நான்கு சுவர்களுக்குள் நடக்கவேண்டிய சங்கதிகளை, அவர்களுக்குள் எப்படி வேண்டுமானாலும் தங்கள் இட்டப்படி எதைவேண்டுமானாலும், எவர்கூட வேண்டுமானாலும் எவ்வளவு நாழி வேண்டுமானாலும், எதை நம்பியும் உணர்ச்சியின் உச்சத்தை அடைவது அவரவர் விருப்பம், கண்ட வழி. இதில் எத்தனை எத்தனையோ இரகங்கள் உண்டு. விதங்களும் உண்டு. விநோதங்களும் உண்டு. தனிமையிலும் கூட சாத்தியம். இதை வெளிச்சம் போட்டு, சத்ததுடன் செய்தால் மற்றவனுக்கு தொந்தரவு.
இது அனைவருக்கும் பொருந்தும்.
உன்னுடைய நம்பிக்கைகளை மற்றவர்களுக்கு தினிக்காதே. நீ எப்படி எதையோ நம்பி காலத்தை தள்ளுகிறாயோ, அதைப்போல் மற்றவர்களும் அவர்கள் இட்டத்திற்கு எதையோ நம்பி மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களை வாழ்விடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக