10 செப்டம்பர், 2006

வாழ்க்கை என்பது ஒரு தீரச்செயல்!

சகோதர, சகோதிரிகளே! தோழர்களே! பெரியர்வகளே! இளைஞர்களே! மதம், மாயம், மந்திரம், ஆத்மா, வேதம், சாத்திரம் எனபோன்ற பல இனம்புரியா வார்த்தைகளால் உங்களை வலைத்துப்போட வெறியுடன் காத்திருக்கும் கும்பலிடம் சிக்கிவிடாமல் கவனமுடம் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். கண்டதை சொல்லி அதை உண்மை என நம்பவைத்து, ஏமாற்றி, பயமுறுத்தி மூளையை குழப்பி உங்களை எதற்கும் இலாயக்கற்ற ஜடமாகவும், இயந்திரமாகவும், பைத்தியக்காரணாகவும், வெறி பிடித்தவனாகவும் மாற்றி, மீதமுள்ள வாழ்நாள் பூராவும், அட்டைப்பூச்சி மாதிரி உங்கள் வாழ்க்கையில் அவர்கள் ஒட்டிக்கொண்டு உமக்கு தெரியாமலேயே உமது வாழ்க்கையை அவர்கள் உறிந்து குடித்துக்கொண்டிருப்பார்கள். கடைசியில், கொஞ்சம் சிந்தித்து பார்த்தால், அவர்களுக்காக நீங்கள்தான் இதுநாள் வரைக்கும் வாழ்ந்துவந்துகொண்டு இருக்கிறீர்கள் என்ற கேவலமான் உண்மையை அறிந்து வெட்கத்தி தலை குனிவீர்கள். இதே நேரத்தில், உங்கள் வாழ்க்கையை அவர்கள் திருடி, உங்களுக்கு பதில் அவர்கள் வாழ்ந்து வாழ்ந்துவந்துகொண்டு இருப்பதை கண்டு அவமானப்படுவீர்கள். வெட்கத்தில், ஐயகோ, இதுநாள்வரை ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோமே என் அழுது புலம்பிக்கொண்டிருப்பீர்கள். சகல மரியாதைகளுடன், அனைவரின் ஆதரவுடன் கதை கச்சேரியுடன் தைரியமாய் பட்டப்பகலிலேயே உன எதிரிலேயே உன் வீடு புகுந்து உன் வாழ்க்கையை திருடும் நயவஞ்சக கும்பல் கூட்டம் இது.

என் சமுதாயமே, உனக்கு இந்த தண்டனை தேவையா?

சமுதாயமே, நீ வாழ்ப்பிறந்தவன்(ள்). வாழ்க்கையை பற்றுடன் நேசி, ருசி, பழகு, அனுபவி, ஆனந்தப்படு, காதலி, அன்பு காட்டு, அரவணை, கொஞ்சு, தவழு, இன்பமுடன் இரு, சுதந்திரமாக இரு, அனைவரையும் மதி, ஆற்றலுடன் செயல்படு, புத்தியை கூராக்கு, வீரமுடன் இரு! உன் வாழ்க்கைமுறையை நீதான் தேர்ந்தெடுக்கவேண்டும். இந்த பொறுப்பை உனக்காக மற்றவர் யாரிடத்தும் ஒப்படைத்துவிடதே! வீணாக ஏமாத்துதான் போவாய். நீ வாழ தகுதியான சமுதாயத்தை, நீயே தேர்ந்தெடு! உன்னை சுற்றிலும் நல்ல சமுதாயத்தை உருவாக்கு. மற்றவர்களின் கட்டளைகளுக்கு உட்படாதே! நீ யாருக்கும் அடிமை அல்ல! நீ எடுப்ப்துதான் முடிவு. அது என்றுமே நல்ல முடிவு. தயங்காதே மாறுவதற்கு. இதுவே தக்க தருணம். இன்றே செய், அதை நன்றே செய்! காலத்திற்கு தகுந்தாற்போல், நீயும் மாறிக்கொண்டுவா. இல்லையென்றால், காலம் உன்னைவிட்டு வெகுதூரம் போய்விட்டிருப்பதை பார்த்து புலம்பிக்கொண்டிருப்பாய்!

விழித்துக்கொள்ள இதுவே நேரம்! வாழ்க்கை என்பது ஒரு போரல்ல! அது ஒரு தீரச்செயல். இதில் சோம்பேறிகளுக்கும், கோழைகளுகும் இடமில்லை! இதில் வெற்றிபெற உனக்கு போரும் செய்யத்தெரியவேண்டும் என்பது பல தகுதிகளில் ஒன்றே!

நீ வாழ்கிறாய்! வெற்றி பெறுகிறாய்! இன்புடன் இருக்கிறாய்! வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறாய்! அன்புடன் இருக்கிறாய். அனைவரையும் நேசிக்கிறாய்! மனத்தெளிவுடன் இருக்கிறாய்.

நீதான் மனிதன்! நீயே என் நண்பன். நீ என் தோழன். நீ என் சகோதரன். நீயே என் தலைவன்.நீ வாழ்க! உன் குலம் வாழ்க!

உனக்காக : மாசிலா!

கருத்துகள் இல்லை: