யப்படும் கணக்கு மூலம் கடவு சாவிகளை கண்டு பிடித்துவிடலாம். இப்படித்தான் ஒரு பெண்டியம் 4 ஐ சோதனை செய்து காட்டினர். சில வினாடிகள், ஒரே ஒரு 'கேள்வி' யே ஒரு கடவு சாவியின் 512 துகளிலிருந்து (bits) 508 துகள்கள் வரை பெற போதமானதாய் இருந்தது.

இப்போதைக்கு இதனால் ஆபத்து எதுவும் இல்லை. வல்லுனர்கள், கயவர்கள் இடையே பாதுகாப்பு - தாக்குதல் என்ற போட்டி நிலையே இப்போதைக்கு நிலவுகிறது. இத்தாக்குதலை கட்டுப்படுத்த ஏற்கனவே சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.
*
*
ஆதாரம் : சியான்ஸ் எ அவெனீர்
பிரஞ்ச் மாத இதழ்
மொழி பெயர்த்தது : மாசிலா.
.

14 ஜனவரி, 2007

ஐந்து சதுர செ.மீ துண்டு தாள் : இதுதான் புதிய மின்களத்தின் அளவு!

ஐந்து சதுர செ.மீ தாள் : இதுதான் புதிய மெல்லிய மாசற்ற மின்களத்தின் அளவு!

என்ன நம்ப முடியவில்லையா?

குழல் வடிவு, பொத்தான் வடிவு போய் இப்போது ஒரு மிகச்சாதாரண ஒரு துண்டு தாள் வடிவத்திற்கும் வந்துவிட்டது நாம் நிறையவே உபயோகிக்கும் மின்களங்கள். கண்ணுக்கு தெரியாமலும் மிகக்குறைந்த விலையிலும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாததாகவும் இது இருக்கும். இவைதான் பின்லேந்தின் 'Enfucell' என்ற ஒரு "ஸ்டார்ட்-அப்"இன் "SoftBattery"இன் சில திட்டங்கள். புதிய மின்களத்தின் தடிமன் 0,4 mm. இவ்வளவு மெல்லியதாக் இருக்கும் இக்களன் 1.5 Vஇலிருந்து 3V வரை மின்சாரம் அளிக்கவல்லது. இதைப்பற்றி 'Enfucell'இன் தலைமை நிர்வாகி திரு.Jaakko Happonen மேலும் கூறுவது :

இதன் தரங்கள் : விளையாட்டு இசை அட்டையை (fancy musical card) இரண்டு வாரத்திற்கு இயக்கும். ஒரு நுண்விளக்கை (LED) ஒரு மாதத்திற்கு இயக்கும். Radio chipsஐ இரண்டு வருடத்திற்கு இயக்கும். கடைசியாக் கூறப்பட்ட இந்த உபயோகத்திற்குத்தான் முக்கியமாக இக்களனை உற்பத்தி செய்வதில் முனைப்புடன் இருக்கிறார்கள். RFID எனப்படும் radio frequency identificationஇல் இது முக்கிய பங்காற்ற போகிறது. சிறிய விளம்பரங்களில், அழகு சாதன பொருட்களில் மேலும் மருத்துவ துறையிலும் இதன் உபயோகம் அதிகமாக இருக்கும். இவ்வளவு குறுகிய காலமே சக்தி தரும் இக்களன்களை காலியானபின் என்ன செய்வது? இந்த "SofBattery"ஐ தூக்கி சாதாரண குப்பையில் வீசிவிட வேண்டியதுதான். இதனால் சுற்றுப்புற சூழலுக்கு எந்த அபத்தும் இல்லையாம். களத்தின் கட்டமைப்பு : Zinc-dioxide de magnanese இல் ஆன இரண்டு தகட்டுக்கு இடையில் chlorure de zinc எனும் eloctrolyte பாவித்து உருவாக்கப்பட்டது.. இதை எரித்தாலும்கூட யாருக்கும் எவ்வித அபத்தும் இல்லையாம்.

இத்தொழிற்சாலையின் இலக்கம் 2007இல் 5,00,000 இருந்து 50.00.000 களன்கள் தயாரிப்பது. பல தொழிற்சாலைகளில் ஏற்கனவே முதல் முன்மாதிரிகளை வெற்றியுடன் சோதனைகள் செய்து முடித்த தருவாயில் தற்போதைக்கு யாராவது ஒரு நம்பகமான வாடிக்கையாளரின் வியாபார உத்தரவுக்கு காத்திருக்கிறாராம் திரு.Happonen. இதன் விலை முதல் 10.000 க்கு ஒன்றுக்கு ஒரு யூரோவாம் ( ரூ.56). இவ்விலை, மிகப்பெரிய அளவில் செய்ய உத்தரவு கொடுக்கப்பட்டால் ஒன்றின் விலை ஒரு 'செண்ட்' வரை (ரூ.0.56) இறங்குமாம்.

இக்கண்டுபிடிப்பிற்காக, உலக பொருளாதார மையத்தில் "Pionneer 2007" தகுதி பெற்று சிறப்பு வாய்ந்ததாம் 'Enfucell'.

ஆதாரம் : "Le monde" பிரஞ்ச் நாளிதழ். மொழிபெயர்ப்பு : மாசிலா.

RFID என்றால் என்ன?
உதாரண்த்திற்கு : இப்போது நாம் உபயோகிக்கும் கடன் அட்டையை தானியங்கி இயந்திரங்களில் செலுத்தி கடவுச்சொல்லை பதித்தால்தான் எல்லாம் நடக்கும். RFID முறைப்படி இப்படி நீங்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமோ, தானியங்கி இயந்திரத்தின் உட்செலுத்தி கடவுச்சொல்லை பதிக்க வேண்டியதோ இல்லை. கொஞ்சம் தூர இருந்தபடியே, செய்திகளை சேமித்து சரிபார்க்கும் ( contoler) மையத்தின் சற்று அருகில் நெருங்கினாலே போதும், தானாகவே சகல செய்திகளையும் சேகரித்து சரிபார்த்துக்கொள்ளும்.

எனது கருத்து :
பணக்கார நாடுகளைவிட, மக்கள் தொகை அதிகம் கொண்ட மேலும் பொருளாதார முன்னேற்றைத்தை நோக்கி வீறுநடை போடும் நம் இந்தியாவிற்கு இதனால் நிறையவே பலன் கிடைக்கும். உதாரணத்திற்கு : 'SoftBattery' பொருந்திய RFID அடிப்படையில் உருவான அந்தரங்க சேமிப்பு கிடங்கு (data base) அட்டை மூலம்,பேருந்து, புகைவண்டி போன்ற பொது நிலையங்களில் கூட்டங்களை நிர்வகிப்பது, மருத்துவமனை, தபால் தொடர்பு சாதன நிலையங்களில் கூட்டங்களை கட்டுப்படுத்துவது, மிகப்பெரிய விழாக்காலங்களில் ( உ : கும்ப மேலா) கட்டுக்கடங்கா மக்கள் கூட்டங்களை கட்டுப்படுத்துவது, பொது வேலை நிறுத்தம், சமூக கூட்டங்கள், போராட்டங்கள் கட்டுப்படுத்துவது, இதர பல வகையிலும் இது நமக்கு உதவியாக இருக்கும். நுகர்வோர் சமுதாயமாக் மாறிவரும் நம் இந்திய மக்களுக்கு இதனால் நிறைய நன்மைகள் உண்டு. ஒரு பொருள் எப்போது எங்கு தயாரிக்கப்பட்டது, அதன் விலை என்ன, உபயோக முடிவு காலம் என்ன என இன்னும் நுகர்வோர் அறியவேண்டிய பலவித முக்கிய செய்திகளையும் அடக்கி வைக்க முடியும். இதனால் தரமான பொருள் உணவு வகைகளை வாங்கி போலிகளை தவிர்க்கமுடியும். நிர்வாக, மற்றும் பாதுகாப்பு துறையிலும் இதன் பங்கு எல்லை இல்லாதது. பொறுப்பில் உள்ளவர்கள் கவனிப்பார்களாக!

நன்றி.
அன்புடன் மாசிலா.