ஆசியா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசியா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஜூலை, 2010

ஏற்றுமதி முதலைகளின் பண கொழிக்கும் மாயாஜால முறைகள்!

இந்தியா, சீனா அல்லது பிரேசில் போன்ற நாடுகளில் ஏற்றுமதி முதலாளிகள் ஒன்றை மூன்றாக்கி மூன்றை ஒன்றாக்கும் புதுவித மாயஜால வித்தைகள் எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

முதலில் ஆப்ரிக்கா, ஆசிய அல்லது அதை ஒட்டிய தீவு ஏழை நாடுகளில் ஏதாவது ஒருவர் பெயரில் ஒரு ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம் ஒன்றை திறக்கவேண்டும். இதை EXIM-MAURITIUS என்றழைப்போம். இந்த இடத்தில், தக்க நாட்டினர் நிறுவனம் திறப்பாளர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்குவதை கவனத்தில் கொள்வோம்.
பிறகு உற்பத்தியாகும் இந்தியா, சீனா அல்லது பிரேசில் நாட்டில் மேலும் நாம் அறிந்தவரை இந்தியாவின் special economic zone (SEZ) போன்ற அபார வரி சலுகைகள் பெற்ற துறை ஒன்றில் EXIM-ASIA என்ற வேறொரு நிறுவனத்தையும் செயல்படுத்துவோம். வெவ்வேறு பெயரில் இருக்கும் EXIM-MAURITIUS மற்றும் EXIM-ASIA நிறுவன பொறுப்பாளர்கள் ஒருவரே அல்லது ஒரே குடும்பத்தினராக இருக்கக்கூடாது என்று எந்த சட்டமும் கூறவில்லை. எனவே, இங்கு கிடைக்கும் அபாண்ட சலுகைகள் மூலம் மிகக்குறைந்த விலைகளில் தானியங்கள் அல்லது இதர வகை பொருட்கள், கனிமங்கள், மருந்து வகைகள் எதுவாக இருந்தாலும் அவைகளை முதலில் EXIM-MAURITIUS க்கு ஒரு டன் ஒரு இலட்ச கணக்கிற்கு ஏற்றுமதி செய்வோம். (இந்திய) உள்நாட்டு வரி அலுவலகங்கள் அனைத்திற்கும் இதைதான் அடிப்படை கணக்காக தெரிவிக்கப்படும். பிறகு EXIM-MAURITIUS வந்துசேரும் இச்சரக்கினை அங்கிருந்து EXIM-EUROPE இற்கு ஒரு டன் மூன்று அல்லது நான்கு இலட்சம் விலைக்கு விற்போம். இதுவும் அதே EXIM-ASIA உரியாளருக்கோ அல்லது குடும்பத்தினர் ஒருவருக்கோ சார்ந்த்தாக கூட இருக்கலாம். இதில் பிரயாண ஏற்பாடுகள், இதர செலவுகள், கூலிகள், சகலவித வரிவகைகள் எல்லாம் ஒரு இலட்சம் போக கையில் இலாபம் இரண்டு அல்லது மூன்று தங்கும். அதிகபட்ச இலாபத்தை எந்த நாட்டு வரி அலுவக கண்கானிப்புக்கும் அகப்படாமல் அதாவது கண்டும் காணாமல் இருப்பதால், இதை சுவிஸ் வங்கி ஒன்றின் மர்ம கணக்கில் போட்டுவிட வேண்டியதுதான். இப்படியும் பல பண்ணாட்டு முதலைகள் சுலப வழிகளில் நிறைவே பணம் கொழித்து வருகிறார்கள்.

இதுவே மேற்சொன்ன மாயாஜால வித்தைகள்.

19 ஜனவரி, 2010

சீன திரை அரங்குகளிருந்து வெளியேறும் அவாத்தார்! ஏன்?

கடந்த 4ஆம் தேதி சீன திரை அரங்குகளில் வெளிவந்த அவாத்தார், மற்ற எப்போதும் இல்லாத அள்விற்கு மிக பிரம்மாண்ட வரவுகளை கொடுத்து புதிய சாதனை நிகழ்த்தி இருக்கிறது. பீக்கிங்கின் முக்கிய மூன்று IMAX 3D அரங்குகளில் கடந்த 59 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வெளியில் நீண்ட வரிசையில் காத்து நின்றும் மக்கள் படத்தை பார்த்து சென்றனர்.

சீன இயக்குனர் லியு சுயான் கூறுகையில், "இப்படமானது சீனாவின் அனைத்து திரைப்பட தயாரிப்பாள்ர்களுக்கும் தங்களது பின்தங்கிய சீன சினிமா உலகின் மிகப்பெரிய ஒரு தோல்வியின் அடையாள்த்தையே நினைவுபடுத்தும் சின்னம்" என்றார். "இது எந்த அளவிற்கு எங்களது அனைத்து சீன சினிமா உலகமானது உண்மை, அழகு, தூய்மை போன்ற மிகச்சாதாரண நிலைகளை விட்டு வெகு தூர விலகி இருக்கிறது என்பதை எங்களுக்கு சவுக்கடியுடன் உணர்த்துகிறது" என்றும் கூறினார். மொத்தத்தில், இப்படத்தின் திறமைகள் அருகில் சீன முழு சினிமா உலமும் ஒரு பூஜ்ஜியம் என சொல்லாமல் சொன்னார்.

ஆனால், இப்பிரமிக்க வைக்கும் அவாத்தார் பட வெற்றியானது சீன மைய அரசினை கொஞ்சம் ஆட்டம் காணவும் வைத்து விட்டது. இதனால், 3D அல்லாத புற நகர் மற்றும் தூரத்து ஊர் அரங்குகளில் 2D ஆக அதிக அளவில் காட்சி இட்ப்பட்ட இப்படங்களை விலக்குமாறு சீன அரசாங்கம் உத்தரவு இட்டுவிட்டது.


avatar2.1263902442.jpgபிப்ரவரி கடைசிவரை காட்சியிடப்பட வேண்டிய படத்தை இவ்வளவு அவசரமாக சீன அரசாங்கம் விலக்கியதின் பின்புலம் என்ன?

இப்படம் உள்நாட்டு தயாரிப்பு படங்களை பின்னுக்கு தள்ளி அளவுக்கு மிகுந்த வசூலை அள்ளியது மட்டும் ஒரு காரணமிலலை. இதில்லாமல், பொருளாதார வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம் என்கிற பெயரில் சீனாவில் கடந்த சில பத்தாண்டுகளாகவே சாதாரண குடிகள், விவசாயிகள் அவர்களது மண்ணிலிருருந்து அகற்றப்பட்டும், அவர்களது மண், நிலங்களை அரசின் பக்க பலத்துடன் பன்முக கட்டிட கட்டுமான முதலாளிகளால் அராஜக முறையில் பலவந்தமாக பறிக்கப்பட்டு வருவதை நினைவு படுத்தும் வகையில் அவாத்தார் படத்திலும் சில காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. கடந்த சில வாரங்களாக சீன வலைப்பதிவாளர்கள் சிலர் இவ்விரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பல வாதங்களை முன்வைத்து எழுதியும் வருகின்றனர். இதனால், சட்ட அமைதிக்கு ஏதும் கேடு வந்துவிடக்கூடாதே என அஞ்சிதான் சீன மைய அரசு இவ்வித அவசர முடிவுகளை எடுத்திருக்கிறது என யூகிக்கிப்படுகிறது.

சீன புகழ்பெற்ற வலைப்பூ பதிப்பாளர் ஹான் ஹான் கூறுகையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள மக்களிடம் இருந்து அடாவடித்தனமாக அவர்களது மண்ணை பிடுங்கி நிலங்களை கையகப்படுத்தி மண் நிலமற்ற அநாதைகளாக அலையும் காட்சிகள் ஒன்று சீனாவிலும் மற்றது இவ்வுலகை அற்ற தூரத்து கிரகங்களில் மட்டும்தான் நடக்க வாய்ப்பு உள்ளது என மக்கள் நம்ப இடமுள்ளது என்றார் (இந்தியாவிலும் நடக்கும் இதை போன்ற அநியாயங்கள் அவருக்கு தெரியாததை மன்னித்துவிடுவோம்)

தற்போதைக்கு, அகண்ட சீனா முழுவதிலும் உள்ள சற்றே 550 _ 3D அரங்குகளில் மட்டும்தான் இப்படம் முன் குறிப்பிட்ட தேதிவரையில் ஓடும். அதாவது ஆடம்பர வசதி படைத்த மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே. இதன் மூலம், சாதாரண அதிகபட்ச அடித்தள மக்கள் இப்படத்தை பார்த்து தங்களது பரிதாப நிலைகளை இன்ங்கண்டு ஒப்பிட்டு எவ்வித மன எழுச்சி அல்லது போராட்ட முயற்சிகள் துளிர்விடுவதை அடியோடு தவிர்த்து தடுக்கப்பட்டன.

நன்றி : Le Monde / French News Paper.

இதுவே நம்ம அகண்ட சீனாவின் பயந்தாங்கொள்ளி கொள்கை.

(எப்படியோ! அனைத்து சீன் அடித்தள மக்களும் எழுச்சி கண்டு சீனா முழுதிலும் புரட்சிகள் வெடித்து நாடு சின்னாபின்னமானால், இந்தியாவிற்கு நல்லது.தான். யார் கண்டது? அது போன்ற வேளைகளில், தேச ஒற்றுமை கருதி இந்திய் மீது வேண்டுமென்றே (பொய்) போர் தொடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. எவ்வளவு காலம்தான் பொய் கம்யூனிசத்தை வைத்து மக்களை ஏமாற்ற முடியும். என்றாவுது ஒரு நாள் உண்மை உலகிற்கு சீன மக்கள் வந்தே தீரவேண்டும்.)

26 டிசம்பர், 2009

எழுத்தாளர் பேராசிரியர் லியு க்சியாபூ சிறையடைப்பு : மக்களாட்சி மறுக்கும் சீன கம்யூனிசம்!

பதினொன்று ஆண்டுகால கடும் சிறை : இவைதான் இம்மாதம் டிசம்பர் 25 வெள்ளியன்று பிரபல சீன சிந்தனையாளர் எழுத்தாளர் பேராசிரியர் லியு க்சியாபூ (Liu Xiabou) அவருக்கு, தான் சீன அரசாங்கத்தை எதிர்த்து ஆட்சி கவிழ்ப்பு எண்ணத்துடன் கலகம் செய்த குற்றத்திற்காக தண்டனையாக விதிக்கப்பட்டது.

ஆண்டு 2008 டிசம்பர் 8 அன்று முதல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருந்த இவர், நாட்டின் நீண்ட கால கம்யூனிச அடாவடித்தன ஒருமுனை ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, சனநாயக மக்களாட்சி மலர 19 துணிகரமான கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கை எண் 8 இன் துணை எழுத்தாளர் ஆவார். ஜூன் 2009 இல் முழுதும் குற்றம் சாற்றப்பட்ட இவருக்கு அதிகபட்சம் பதினைந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள் இருந்தன.

குற்றவியல் சட்டங்கள் 1977ல் மாற்றி அமைக்கப்பட்டதிலிருந்து, வெறுமனே தனது சொந்த கருத்துக்களை வெளிப்படுத்தி ஒரே காரணத்திற்காக தனி ஒரு கொள்கை எதிர்ப்பாளருக்கு இவ்வளவு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாக சீன சட்ட நிபுணர் வட்டாரங்கள் கருதுகின்றன.

1 ஆகஸ்ட், 2009

மனித உரிமை பாதுகாப்பு குழுவினர் மீதான சீனாவின் அடக்குமுறை!

சீனாவின் வீரிய ஆற்றல் படைத்த மனித உரிமை பாதுகாப்பு குழு சட்ட வல்லுனர்கள் மீது சீனா மேலும் மேலும் அளவுகடந்த அடக்குமுறைகளை பிரயோகித்து வருகிறது.

சீனாவின் மனித உரிமை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சட்ட வல்லுனர்களின் இயங்கு தளமாக கருதபட்ட, கடந்த ஜூலை 17 அன்று அரசு அதிகாரிளால் மூடப்பட்டதுமான 'கொங்மெங்' அமைப்பின் நிறுவனர்களின் ஒருவரான 36 வயது 'க்சு ஜியோங்' பீக்கிங்கில் ஜூலை 29 அன்று விடியற்காலை கைது செய்யப்பட்டார்.

'கொங்மெங்' அமைப்பின் நிதி கணக்குகளி்ல் சில பிணக்குகள்(?) பெயரில் வருமானவரி அலுவலகம் ஜூலை மாத இடையில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக கடந்த வெள்ளிக் கிழமை இவ்வமைப்பின் சட்டபூர்வ பிரதிநிதியான 'க்சு ஜ்யோங்' வருமானவரி அலுவலகத்திற்குநேரில் சென்று ஆஜர் ஆகியிருக்க வேண்டும் என அமைப்பு சார்பு வக்கீல் 'லி க்சியோங்பிங்' கூறினார்.

எய்ட்ஸ் மற்றும் ஹெபாடிடிஸ் (Hepatitis) நோயாளர்களை தீண்டப்படாதவர்களாக கருதும் சமுதாய மனப்போக்கினை கண்டித்து எதிர்த்து போராடும் மற்றுமொரு அமைப்பான 'இ ரென் பிங்' (Yi Ren Ping) சங்கத்தின் அலுவலகங்களையும் ஜூலை 29 அன்று காவல் துறையினர் முற்றுகையிட்டு அனைத்து கோப்புகளையும் கைப்பற்றினர். இச்சங்கமானது கலப்பட பால் மாவு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பாக 'கொங்மெங்' அமைப்புடன் சேர்ந்து நீதிக்கு வாதாடியது.

'கொங்மெங்'கிற்கு ஜூலை 14 அன்றைய தேதியில் வருமான வரி அலுவலகத்திலிருந்து 1,4 மில்லியன் யுவான் (1,9 மில்லியன் ஈரோ) வருமானவரி பாக்கி தொகை கேட்டு வந்த ஒரு கடிததிலிருந்துதான் முழு பிரச்சினையும் ஆரம்பித்தது. இக்கடிதம் கிடைத்த மறுநாள் 'க்சு ஜியோங்' வெளியிட்ட அறிக்கையில் இதனை 'அடாவடி நடவடிக்கை' என குறிப்பிட்டார்.

அமெரிக்கவின் 'யால்' சட்டக்கல்லூரியின் தானத்திலிருந்து பெறப்பட்ட 'கொங்மெங்'கின் வருமானத்தின் நிதிக்கணக்குகள் வருமான வரித்துறையினருக்கு போதிய வேளைகளிகல் சரிவர சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதை தவிர, குறிப்பிட்ட திட்டங்களுக்கு என்று இன்னும் ஒதுக்கப்படாத ஒரு சில முன்பணத் தொகைகள் மட்டுமே இன்னும் கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தது என்றும் அவர் கூறினார்.

அரசாங்க உத்தரவு பெறாத அன்னிய கூலிகளின் அரசு சார்பற்ற அமைப்பாக 'கொங்மெங்' செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டின் பெயரில்தான் ஜூலை 17 அன்று காவல் துறையினர் இதன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


சீனாவின பலதரப்பட்ட அரசு சார்பற்ற அமைப்புகளைப் போல 'கொங்மெங்' ஒரு சட்ட அலோசனை வழங்கும் தளமாக பதியப்பட்டிருக்கிறது. இதன்படி, 2003 இல் 'கொங்மெங்' வியாபார தொழில் நோக்கற்ற அமைப்பாகவே பதியப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஓராண்டு கழித்து அரசு அதிகாரிகள் இதனை மூடும்படி உத்தரவு போட்டிருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே 'கொங்மெங்' சட்டவல்லுனர்கள் பலதரப்பட்ட முக்கியம் வாய்ந்த பொது வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வாதாடி வந்துள்ளனர். கலப்பட பால் மாவு வழக்குகள் மட்டுமல்லாது, காவல் துறையினரின் பொதுமக்கள் மீதான அத்துமீறிய அடாவடி செயல்களை எதிர்த்தும், 'பாலுன் கோங்' (Falun Gong) சார்பு மத குழுவினர் சார்பாகவும், திபெத்தியர்கள் சார்பாகவும் பலவகைப்பட்ட விவகாரங்களில் சட்ட ஆலோசனைகள் தந்தும் சார்பான வழக்குகளில் வாதாடியும் வருகின்றனர். சமீபத்தில், சீன அரசாங்கம் அனைத்து கணினிகளிலும் கட்டாயமாக நிறுவப்போகும் கட்டுப்பாட்டு-கண்கானிப்பு மென்பொருள் திட்டத்தை எதிர்த்தும் இவ்வமைப்பு குறல் கொடுத்தது. ஜூன் மாத வாக்கில், மிகுந்த கேள்விக்குள்ளான திபெத்தின் சீன பொருளாதர வளர்ச்சி சம்பந்தமாக மிகவும் கவலைக் குறிய ஒரு விசாரணைக் கட்டுரையையும் 'கொங்மெங்' வெளியிட்டிருந்தது.

இதை எல்லாம் சகித்து கொள்ள முடியாத சீன அரசு 'கொங்மெங்' கை அடக்கி அச்சுறுத்தி மொத்த மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகளையும் நசுக்கி வருகிறது. அரசாங்கத்தின் எல்லை மீறிய அழுத்தம் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே இவை போன்ற இருபதுக்கும் அதிகமான அமைப்புகள் மற்றும் இதன் கிளைகள் தங்கள் பதிவு பத்திரங்களை புதுப்பிக்காமல் விட்டுவிட்டன.

இவ்வமைப்புகளை சேர்ந்த அங்கத்தினர்கள் சிலரை அரச பாதுகாப்பு குழுக்கள் ஆள் கடத்தல் செய்தும் மிரட்டி வந்தனர். இப்படித்தான் 2008இல் 'கொங்மெங்'இன் மற்றுமொரு நிறுவரான 'டெங் பிஅஓ' கடத்தப்பட்டார்.

சட்ட வல்லுனரும் 'பீக்கிங்'கின் தொலை தொடர்பு பல்கலை கழகத்தின் சட்டத்துறை பேராசிரியரும், 'பீக்கிங்'கின் 'ஹைடியன்' நகர மக்கள் அவை பிரதிநிதியுமான 'க்சு ஜியோங்' சதா எப்போது களங்களில் இரங்கி பாதிக்கப் பட்டவர்களின் விசயங்களை தொடர்ந்து சேகரிப்பதிலேயே மும்முரமாய் இருப்பார்.

அகிம்சை கொள்கையை பின்பற்றும் இவர், இவரது மற்ற சில சக போராளிகள் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் 'பீக்கிங்'கின் "மர்ம சிறை"யின் காவலர்களை எதிர்த்தும் அவர்களின் கோபத்திற்கு ஆளானதும் உண்டாம்.

நீண்ட காலமாகவே அதிகாரிகள் இது போன்ற அரசு சார்பற்ற அமைப்புகள் அனைத்தையும் முக்கியமாக 'கொங்மெங்' போன்ற அமைப்புகளை அரச இயந்திரத்தின் கட்டுப்பாட்டை மீறி வருவதாகவும், மேற்கத்திய நாட்டு கூலிகள் தயவில் செயல்படுவதாகவும் கருதி வந்தனர். மேலும் இவை போன்றவைகளின் நடவடிக்கைகளினால், நாட்டில் புதிதாக 'நிறப்புரட்சி' (Color revolution) உருவாக வாய்ப்பு இருப்பதாக அரசாங்கம் நம்பி வருகிறது என்றும் 'கொங்மெங்'கை நெருங்கிய மற்றுமொரு அரசு சார்பற்ற சட்ட வல்லுணரான 'லி பாங்பிங்' விளக்கினார்.

ஆதாரம் : லெ மோந் (www.lemonde.fr)

15 ஜூலை, 2009

தறி கெட்டு ஓடும் சீன பொருளாதாரத்தி்ன் அத்துமீறல்கள்.

சீனாவின் பொருளாதார நிபுணர்களின் இன்றைய கணிப்புகள் மற்றும் புள்ளி விபரங்கள் என்னதான் நமக்கு மன நிறைவு தரும்படி இருந்தாலும், இவை அத்தனையும் சீன அதிகார வர்க்கம் வெளி உலகத்திற்கு காட்ட விரும்பும் உண்மைக்கு புறம்பான ஒரு செயற்கை அழகிய தோற்றத்தைத்தான் வெளிக்காட்டுகின்றன. உண்மையில், சீனச் சமுதாயத்தின் பலவகைப்பட்ட சமூகங்கள், பலதரப்பட்ட வகுப்புகள் சார்ந்த பொது மக்களின் அனுபவ கருத்துக்களின்படி, அரசு சார்பற்ற பொருளாதார வல்லுனர்கள், பத்திரிகைகள் கணிப்புப்படி், தொழில் வர்க்கங்கள் ஆகியவைகளின் மதிப்புப்படி சீனாவின் இன்றைய பொருளாதார நிலமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவே தெரியவருகிறது.

இப்படியாக, வீட்டு‍‍‍‍‍மனைகள் துறையில் ஒரு பெயர்பெற்ற எழுத்தாளரும் நிபுன‌ருமான 'நியு தஒ' கூற்றின்படி, இத்துறையில் சீனா ஏனைய மேற்கத்திய நாடுகளைவிட படு மோசமான நிலையில் இருப்பாதாக தெரியவருகிறது.
உண்மையில் சொல்லப்போனால், உலகத்தி்ன் மற்ற நாடுகளின் பொருளாதார பின்னடைவுகளைவிட சீனாவின் பொருளாதார பின்னடைவின் நிலமை படுமோசமாக இருக்கிறது.


1. சீனாவில் வேலை இல்லா பிரச்சினை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது முற்றிப்போய் உச்சகட்ட நிலையை அடைந்திருக்கிறது. ஆனால், அரசு சார்பு அதிகாரப்பூர்வ கண‌க்கெடுப்பு அமைப்புகள் வேண்டுமென்றே இதையெல்லாம் தங்கள் புல்லிவிபராங்களில் சேர்த்துக்கொள்ளாமல் தவிர்த்துவ்ருகின்றன.

உதாரணத்திற்கு, நகரங்களில் உழைக்கும் 140 மில்லியன் நாட்டுப்புற‍த்தவர்களில், 60 மில்லியன் உழைப்பாளர்கள் வேலையை இழந்து விட்டனர். வேலையை இழந்தபின் நகரத்தைவிட்டு தங்களின் சொந்த கிராமங்களுக்கு திரும்பி போய்விடுவதனால், நகரங்களின் வேலையில்லா பிரச்சினை மற்றும் அதனால் உணடாகும் அழுத்தம் மறைந்திவிடுவதால், இம்மக்களின் வேலையிழப்பு கணக்கு அதிகாரபூர்வ கணக்கெடுப்பில் சேர்க்கப்படுவதில்லை. ஜூன் 30 ஆம் தேதி எண்களின்படி, 5,6 மில்லியன் பட்டதாரிகள் தொகையில், 30% மட்டுமே, அதாவது 4 மில்லியன் பட்டதாரிகளே தகுந்த வேலையில் சேரமுடிந்தது. இதற்கு முன் இதுபோன்று பட்டதாரிகள் மற்றும் நகரத்து நாட்டுப்புற தொழிலாளர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் எப்போதுமே சிக்கிக்க்கொண்டது கிடையாது என்றும் தெரியவருகிறது.

2.தன் தேவைக்கு மீறிய உற்பத்தி முதலீடு மற்றும் அளவுக்கு மீறிய உற்பத்தி திறன் கொண்டமையால், சீனா இப்போதைக்கு ஒரு தறி கெட்டு கட்டுங்கடங்காத பொருளாதார நிலையை எதிர்கொண்டு இருக்கிறது. அரசு நிர்வாகமானது, அளவுக்கு மீறிய வீட்டுவசதி கட்டுமானங்களை கட்டிவிட்டது என்று மட்டும் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதே வேளையில் நாட்டின் பல பன்வழி துரித போக்குவரத்து அகல பாதைகள், பல பிரும்மாணட பெரிய புதிய துறைமுகங்கள், நிறைய எஃகு, உலோக உருக்காலைகள், கட்டுக்கடங்கா வாகன உற்பத்தி போன்ற முக்கியம் வாய்ந்த மேலும் பல துறைகளில் நாட்டின் தற்காலத்திய தேவையை மீறிய‌ அத்துமீறின‌ வீண் செலவு செய்துவிட்டிருக்கிறது. ஒருபக்கம் ஏழைகளின் எண்ணிக்கை உயருவதாலும் இன்னொரு பக்கம் நுகர்வோர் எண்ணிக்கை மற்றும் அவர்கள் வாங்கும் தரம் குறைந்துகொண்டு வருவதாலும், இதுபோன்ற அளவுக்கு மீறிய வீண் செலவுகளின் பாரத்தை சீனப் பொருளாதாரத்தினால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் தவித்து வ‌ருகிறது.


சில இடங்களில் தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகமாக அதிகமாக பண இழப்பும் அதிகமாகிக் கொண்டே போகிற‌ மிகவும் சிக்கலான நிலையில் சீனா சிக்கியும் வருகிறது. பண இழப்பு தொடர்ந்து வந்தாலும் பரவாயில்லை ஆனாலும் உற்பத்தியை குறைக்கும் எண்ண‌ம் ஏதும் சீனாவிற்கு இல்லையாம். ஏனென்றால், வங்கிகள் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு தொடர்ந்து கடன் கொடுத்து அவைகளை மூடாத வகையில் சீன நிர்வாகம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இந்த முக்கியமான காரணத்தினால்தான் சீனா குறுகிய கால கட்ட பணவீக்க வலையில் சிக்காமல் தப்பித்து வருகிறது.


3. சீன உள்நாட்டு நுக‌ர்வோர்களின் வாங்கும் தரம் போதுமானதாக இல்லை. சீன பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளின் நுகர்வோர் வாங்கும் தரம் சீன வளர்ச்சிக்கு என்றுமே ஒரு உந்து கோலாக இருந்துவருகிறது. இந்த ஆண்டு, சீன அரசு நிர்வாகத்தின் சில திட்டங்களினால் பொது மக்கள் தங்கள் வீட்டு வசதிக்கு தேவையான மின் இயந்திர பொருட்கள் பல வாங்கி நாட்டுப்புறத்து பொருளாதாரத்தை சற்று சீர்தூக்கினர் என சொல்லலாம். ஆனால், நகரவாசிகளின் நுகரும் தரம் சற்று வீழ்ந்துவிட்டிருந்தது. நகரத்தைவிட்டு நாட்டுப்புறத்திற்கு திரும்பிய 60 மில்லியன் உழைப்பளர்களின் புதிய நிலையானது, நகர மற்றும் நாட்டுப்புற நுக‌ர்வோர்களின் தரத்தில் ஒரு புதிய திருப்பத்தை கொண்டு வந்திருக்கிறது.

நாட்டின் அனைத்து நுகர்வோரின் வாங்கும் தரம் 8% அளவுக்கு குறைந்துவிட்டது. இந்த அளவை, அமெரிக்காவில் ஆண்டு முப்பதுகளில் ஏற்பட்டிருந்த கட்டுக்கடங்கா வேலயில்லா திண்டாட்டம், ஏழைகள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் குறைவான நுக‌வோர் தரம் ஆகியவைகளோடு ஒப்பிட்டு பேசலாம் என நியு தஒ கூறிவருகிறார். பொருளாதார பின்னடைவுகளை தீர்க்க சீனாவிடம் எந்த திட்டமும் இல்லை, ஏழைகளின் நுகரும் தரத்தை உயர்த்த எந்த உதவியும் இல்லை. இதற்கு மாறாக, பழைய மாதிரியே தேவைக்கு அதிகமான முதலீடுகளை அதிகரிக்க சீனா புதிதாக அதிக அளவில் கரன்சி நோட்டுகள் அச்சடித்து வெளியிட்டுள்ளது.

2009ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீன தொழிற்கடன் புள்ளி விபர க‌ணக்கெடுப்பின்படி, இந்த வகை திட்டத்தை பணக்காரர்கள் தங்கள் வசதிக்கேற்ப திருப்பி, உள்நாட்டிலும் மேலும் ஒருசிலர் அந்நிய நாட்டிலும் முதலீடு செய்பவர்கள் என்கிற போர்வையில் வங்கிகளிடம் தவறுதலான வழியில் அதிக கடன் பெற்று, மேலும் மேலும் வசதி படைத்த பணக்காரர்கள் ஆகிவருகிறார்கள். இதனால், உள்நாட்டின் சந்தைக்கு எந்த வகை ஆதாயமும் வளர்ச்சியும் இல்லை எனவும் அவர் கூறுகிறார். பொதுவாக இதுபோன்ற பொருளாதார பின்னடைவு மற்றும் சிக்கல்கள் உண்டாகும்போது, பணக்காரகளைத்தான் இது மிகவும் பாதிக்கும். ஆனால், சீனாவில் பணக்காரர்கள் ஒருபோதும் தங்கள் பணத்தை முதலீடு செய்யாமல், அரசாங்கத்தின் வங்கிப் பணத்தை மட்டுமே உபயோகிப்பதால், வங்கிகள்தான் இதில் அடிபடுகின்றன.

இதுபோன்ற நடவடிக்கைகளினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கோ, பொது மக்களின் மேன்மைக்கோ நன்மை கிடைக்கப்போவதில்லை. நிலைமையை சீர்திருத்த தக்க நடவடிக்கை எடுக்காமல், இப்படியே விட்டுவிட்டால், இவையெல்லாம் ஒரு மாபெரும் கிளர்ச்சிக்கு வித்தாகவே அமையும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

12 ஜூலை, 2009

உய்கூர் : துருக்கி நாட்டு பிரதம மந்திரி சீன அதிபருக்கு எச்சரிக்கை!


தன‌து ஆளும் AKP கட்சியின் கூட்டத்தில் பேசிய துருக்கிய பிரதமர் (Recep Tayyip Erdogan), சின்சியாங் மாநிலத்தில் பூர்வீக மக்களான துருக்கிய மொழி பேசும் இஸ்லாமிய மத உய்கூர் இனத்தினர்கள் தங்களது மூதாதையர்களின் கலாச்சாரம், வழிபாட்டு முறைகள்,பழக்க வழக்கங்கள் போன்றவைகளை முழுதாக கைவிட்டுவிட்டு அகன்ற சீனாவின் ஒருமித்த கம்யூனிச புதிய முறை வாழ்க்கைக்கு மாறி மற்ற சீன மக்களோடு மக்களாக கலந்து இணைந்து வாழ‌வேண்டும் என்று சீன அதிகார வர்கத்தினர் உய்கூர் சமூகத்தின் மீது அழுத்தம் கொடுத்து வருவதை கண்டித்து சீன அதிகார வர்கத்தை எச்சரித்திருக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில் "குற்றமற்ற எளிய மக்களை துன்புறுத்தும் எந்த ஒரு நாடும், எந்த சமுதாயமும் அம்மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்கும் எந்த உதரவாதமும் அளிக்க இயலாது" என்றும் சீனாவை கண்டித்திருக்கிறார்.

முன்னதாக இத்தாலியின் அக்கிலாவில் நடந்து முடிந்த G8 மாநாட்டிற்கு பிறகு நாடு திரும்பிய இவர் அன்காரா நகரில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பதிலளிக்கையில், உய்கூரில் நடக்கும் நிகழ்ச்சிகளை <<சீனர்களின் உய்கூர் இனவழிப்பு நடவடிக்கை>> என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இருந்தாலும், வெகுவிரைவில் சீனர்கள் இந்த பிரச்சினைகளுக்கு சுமுகவழியில் தீர்வு காண்பார்கள் என நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறினார்.

துருக்கி நாட்டிற்கும் சீனாவிற்கும் இடையில் இருக்கும் துருக்கிய மொழி பேசும் இசுலாமிய உய்கூர் மக்கள் வாழும் இப்பகுதி சீனாவின் அதிகாரபூர்வ மாநிலமே என்றும் இதில் (திபெத்தைப்போல்) பிரிவினைவாத நோக்கம் எதுவும் துருக்கிக்கு கிடையாது என்பதையும் அவர் ஊர்ஜிதப்படுத்தினார். சில முக்கிய துருக்கிய தேசியவாத அமைப்புகளின் ஆதரவுபெற்ற பெரியதொரு உய்கூர் சமுதாயம் உய்கூரை ஒட்டிய துருக்கி நாட்டி்ன் எல்லையோரத்தில் வாழ்ந்துவருவதை இங்கு கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

26 பிப்ரவரி, 2009

இலங்கை தமிழர் விவகாரத்தில் கொஞ்சம் தெளிவு மற்றும் நிதானம் தேவை

தலைப்புகளிலேயே பகிரங்கமாக இந்தியாவை அவமானப் படுத்தி எழுதுவது கூடாது

பிரிவினை வாதங்களை முன்வைத்து ஒன்றுபட்ட இந்தியாவின் ஒற்றுமையை குலைக்கும் கருத்துகளை பரப்புவது கூடாது
தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் அதன் தலைவர்களிடையே குழப்பங்களை சீண்டிவிடும் வகையில் எழுதுவது கூடாது
இலகில் உணர்ச்சி வசப்படும் தமிழனின் பலவீனத்தை மூலதனமாக வைத்து குழப்பங்கள் உருவாக்கும் எண்ணத்தில் எழுதுவதும் கூடாது
இலங்கை விவகாரம் பற்றி இந்தியன் எனும் பார்வையுடன் பிரச்சினைகளை அனுகும்போது, இந்தியாவின் தெற்காசிய வல்லமையை உடைக்க இதன் இரண்டு பெரிய முக்கிய எதிரிகளான‌ சீனா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளும் இலங்கையை பகடைக் காயாக உருட்டி விளையாடுவதை கருத்திற் கொண்டே சிந்தித்து எழுத‌ வேண்டும்.
தமிழன் என கூறிக்கொண்டு, தமிழன் தோல் போற்றிய‌ சிங்கள, பாக்கிஸ்தானிய, சீன போலிகள் மற்றும் அரசியல் ஆதாயம் தேடி உலறிக்கொட்டும் சில உள்நாட்டு எதிர் கட்சியினர் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை மூலதனமாக வைத்து பித்தலாட்டம் செய்வதை இனம் கண்டுகொள்ள தெரியவும் வேண்டும்.
இந்திய இறையாண்மைக்கும் அதன் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்க தூண்டும் அனைத்துவித ஆக்கங்களையும் வலையில் இருந்து நீக்கி அழித்துவிட பொறுப்புள்ள நிர்வாகத்தினர்களுக்கு உடனுக்குடன் பிராது கொடுக்கவும் வேண்டும்.
வாழ்க வளர்க உலகின் ஒரே உன்னத ஜனநாயக இந்தியா!

25 ஆகஸ்ட், 2007

பாரீஸில் ஒரு வெள்ளையருடன் நடந்த விநோதமான சந்திப்பு!

மெட்ரோ எனும் சுரங்க வழி இரயில் எடுக்க தாழ்வாரத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது 30/35 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஏதோ போதை பொருள் உட்கொண்டவர்போல் தன் சுய கட்டுப்பாட்டை இழந்த நிலையில் உலாத்திக் கொண்டிருந்தார்.

பிறகு நானும் ஏனைய அனைத்து பயணிகளும் இரயிலில் ஏறி அமர்ந்து புறப்பாடுக்கு காத்துக் கொண்டிருந்தோம். கடைசி நேரத்தில் கதவுகள் மூடும் வேளை பார்த்து அதே ஆடவர் இரயிலில் நுழைய முயற்சித்து, கதவிடுக்கில் சிக்கிக்கொண்டார். இது ஒன்றும் பெரிய ஆபத்தானது இல்லை. கொஞ்சம் திமிரி தள்ளினால் கதவு திறந்து இரயிலுள் நுழைந்து விடலாம். ஆனால், அந்த மனிதரோ வேண்டுமென்றே அந்த இடுக்கில் இருந்து விடுபடாமல், எதுவும் நடக்காதது போல் கொஞ்சம் இருமாப்புடன் வெளியே எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். இப்படி இருந்தால் தானியங்கி முறை இரயில் கிளம்பாது. அனைத்து பயணிகளும் இவருக்காக காத்துக்கொண்டிருந்தோம்

அவர் அருகாமையில் இருந்த நான் கொஞ்சம் பரிதாபப்பட்டு அதே சமயம் ஆத்திரமும் கொண்டு மேலாடையை பற்றி உள்ளுக்கு இழுத்தேன். நான் செய்த இந்த செயலை பொறுக்காத அவர் என் மீது கோபம் கொண்டு, என்னை அடிப்பேன் உதைப்பேன் மூஞ்சை உடைப்பேன் என சண்டைக்கு வந்து பயமுறுத்தினார்.

சுய நிலமையில் இல்லாத அவரது இந்த போக்கை கண்டு நான் எதுவும் வீண் தகராறு செய்யவில்லை. மேலும் இதனால் எனக்கு போலீசாரோடு பிரச்சினனகள் ஏற்படும் என்பதை அறியாமல் இல்லை.

நான் என்னுடைய செய்கையின் உட்கருத்தை சொன்னேன். பிறகு கொஞ்சம் அமைதியான அவர் நான் இந்திய பூர்வீகம் என்பதை புர்ந்துகொண்டு, என்னை "நீ எந்த நாட்டு பிரஜை" என்று கேட்டார்.

நான் "அதையெல்லாம் உன்னிடம் சொல்ல விரும்பவில்லை, முதலில் நீ யார் அதை கேட்பதற்கு?" என கோபத்துடன் பதிலலித்தேன்.

உடனை அவர் தன்னை பிரஞ்சில் அசிங்கமாக விளியப்படும் "மனூஷ்" எனும் நாடோடி இனத்தவர் என அறிமுகப் படுத்திக்கொண்டார். மேலும் அவர் சொன்னதுதான் என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது. இந்த "மனூஷ்" என்பவர்கள் இந்திய பூர்வீகமாம். பாரசீகத்தில் இருந்த காலநடையாக வந்த இவர்கள் சிந்தி எனப்படுபவர்களாம். இவர்கள் பேசும் மொழியும் சிந்தியாம்.

விந்தையான உலகம். விந்தையான மனிதர்கள். எதிர்பாராத சந்திப்புகள்.

இதில் கடைசியில் இன்னொமொரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால், அந்த மனிதரே என்னை பாதுகாப்பாக இருக்கும்படி ஒரு சகோதர பாசத்துடன் அறிவுரை செய்துவிட்டு சென்றார்.

நன்றி.

2 பிப்ரவரி, 2007

தலிபான் ஊடுருவலின்போது கண் மூடிய பாக்கிஸ்தான் படைகள்!

இன்று, பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமையன்று பாக்கிஸ்தான் அதிபர் முஷாரஃப் "தன் நாட்டின் இராணுவம் தலிபான்களை ஆப்கனிஸ்தான் உள் ஊடுருவ வகைசெய்யும் நோக்கில், எல்லையில் கவனிப்பை வேண்டுமென்றே தளர்த்தியது" என ஒப்புக்கொண்டார். மேலும், நேட்டோ தனது கவனிப்பை எல்லைக்கு அந்த புறம் அதிகரிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
*
*
ஆதாரம் : Le monde

18 ஜனவரி, 2007

தனிமனித சுதந்திரத்திற்கு திணறும் சீனர்கள்!

மனித உரிமை போராளி 'சென் க்யாங்செங்' என்பவர், அரசாங்கம் வலுக்கட்டாயமாக மக்களை மலடு (sterilsation) ஆக்கும் செய்தியை வெளி உலகுக்கு தெரியப்படுத்திய குற்றத்திற்காக(?), ஆகஸ்டு 2006ஆம் தேதியன்று 'ஷாந்தோங்' அதிகாரிகளால் நான்கு ஆண்டு மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பெறுகிறார். எல்லாவித மறுமுறையீடுகள் உபயோகித்த பின்பு கடைசியாக இந்த தண்டனை இம்மாதம் வெள்ளி 12 ஜனவரி அன்று ஊர்ஜிதம் செய்யப்படுகிறது.

குழந்தையிலிருந்தே பார்வையற்ற இந்த சட்ட நிபுணா மீது 'பொது உடைமைகளை அழிப்பு' மற்றும் 'போக்குவரத்தை சீர்குலைக்கும் எண்ணத்துடன் குண்டர்களை அமைத்தது ரகளை' ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டு உள்ளன. இவரது வக்கீல், போலீசே சோடித்து வேண்டுமென்றே அரங்கேற்றிய நாடகங்கள் இவை என சொல்கின்றனர். சட்டத்திற்கு அடங்கி உட்பட்டு அதன் வழியாகவே எதிர்த்து வாதாடி சுதந்திரத்தின் விடுதலைக்கு போராடும் ஒரு முன்மாதிரியான யுத்தமே இவர்களின் முயற்சி. ..//இதற்குமேல் மோசமான முடிவை எதிர்பார்த்து இருக்கவே முடியாது. இனி, தண்டனையை சிறைக்கு வெளியே அதாவது வீட்டிலேயே கழிக்க வாதாடுவோம். முக்கியமாக, தப்பான வழிகளை அரசாங்கம் கையாண்டதை வழக்கின்போது வெளிப்படுத்துவோம்.// என 'ஹியு ஜியா' எனும் மற்றுமொரு மனித உரிமை போராளி கூறினார். இவரும், பீக்கிங்கின் இரகசிய போலீசாரால் 183 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளிவராத வகையில் தடுப்புக்காவல் கண்கானிப்பில் இருந்தார்.

போலீஸ் அரங்கேற்றிய நாடகம்.

சீன மனித உரிமை பாதுகாவலர்கள் (Chinese Human Rights Defenders - 'CRD') தங்களது இணைய தளத்தில் இந்த வழக்கை ஒரு 'கூத்து' என்றும், நீதிபதியின் முடிவை 'கேவலத்துக்குரிய அநீதி' என்றும் விமரிசித்து இருக்கின்றனர். ஆகஸ்டு மாதத்திலிருந்து, கடந்த நான்கு வழக்குகளின் போதும், உள்ளூர் போலீசாரின் தொந்தரவுகளை 'CRD' எடுதுரைத்தது. முதல் வழக்கின்போது வக்கீல்கள் திருட்டு குற்றம் சாட்டப்பட்டு போலீசாரின் நேரடி கண்கானிப்பில் வைக்கப்பட்டு இருந்தனர். பிறகு, எங்கள் தரப்பு சாட்சிகள் பயமுறுத்தப்பட்டு, ஒருசிலர் காணாமலே போய்விட்டனர். 'சென் க்யாங்செங்'இன் மனைவி சித்தரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கவும் பட்டார்.

டிசம்பர் கடைசியில், இவர்களுடைய இரண்டு வக்கீல்களும் போலீஸாரின் மேலும் ஒரு சோடிப்பு வலையில் விழுந்தனர் : பேருந்தில் பீக்கிங் செல்ல வேண்டி ஒரு பிரயாணத்தின்போது பெண் பயணச்சீட்டு சோதனையாளரை நல்லிரவில் 'காமவெறி தொந்தரவு' செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். இதன் பிறகு, ஒரு குண்டர்கள் கூட்டம் பேருந்தை நிறுத்தி இரண்டு வக்கீல்களுக்கு அடி உதைகள் கொடுத்தனர்.
*
*
ஆதாரம் : 'லெ மோந்' பிரஞ்ச்சு நாளிதழ்.
மொழிபெயர்ப்பு : மாசிலா.

17 ஜனவரி, 2007

2033 இல் சீனாவின் மக்கள் தொகை 150 கோடி.

ஆண்டு 2033 இல் 150 கோடி மக்கள தொகையை எட்ட இருக்கும் சீனா, தொடர்ந்து அதிகரித்துவரும் மக்கள்தொகை, ஆண்-மெண் எண்ணிக்கையில் அபரீத இடைவெளி, அளவுக்கு மீறி அதிகரித்து வரும் கூலி-கைவேலை தொழிளாலர்கள் மேலும் வயது முதிர்ந்து வரும் மக்கள் ஆகியனவையே சீனாவின் எதிர்வரும் சமுதாய-பொருளாதார முக்கிய சவாலாக இருக்கும்.

அரசின் மக்கள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு நிர்வாகக்குழு அளிக்கும் அறிக்கையின்படி இவர்களுடைய "ஒரு குடும்பம்-ஒரு குழந்தை" திட்டத்தினால் 40 கோடி குழந்தைகள் பிறப்பது தவிர்க்கப்பட்டன என்று பெருமிதம் அடைகின்றனர். 1970இல், பெண் ஒருவருக்கு 5,8 குழந்தைகள் என்ற விகிதத்தில் இருந்தது இப்போது 1,8 என்ற விகிதத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இருந்தும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் மக்கள்தொகை மறுபடியும் அதிகரிக்கும் போக்கு தலைதூக்கி இருப்பதால், அதிகாரிகள் புதியமுறைகள் மற்றும் புதிய திட்டங்கள் மூலம் மக்கள் பெருக்கத்தை குறைக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கின்றனர்.

கடும் பாதகங்களை உண்டுபண்ணியிருக்கும் 'ஒரு குடும்பம்-ஒரு பிள்ளை' திட்டத்தைப்பற்றியும் அறிக்கையாளர்கள் சாடியிருக்கின்றனர். இப்போதைய மக்கள்தொகையில் 14,3 கோடி ஆக, அதாவது 11%, இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 2040இல் 43 கோடி ஆக, அதாவது 30% ஆக இருப்பர். இந்த அபரீத மாற்றத்தினால் இவர்களுக்கான அதிகப்படி சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் ஆகிய தேவைகளுக்கு நிறைய நிதிகள் ஒதுக்கவேண்டி உள்ளது. தற்போதைக்கு நகரங்களில் வசிக்கும் ஒருசிலரே இதில் பயணடைகின்றனர்.

'ஒரு குடும்பம்-ஒரு குழந்தை' திட்டத்தால் சட்டத்துக்கு புறம்பான, ஏகப்பட்ட கரு கலைப்புகள் நடந்தேறி வந்தன. முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் இரண்டாவதாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் வசதியாலும் மேலும் பெண் சிசுக்கரு கலைப்பினாலும் 2020ஆம் ஆண்டில் 3 கோடி வாலிப ஆண்கள் திருமணம் செய்துகொள்ள பெண் இல்லாமல் தவிப்பர். இதனால் உருவாக இருக்கும் சமுதாய பிரச்சினைகளை சமாளிப்பதற்கு மக்கள் பெண்குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொள்ள அரசு ஊக்குவிக்க வேண்டும் எனவும் அறிக்கை கூறுகிறது. 2005ஆம் ஆண்டில் 118 பையனுக்கு 100 பெண் என்ற விகிதம் இப்போது சில மாகானங்களில் 130/100 என்ற விகிதத்தை எப்போதே தாண்டிவிட்டது.

வரும் 20 வருடங்களில், 30 கோடி சீனர்கள் கிராமப்புறம்-உள்ளூர்களில் இருந்து நகரத்திற்கு குடி பெயர்ந்துவிடுவார்கள். இதனால் உண்டாக இருக்கும் சமூக பொருளாதார, சுற்றுப்புற சூழல் பிரச்சினைகள் ஆகியவைகளை சமளிப்பதே இன்னுமொரு கடுமையான சவாலாக இருக்கும். வேலை செய்கிற வயது தகுதி உடைய மக்கள் (15-64 வயது) 86 கோடியிலிருந்து 2016ஆம் ஆண்டு 101 கோடியாக இருக்கும். அதாவது உலக மொத்த வளர்ந்த நாடுகளின் அனைத்து வேலையாளர்களின் தொகைக்கு ஈடானது.
ஆதாரம் "Le monde" பிரஞ்ச் நாளிதழ்.
மொழி பெயர்த்தது மாசிலா.