"நிர்வாணம் என்பது பக்தியின் ஒரு நிலை..." : இது தவறு.
இதுதான் சரி : அது பைத்தியக்காரத்தனம். மூட நம்ம்பிக்கையின் உச்சம்!
"அதாவது நிர்வாணம் என்பது உடலை வெளிக்காட்டும் நிர்வாணம் அல்ல... " இது தவறு.
இதுதான் சரி : மக்களை ஏமாற்ற கூறப்படும் பொய்தான் இது. உடலின் அடிப்படையில்தான் உள்ளம் உருவாகிறது. உடல் வேரு உள்ளம் வேறு என நினைப்பது முட்டால்தனம். உடல் இல்லாமல் உள்ளம் இல்லை. 'உடல், உள்ளம், ஆதமா, ஆவி வேறெங்கோ' என்றால், நம் எதிரில் நிர்வாணமாக நிற்பவன் ஒரு நடை பிணமே!
"உடல் என்பது ஒரு கூடு.... " இது தவறு.
இதுதான் சரி : இத்தற்கால உலகில் வாழ்த்தகுதியற்ற மனம்-உடல் பலவீணமடைந்த மன நோயாளிகள். தங்கள் கையால் ஆகாத்தனத்தையும், பைத்தியக்காரத்தனத்தையும், ஆண்மையின்மையையும், கோழைத்தனத்தையும் மறைக்க பூசப்பட்ட சாயம். தரம் கெட்டவர்கள், எதற்கும் லாயக்கு அற்றவர்கள் என சமுதாயம் தங்களை ஒதுக்கிவிடுமோ என பயந்து, இவர்கள் போட்டிருக்கிற வேஷம். ஓசியிலேயே, உழைக்காமல், பொறுப்பேதுமில்லாமல் உடல் வளர்ப்பதற்கு இவர்கள் உருவாகிய தந்திரம்.
"இந்த உலகில் தங்கித்திரிவதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட கூடு.. " இவரகளே தங்களை வெரும் ஜடம், பொருள் என் ஒப்புகொள்கிறார்கள், பைத்தியங்கள்.
"உடல் என்பது நிரந்தரமல்ல... " தவறு.
இதுதான் சரி : இவர்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் பயந்தவர்கள். ஆண்மை இழந்தவர்கள். மனப்பிரம்மை பிடித்தவர்கள். பட்டப்பகலிளேயே கணவுகண்டு பிணாத்துபவர்கள்.
"ஆனால் ஆன்மா என்பது இப்பூவுலகின் ஆசைகள் என்ற ஆடைகளைக் களைந்து எந்த பற்றும் இல்லாத ஒரு பேரானந்த நிலையை அடையும் முன் ஏற்படுகிற மன நிலையைத்தான் நிர்வாணம் என்கிறார்கள்....." : இது தவறு.
இதுதான் சரி : இவர்கள் இந்த மதிகெட்ட அடிவாடித்தனத்தால் சாதாரண மக்களின் மூளையைக்குழப்பி, இவர்களது 'மன தொத்து நோயை' அவர்களுக்கு தொத்தவைத்து ஒழுங்காக பற்றுடன் வாழ்ந்தவர்களை தத்தம் வாழ்க்கையில் வெறுப்படைய வைத்து, பாதி பைத்தியக்காரர்களாக்கி, கடைசியில் " எங்களை நம்பி, தாங்கி, உணவிட்டு, கழுவி, அரவணைது, பாதுகாத்தும் வந்தால்தான் உங்களுக்கு மோட்சம்" என நமபவைத்து ஓசியில் உலாவரும் அழையா விருந்தாளிகள். உணர்ச்சியற்ற் வெறு கட்டைகள்.
இவர்களைபோல் எதிலும் பற்றில்லாமல் சமுதாயத்தைத்தின் ஓரத்தின் வாழ்பவர்கள் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். தங்கள் கொள்கைகளுக்காக கொலையும் செய்யத்துணிய தயங்காதவர்கள். இது வெறும் மதப்பிரச்சினை அல்லது கொள்கை பிரச்சினை மட்டுமல்ல. இவர்களது சாப்பாட்டு பிரச்சினையும் கூட. ஏனென்றால், பொது சனங்கள் இவர்கள்மீது நம்பிக்கை இழந்துவிட்டால், அப்புறம் சோற்றுக்கு இவர்கள் எங்கு போவது?
தங்களை தானே துன்புறுத்தி வாழ்வதில் இன்பம் காண்பவர்கள் (masoisme). கூர்ந்து கவனித்தால், இவர்கள் முழு அத்தனைக்கும் ' தேர்ந்த சுயநலவாதிகள்' என்பது விளங்கும். 'சதா தன்துன்புறுத்தல் இன்பநிலை (masoisme) யில் இருக்கும் இவர்களுக்கு, பிறர் துன்புறுத்தல் இன்ப (sadisme) யில் மாறுவதற்கு உள்ள எல்லை மிகவும் குருகியது.'
ஆகவே, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படவேண்டியவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக