சமூகம் சமுதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் சமுதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஜனவரி, 2010

சீன திரை அரங்குகளிருந்து வெளியேறும் அவாத்தார்! ஏன்?

கடந்த 4ஆம் தேதி சீன திரை அரங்குகளில் வெளிவந்த அவாத்தார், மற்ற எப்போதும் இல்லாத அள்விற்கு மிக பிரம்மாண்ட வரவுகளை கொடுத்து புதிய சாதனை நிகழ்த்தி இருக்கிறது. பீக்கிங்கின் முக்கிய மூன்று IMAX 3D அரங்குகளில் கடந்த 59 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வெளியில் நீண்ட வரிசையில் காத்து நின்றும் மக்கள் படத்தை பார்த்து சென்றனர்.

சீன இயக்குனர் லியு சுயான் கூறுகையில், "இப்படமானது சீனாவின் அனைத்து திரைப்பட தயாரிப்பாள்ர்களுக்கும் தங்களது பின்தங்கிய சீன சினிமா உலகின் மிகப்பெரிய ஒரு தோல்வியின் அடையாள்த்தையே நினைவுபடுத்தும் சின்னம்" என்றார். "இது எந்த அளவிற்கு எங்களது அனைத்து சீன சினிமா உலகமானது உண்மை, அழகு, தூய்மை போன்ற மிகச்சாதாரண நிலைகளை விட்டு வெகு தூர விலகி இருக்கிறது என்பதை எங்களுக்கு சவுக்கடியுடன் உணர்த்துகிறது" என்றும் கூறினார். மொத்தத்தில், இப்படத்தின் திறமைகள் அருகில் சீன முழு சினிமா உலமும் ஒரு பூஜ்ஜியம் என சொல்லாமல் சொன்னார்.

ஆனால், இப்பிரமிக்க வைக்கும் அவாத்தார் பட வெற்றியானது சீன மைய அரசினை கொஞ்சம் ஆட்டம் காணவும் வைத்து விட்டது. இதனால், 3D அல்லாத புற நகர் மற்றும் தூரத்து ஊர் அரங்குகளில் 2D ஆக அதிக அளவில் காட்சி இட்ப்பட்ட இப்படங்களை விலக்குமாறு சீன அரசாங்கம் உத்தரவு இட்டுவிட்டது.


avatar2.1263902442.jpgபிப்ரவரி கடைசிவரை காட்சியிடப்பட வேண்டிய படத்தை இவ்வளவு அவசரமாக சீன அரசாங்கம் விலக்கியதின் பின்புலம் என்ன?

இப்படம் உள்நாட்டு தயாரிப்பு படங்களை பின்னுக்கு தள்ளி அளவுக்கு மிகுந்த வசூலை அள்ளியது மட்டும் ஒரு காரணமிலலை. இதில்லாமல், பொருளாதார வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம் என்கிற பெயரில் சீனாவில் கடந்த சில பத்தாண்டுகளாகவே சாதாரண குடிகள், விவசாயிகள் அவர்களது மண்ணிலிருருந்து அகற்றப்பட்டும், அவர்களது மண், நிலங்களை அரசின் பக்க பலத்துடன் பன்முக கட்டிட கட்டுமான முதலாளிகளால் அராஜக முறையில் பலவந்தமாக பறிக்கப்பட்டு வருவதை நினைவு படுத்தும் வகையில் அவாத்தார் படத்திலும் சில காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. கடந்த சில வாரங்களாக சீன வலைப்பதிவாளர்கள் சிலர் இவ்விரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பல வாதங்களை முன்வைத்து எழுதியும் வருகின்றனர். இதனால், சட்ட அமைதிக்கு ஏதும் கேடு வந்துவிடக்கூடாதே என அஞ்சிதான் சீன மைய அரசு இவ்வித அவசர முடிவுகளை எடுத்திருக்கிறது என யூகிக்கிப்படுகிறது.

சீன புகழ்பெற்ற வலைப்பூ பதிப்பாளர் ஹான் ஹான் கூறுகையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள மக்களிடம் இருந்து அடாவடித்தனமாக அவர்களது மண்ணை பிடுங்கி நிலங்களை கையகப்படுத்தி மண் நிலமற்ற அநாதைகளாக அலையும் காட்சிகள் ஒன்று சீனாவிலும் மற்றது இவ்வுலகை அற்ற தூரத்து கிரகங்களில் மட்டும்தான் நடக்க வாய்ப்பு உள்ளது என மக்கள் நம்ப இடமுள்ளது என்றார் (இந்தியாவிலும் நடக்கும் இதை போன்ற அநியாயங்கள் அவருக்கு தெரியாததை மன்னித்துவிடுவோம்)

தற்போதைக்கு, அகண்ட சீனா முழுவதிலும் உள்ள சற்றே 550 _ 3D அரங்குகளில் மட்டும்தான் இப்படம் முன் குறிப்பிட்ட தேதிவரையில் ஓடும். அதாவது ஆடம்பர வசதி படைத்த மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே. இதன் மூலம், சாதாரண அதிகபட்ச அடித்தள மக்கள் இப்படத்தை பார்த்து தங்களது பரிதாப நிலைகளை இன்ங்கண்டு ஒப்பிட்டு எவ்வித மன எழுச்சி அல்லது போராட்ட முயற்சிகள் துளிர்விடுவதை அடியோடு தவிர்த்து தடுக்கப்பட்டன.

நன்றி : Le Monde / French News Paper.

இதுவே நம்ம அகண்ட சீனாவின் பயந்தாங்கொள்ளி கொள்கை.

(எப்படியோ! அனைத்து சீன் அடித்தள மக்களும் எழுச்சி கண்டு சீனா முழுதிலும் புரட்சிகள் வெடித்து நாடு சின்னாபின்னமானால், இந்தியாவிற்கு நல்லது.தான். யார் கண்டது? அது போன்ற வேளைகளில், தேச ஒற்றுமை கருதி இந்திய் மீது வேண்டுமென்றே (பொய்) போர் தொடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. எவ்வளவு காலம்தான் பொய் கம்யூனிசத்தை வைத்து மக்களை ஏமாற்ற முடியும். என்றாவுது ஒரு நாள் உண்மை உலகிற்கு சீன மக்கள் வந்தே தீரவேண்டும்.)

26 டிசம்பர், 2009

எழுத்தாளர் பேராசிரியர் லியு க்சியாபூ சிறையடைப்பு : மக்களாட்சி மறுக்கும் சீன கம்யூனிசம்!

பதினொன்று ஆண்டுகால கடும் சிறை : இவைதான் இம்மாதம் டிசம்பர் 25 வெள்ளியன்று பிரபல சீன சிந்தனையாளர் எழுத்தாளர் பேராசிரியர் லியு க்சியாபூ (Liu Xiabou) அவருக்கு, தான் சீன அரசாங்கத்தை எதிர்த்து ஆட்சி கவிழ்ப்பு எண்ணத்துடன் கலகம் செய்த குற்றத்திற்காக தண்டனையாக விதிக்கப்பட்டது.

ஆண்டு 2008 டிசம்பர் 8 அன்று முதல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருந்த இவர், நாட்டின் நீண்ட கால கம்யூனிச அடாவடித்தன ஒருமுனை ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, சனநாயக மக்களாட்சி மலர 19 துணிகரமான கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கை எண் 8 இன் துணை எழுத்தாளர் ஆவார். ஜூன் 2009 இல் முழுதும் குற்றம் சாற்றப்பட்ட இவருக்கு அதிகபட்சம் பதினைந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள் இருந்தன.

குற்றவியல் சட்டங்கள் 1977ல் மாற்றி அமைக்கப்பட்டதிலிருந்து, வெறுமனே தனது சொந்த கருத்துக்களை வெளிப்படுத்தி ஒரே காரணத்திற்காக தனி ஒரு கொள்கை எதிர்ப்பாளருக்கு இவ்வளவு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாக சீன சட்ட நிபுணர் வட்டாரங்கள் கருதுகின்றன.

28 ஆகஸ்ட், 2009

புள்ளி விவர கணக்கெடுப்புகளும் தில்லுமுல்லுகளும்

சமீபத்தில் அமெரிக்கா (என நினைக்கிறேன்) நடத்திய புள்ளி விவர கணக்கெடுப்பின் படி உலகில் அதிகமாக புகை பிடிக்கும் பெண்கள் வரிசையில் அமெரிக்க பெண்கள் முதலாவதாகவும், சீன பெண்கள் இரண்டாவதாகவும் அடுத்து இந்திய பெண்கள் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பதாகவும் அறிந்தோம். பொதுவாக தங்கள் சமுதாயத்திற்கு கெட்ட பெயர் வாங்கி தருகிற இதை போன்ற செய்திகளை படித்த உடன் அதிலும் பெண்களை போற்றுகிற நம் மக்கள் எந்த அளவு இதை பெரிது படுத்தி பேசி மனம் நொந்து இருப்பார்கள் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே போதும்.

ஆனால், இந்த கணக்கெடுப்பில் மறைந்திருக்கும் சில பல தில்லுமுல்லுகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்து பார்த்தால், இதில் எந்த அளவுக்கு நாமெல்லாம் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்பது புரியும்.

இன்றை உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் இவை மூன்றுகள்தான். நாம் அறிந்தவரை, இந்த கணக்கெடுப்பில் இவ்வொவ்வொரு நாடுகளில் உள்ள புகை பிடிக்கும் பெண்களின் மொத்த எண்ணிக்கைதான் அதிகமே தவிர, இதையே விகிதாச்சாரப்படி கணக்கு பார்த்தால், கட்டாயம் இந்தியாவும், சீனாவும் ஏறக்குறைய பட்டியலின் கடைசி இடத்திற்கே போயிருக்கும் என்பதை திடமாக நம்பலாம்.

அதாவது, 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், சற்றே 1% அல்லது 2% பெண்களே புகை பிடிப்பவர்களாக இருந்தால் கூட, இதுவே 1.1 கோடி அல்லது 2.2 கோடி பெண்கள் புகைபிடிப்பவர்கள் என அறிய கொடுக்கிறது. இந்த கோடிகளை வைத்து பார்க்கையில், அனைவருக்கும் இது பிரமிப்பாகவே தெரியும். ஆனால் ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் இதே போன்ற விகிதாச்சார கணக்குப்படி புகைபிடிக்கும் பெண்களின் புள்ளிவிவர கணக்கு எடுத்துப் பார்த்தால், அவர்களே முதல் பத்து அல்லது இருபது இடங்களையும் ஆக்கிரமித்து கொள்வார்கள் என்பது தின்னம். மேற்கத்திய நாடுகளில் உள்ள பெண்கள் ஆண்களை விட அதிகம் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். சில நாடுகளில் இவர்கள் 30% அல்லது 40% தாண்டிவிடுவார்கள் என்றே சொல்லலாம்.

எனவே (பாரபரிய பழங்குடி) மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியா சீனா ஆகிய நாடுகளில் உள்ள புகைபிடிக்கும் மொத்த பெண்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்காமல், ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகை என்ன, அதில் உள்ள புகை பிடிக்கும் பெண்களின் தொகை என்ன, விகிதாச்சாரப்படி இது எந்த வகையில் வரிசை படுத்தப்படுகிறது என்பதை நாம் நன்றாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டியது அவசியம்.

இது போன்ற பல தவறான புள்ளி விவரங்களை நம் ஊடகங்கள் கொஞ்சமும் அலசி பார்க்காமல் அதில் மறைந்திருக்கும் தில்லுமுல்லுகளை அப்பாவி பொது மக்களுக்கு சரிவர விளக்கியும் கூறாமல், வெறுமனே இணையம் மூலம் வந்த செய்திகளை தங்கள் தளங்களில் வெளியிட்டு என்னவோ யாரும் எதிர்பாராத அற்புதமான புதிய வகை அதிரடி செய்திகளை முதலில் தருவதாக எண்ணி பெயர் தட்டிக்கொள்ள முயற்சிப்பது தண்டிக்கப்படவேண்டிது அவசியம். இதனால் அவமானத்திற்கு உள்ளாகி அசிங்கப்படுவது நம் சமுதாய அப்பாவி மக்களே.

இதே போல்தான், சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய புள்ளி விவர கணக்கும் நம்மை எல்லாம் அவமானத்திற்கு உள்ளாக்கியது. இனிமேலும் நாம் அனைவரும் இதுபோன்ற சமுதாயத்தை அசிங்க படுத்தும் ஆதாரமற்ற புள்ளி விவர கணக்கெடுப்புகளை கண்மூடித்தனமாக நம்பாமல் தீர ஆராய்ந்து அலசி உண்மை என்னவென்றும், தில்லுமுல்லுகள் என்வென்றும் நன்கு புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.

1 ஆகஸ்ட், 2009

மனித உரிமை பாதுகாப்பு குழுவினர் மீதான சீனாவின் அடக்குமுறை!

சீனாவின் வீரிய ஆற்றல் படைத்த மனித உரிமை பாதுகாப்பு குழு சட்ட வல்லுனர்கள் மீது சீனா மேலும் மேலும் அளவுகடந்த அடக்குமுறைகளை பிரயோகித்து வருகிறது.

சீனாவின் மனித உரிமை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சட்ட வல்லுனர்களின் இயங்கு தளமாக கருதபட்ட, கடந்த ஜூலை 17 அன்று அரசு அதிகாரிளால் மூடப்பட்டதுமான 'கொங்மெங்' அமைப்பின் நிறுவனர்களின் ஒருவரான 36 வயது 'க்சு ஜியோங்' பீக்கிங்கில் ஜூலை 29 அன்று விடியற்காலை கைது செய்யப்பட்டார்.

'கொங்மெங்' அமைப்பின் நிதி கணக்குகளி்ல் சில பிணக்குகள்(?) பெயரில் வருமானவரி அலுவலகம் ஜூலை மாத இடையில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக கடந்த வெள்ளிக் கிழமை இவ்வமைப்பின் சட்டபூர்வ பிரதிநிதியான 'க்சு ஜ்யோங்' வருமானவரி அலுவலகத்திற்குநேரில் சென்று ஆஜர் ஆகியிருக்க வேண்டும் என அமைப்பு சார்பு வக்கீல் 'லி க்சியோங்பிங்' கூறினார்.

எய்ட்ஸ் மற்றும் ஹெபாடிடிஸ் (Hepatitis) நோயாளர்களை தீண்டப்படாதவர்களாக கருதும் சமுதாய மனப்போக்கினை கண்டித்து எதிர்த்து போராடும் மற்றுமொரு அமைப்பான 'இ ரென் பிங்' (Yi Ren Ping) சங்கத்தின் அலுவலகங்களையும் ஜூலை 29 அன்று காவல் துறையினர் முற்றுகையிட்டு அனைத்து கோப்புகளையும் கைப்பற்றினர். இச்சங்கமானது கலப்பட பால் மாவு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பாக 'கொங்மெங்' அமைப்புடன் சேர்ந்து நீதிக்கு வாதாடியது.

'கொங்மெங்'கிற்கு ஜூலை 14 அன்றைய தேதியில் வருமான வரி அலுவலகத்திலிருந்து 1,4 மில்லியன் யுவான் (1,9 மில்லியன் ஈரோ) வருமானவரி பாக்கி தொகை கேட்டு வந்த ஒரு கடிததிலிருந்துதான் முழு பிரச்சினையும் ஆரம்பித்தது. இக்கடிதம் கிடைத்த மறுநாள் 'க்சு ஜியோங்' வெளியிட்ட அறிக்கையில் இதனை 'அடாவடி நடவடிக்கை' என குறிப்பிட்டார்.

அமெரிக்கவின் 'யால்' சட்டக்கல்லூரியின் தானத்திலிருந்து பெறப்பட்ட 'கொங்மெங்'கின் வருமானத்தின் நிதிக்கணக்குகள் வருமான வரித்துறையினருக்கு போதிய வேளைகளிகல் சரிவர சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதை தவிர, குறிப்பிட்ட திட்டங்களுக்கு என்று இன்னும் ஒதுக்கப்படாத ஒரு சில முன்பணத் தொகைகள் மட்டுமே இன்னும் கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தது என்றும் அவர் கூறினார்.

அரசாங்க உத்தரவு பெறாத அன்னிய கூலிகளின் அரசு சார்பற்ற அமைப்பாக 'கொங்மெங்' செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டின் பெயரில்தான் ஜூலை 17 அன்று காவல் துறையினர் இதன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


சீனாவின பலதரப்பட்ட அரசு சார்பற்ற அமைப்புகளைப் போல 'கொங்மெங்' ஒரு சட்ட அலோசனை வழங்கும் தளமாக பதியப்பட்டிருக்கிறது. இதன்படி, 2003 இல் 'கொங்மெங்' வியாபார தொழில் நோக்கற்ற அமைப்பாகவே பதியப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஓராண்டு கழித்து அரசு அதிகாரிகள் இதனை மூடும்படி உத்தரவு போட்டிருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே 'கொங்மெங்' சட்டவல்லுனர்கள் பலதரப்பட்ட முக்கியம் வாய்ந்த பொது வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வாதாடி வந்துள்ளனர். கலப்பட பால் மாவு வழக்குகள் மட்டுமல்லாது, காவல் துறையினரின் பொதுமக்கள் மீதான அத்துமீறிய அடாவடி செயல்களை எதிர்த்தும், 'பாலுன் கோங்' (Falun Gong) சார்பு மத குழுவினர் சார்பாகவும், திபெத்தியர்கள் சார்பாகவும் பலவகைப்பட்ட விவகாரங்களில் சட்ட ஆலோசனைகள் தந்தும் சார்பான வழக்குகளில் வாதாடியும் வருகின்றனர். சமீபத்தில், சீன அரசாங்கம் அனைத்து கணினிகளிலும் கட்டாயமாக நிறுவப்போகும் கட்டுப்பாட்டு-கண்கானிப்பு மென்பொருள் திட்டத்தை எதிர்த்தும் இவ்வமைப்பு குறல் கொடுத்தது. ஜூன் மாத வாக்கில், மிகுந்த கேள்விக்குள்ளான திபெத்தின் சீன பொருளாதர வளர்ச்சி சம்பந்தமாக மிகவும் கவலைக் குறிய ஒரு விசாரணைக் கட்டுரையையும் 'கொங்மெங்' வெளியிட்டிருந்தது.

இதை எல்லாம் சகித்து கொள்ள முடியாத சீன அரசு 'கொங்மெங்' கை அடக்கி அச்சுறுத்தி மொத்த மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகளையும் நசுக்கி வருகிறது. அரசாங்கத்தின் எல்லை மீறிய அழுத்தம் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே இவை போன்ற இருபதுக்கும் அதிகமான அமைப்புகள் மற்றும் இதன் கிளைகள் தங்கள் பதிவு பத்திரங்களை புதுப்பிக்காமல் விட்டுவிட்டன.

இவ்வமைப்புகளை சேர்ந்த அங்கத்தினர்கள் சிலரை அரச பாதுகாப்பு குழுக்கள் ஆள் கடத்தல் செய்தும் மிரட்டி வந்தனர். இப்படித்தான் 2008இல் 'கொங்மெங்'இன் மற்றுமொரு நிறுவரான 'டெங் பிஅஓ' கடத்தப்பட்டார்.

சட்ட வல்லுனரும் 'பீக்கிங்'கின் தொலை தொடர்பு பல்கலை கழகத்தின் சட்டத்துறை பேராசிரியரும், 'பீக்கிங்'கின் 'ஹைடியன்' நகர மக்கள் அவை பிரதிநிதியுமான 'க்சு ஜியோங்' சதா எப்போது களங்களில் இரங்கி பாதிக்கப் பட்டவர்களின் விசயங்களை தொடர்ந்து சேகரிப்பதிலேயே மும்முரமாய் இருப்பார்.

அகிம்சை கொள்கையை பின்பற்றும் இவர், இவரது மற்ற சில சக போராளிகள் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் 'பீக்கிங்'கின் "மர்ம சிறை"யின் காவலர்களை எதிர்த்தும் அவர்களின் கோபத்திற்கு ஆளானதும் உண்டாம்.

நீண்ட காலமாகவே அதிகாரிகள் இது போன்ற அரசு சார்பற்ற அமைப்புகள் அனைத்தையும் முக்கியமாக 'கொங்மெங்' போன்ற அமைப்புகளை அரச இயந்திரத்தின் கட்டுப்பாட்டை மீறி வருவதாகவும், மேற்கத்திய நாட்டு கூலிகள் தயவில் செயல்படுவதாகவும் கருதி வந்தனர். மேலும் இவை போன்றவைகளின் நடவடிக்கைகளினால், நாட்டில் புதிதாக 'நிறப்புரட்சி' (Color revolution) உருவாக வாய்ப்பு இருப்பதாக அரசாங்கம் நம்பி வருகிறது என்றும் 'கொங்மெங்'கை நெருங்கிய மற்றுமொரு அரசு சார்பற்ற சட்ட வல்லுணரான 'லி பாங்பிங்' விளக்கினார்.

ஆதாரம் : லெ மோந் (www.lemonde.fr)

மதவெறி : பாக்கிஸ்தானில் ஆறு கிறித்தவர்கள் படுகொலை!

வேற்று மதத்தினர் தங்களது பெரும்பான்மை மத திரு நூலை அவமதித்த காரணத்திற்காக, மத வெறி தலைக்கேறி கோபங்கொண்ட ஒரு குழுவினரின் காட்டுமிராண்டித் தனத்தினால் சிறுபான்மை வேற்று மதத்தை சார்ந்த ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டு மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

பாக்கிஸ்தானின் அதிகாரபூர்வ செய்திகளின்படி, இதன் மேற்கில் உள்ள கொர்ஜா கிராமத்தில், தங்கள் மதத் திருநூல் 'குர் ஆனை' அவமத்தித்த காரணத்திற்காக, பாக்கிஸ்தானிய அதிகார பூர்வ பெரும்பான்மை இஸ்லாமிய மதம் சார்ந்த ஒரு தீவிர குழுவினர் தங்கள் மதவெறி தலைக்கேறி ஆத்திரத்தில் சிறுபான்மை கிறித்துவ மதத்தை சார்ந்த ஆறு பேரை ஆகஸ்ட் 1 சனிக்கிழமை அன்று படுகொலை செய்துள்ளனர். மேலும் மற்றும் இதில் பத்து பேர் காயமடைந்தும் 40 வீடுகளும் ஒரு ஆலயமும் தீக்கிரையாகின.

படுகொலை செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவர் குழந்தை ஆவார் என சிறுபான்மை பொறுப்பு மந்திரி 'ஷபாஜ் பத்தி' அறிவித்தார். தங்களது மத திருநூலை அவமத்ததாக கூறும் கொலை வெறிபிடித்த குழுவினரின் இந்த வாதம் நம்பகத்தன்மை அற்றது என்றும் மேலும் இறந்தவர்கள் அனைவரும் உயிருடன் தீயிட்டு எரித்து கொல்லப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

பாக்கிஸ்தானில் 3% உள்ள கிறித்துவ மத்தத்தினர்களை பயமுறுத்துவதற்கு இவர்கள் மீது இஸ்லாமியர்கள் கடவுள் மற்றும் திருநூல் அவமதிப்பு போன்ற குற்றங்களை சுமத்தி சதா அழுத்தம் கொடுத்து வருகின்றனர் எனவும் அறியப்படுகிறது.

மத தீவிரவாத போக்குள்ளவர்களின் கிறித்துவ மத எதிர்ப்பு வன்மைகளை கண்டித்து ஆகஸ்ட் சனி 1 அன்று லாகூரில் மனித உரிமை பாதுகாப்புச் சங்கத்தினர் சிலர் ஆர்ப்பாடம் செய்தனர்.

ஆதாரம் : லெ மோந் ( www.lemonde.fr )

22 செப்டம்பர், 2007

கொலைவெறி தூண்டுதலை எதிர்த்து கண்டன அறிவிப்பு!

கலைஞர் தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு எதிராக கொலைவெறியை தூண்டி இருக்கும் பா.ஜ.க முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி, "ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள்" என்ற இந்த கூற்றை எதிர்த்து வன்மையுடனான எனது கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

மாசிலா.

(இப்பதிவிற்கு பின்னூட்ட வசதிகள் நிறுத்தப்பட்டன).