17 ஜனவரி, 2007

2033 இல் சீனாவின் மக்கள் தொகை 150 கோடி.

ஆண்டு 2033 இல் 150 கோடி மக்கள தொகையை எட்ட இருக்கும் சீனா, தொடர்ந்து அதிகரித்துவரும் மக்கள்தொகை, ஆண்-மெண் எண்ணிக்கையில் அபரீத இடைவெளி, அளவுக்கு மீறி அதிகரித்து வரும் கூலி-கைவேலை தொழிளாலர்கள் மேலும் வயது முதிர்ந்து வரும் மக்கள் ஆகியனவையே சீனாவின் எதிர்வரும் சமுதாய-பொருளாதார முக்கிய சவாலாக இருக்கும்.

அரசின் மக்கள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு நிர்வாகக்குழு அளிக்கும் அறிக்கையின்படி இவர்களுடைய "ஒரு குடும்பம்-ஒரு குழந்தை" திட்டத்தினால் 40 கோடி குழந்தைகள் பிறப்பது தவிர்க்கப்பட்டன என்று பெருமிதம் அடைகின்றனர். 1970இல், பெண் ஒருவருக்கு 5,8 குழந்தைகள் என்ற விகிதத்தில் இருந்தது இப்போது 1,8 என்ற விகிதத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இருந்தும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் மக்கள்தொகை மறுபடியும் அதிகரிக்கும் போக்கு தலைதூக்கி இருப்பதால், அதிகாரிகள் புதியமுறைகள் மற்றும் புதிய திட்டங்கள் மூலம் மக்கள் பெருக்கத்தை குறைக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கின்றனர்.

கடும் பாதகங்களை உண்டுபண்ணியிருக்கும் 'ஒரு குடும்பம்-ஒரு பிள்ளை' திட்டத்தைப்பற்றியும் அறிக்கையாளர்கள் சாடியிருக்கின்றனர். இப்போதைய மக்கள்தொகையில் 14,3 கோடி ஆக, அதாவது 11%, இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 2040இல் 43 கோடி ஆக, அதாவது 30% ஆக இருப்பர். இந்த அபரீத மாற்றத்தினால் இவர்களுக்கான அதிகப்படி சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் ஆகிய தேவைகளுக்கு நிறைய நிதிகள் ஒதுக்கவேண்டி உள்ளது. தற்போதைக்கு நகரங்களில் வசிக்கும் ஒருசிலரே இதில் பயணடைகின்றனர்.

'ஒரு குடும்பம்-ஒரு குழந்தை' திட்டத்தால் சட்டத்துக்கு புறம்பான, ஏகப்பட்ட கரு கலைப்புகள் நடந்தேறி வந்தன. முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் இரண்டாவதாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் வசதியாலும் மேலும் பெண் சிசுக்கரு கலைப்பினாலும் 2020ஆம் ஆண்டில் 3 கோடி வாலிப ஆண்கள் திருமணம் செய்துகொள்ள பெண் இல்லாமல் தவிப்பர். இதனால் உருவாக இருக்கும் சமுதாய பிரச்சினைகளை சமாளிப்பதற்கு மக்கள் பெண்குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொள்ள அரசு ஊக்குவிக்க வேண்டும் எனவும் அறிக்கை கூறுகிறது. 2005ஆம் ஆண்டில் 118 பையனுக்கு 100 பெண் என்ற விகிதம் இப்போது சில மாகானங்களில் 130/100 என்ற விகிதத்தை எப்போதே தாண்டிவிட்டது.

வரும் 20 வருடங்களில், 30 கோடி சீனர்கள் கிராமப்புறம்-உள்ளூர்களில் இருந்து நகரத்திற்கு குடி பெயர்ந்துவிடுவார்கள். இதனால் உண்டாக இருக்கும் சமூக பொருளாதார, சுற்றுப்புற சூழல் பிரச்சினைகள் ஆகியவைகளை சமளிப்பதே இன்னுமொரு கடுமையான சவாலாக இருக்கும். வேலை செய்கிற வயது தகுதி உடைய மக்கள் (15-64 வயது) 86 கோடியிலிருந்து 2016ஆம் ஆண்டு 101 கோடியாக இருக்கும். அதாவது உலக மொத்த வளர்ந்த நாடுகளின் அனைத்து வேலையாளர்களின் தொகைக்கு ஈடானது.
ஆதாரம் "Le monde" பிரஞ்ச் நாளிதழ்.
மொழி பெயர்த்தது மாசிலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக