தனது ஆளும் AKP கட்சியின் கூட்டத்தில் பேசிய துருக்கிய பிரதமர் (Recep Tayyip Erdogan), சின்சியாங் மாநிலத்தில் பூர்வீக மக்களான துருக்கிய மொழி பேசும் இஸ்லாமிய மத உய்கூர் இனத்தினர்கள் தங்களது மூதாதையர்களின் கலாச்சாரம், வழிபாட்டு முறைகள்,பழக்க வழக்கங்கள் போன்றவைகளை முழுதாக கைவிட்டுவிட்டு அகன்ற சீனாவின் ஒருமித்த கம்யூனிச புதிய முறை வாழ்க்கைக்கு மாறி மற்ற சீன மக்களோடு மக்களாக கலந்து இணைந்து வாழவேண்டும் என்று சீன அதிகார வர்கத்தினர் உய்கூர் சமூகத்தின் மீது அழுத்தம் கொடுத்து வருவதை கண்டித்து சீன அதிகார வர்கத்தை எச்சரித்திருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில் "குற்றமற்ற எளிய மக்களை துன்புறுத்தும் எந்த ஒரு நாடும், எந்த சமுதாயமும் அம்மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்கும் எந்த உதரவாதமும் அளிக்க இயலாது" என்றும் சீனாவை கண்டித்திருக்கிறார்.
முன்னதாக இத்தாலியின் அக்கிலாவில் நடந்து முடிந்த G8 மாநாட்டிற்கு பிறகு நாடு திரும்பிய இவர் அன்காரா நகரில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பதிலளிக்கையில், உய்கூரில் நடக்கும் நிகழ்ச்சிகளை <<சீனர்களின் உய்கூர் இனவழிப்பு நடவடிக்கை>> என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இருந்தாலும், வெகுவிரைவில் சீனர்கள் இந்த பிரச்சினைகளுக்கு சுமுகவழியில் தீர்வு காண்பார்கள் என நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறினார்.
துருக்கி நாட்டிற்கும் சீனாவிற்கும் இடையில் இருக்கும் துருக்கிய மொழி பேசும் இசுலாமிய உய்கூர் மக்கள் வாழும் இப்பகுதி சீனாவின் அதிகாரபூர்வ மாநிலமே என்றும் இதில் (திபெத்தைப்போல்) பிரிவினைவாத நோக்கம் எதுவும் துருக்கிக்கு கிடையாது என்பதையும் அவர் ஊர்ஜிதப்படுத்தினார். சில முக்கிய துருக்கிய தேசியவாத அமைப்புகளின் ஆதரவுபெற்ற பெரியதொரு உய்கூர் சமுதாயம் உய்கூரை ஒட்டிய துருக்கி நாட்டி்ன் எல்லையோரத்தில் வாழ்ந்துவருவதை இங்கு கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக