மெட்ரோ எனும் சுரங்க வழி இரயில் எடுக்க தாழ்வாரத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது 30/35 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஏதோ போதை பொருள் உட்கொண்டவர்போல் தன் சுய கட்டுப்பாட்டை இழந்த நிலையில் உலாத்திக் கொண்டிருந்தார்.
பிறகு நானும் ஏனைய அனைத்து பயணிகளும் இரயிலில் ஏறி அமர்ந்து புறப்பாடுக்கு காத்துக் கொண்டிருந்தோம். கடைசி நேரத்தில் கதவுகள் மூடும் வேளை பார்த்து அதே ஆடவர் இரயிலில் நுழைய முயற்சித்து, கதவிடுக்கில் சிக்கிக்கொண்டார். இது ஒன்றும் பெரிய ஆபத்தானது இல்லை. கொஞ்சம் திமிரி தள்ளினால் கதவு திறந்து இரயிலுள் நுழைந்து விடலாம். ஆனால், அந்த மனிதரோ வேண்டுமென்றே அந்த இடுக்கில் இருந்து விடுபடாமல், எதுவும் நடக்காதது போல் கொஞ்சம் இருமாப்புடன் வெளியே எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். இப்படி இருந்தால் தானியங்கி முறை இரயில் கிளம்பாது. அனைத்து பயணிகளும் இவருக்காக காத்துக்கொண்டிருந்தோம்
அவர் அருகாமையில் இருந்த நான் கொஞ்சம் பரிதாபப்பட்டு அதே சமயம் ஆத்திரமும் கொண்டு மேலாடையை பற்றி உள்ளுக்கு இழுத்தேன். நான் செய்த இந்த செயலை பொறுக்காத அவர் என் மீது கோபம் கொண்டு, என்னை அடிப்பேன் உதைப்பேன் மூஞ்சை உடைப்பேன் என சண்டைக்கு வந்து பயமுறுத்தினார்.
சுய நிலமையில் இல்லாத அவரது இந்த போக்கை கண்டு நான் எதுவும் வீண் தகராறு செய்யவில்லை. மேலும் இதனால் எனக்கு போலீசாரோடு பிரச்சினனகள் ஏற்படும் என்பதை அறியாமல் இல்லை.
நான் என்னுடைய செய்கையின் உட்கருத்தை சொன்னேன். பிறகு கொஞ்சம் அமைதியான அவர் நான் இந்திய பூர்வீகம் என்பதை புர்ந்துகொண்டு, என்னை "நீ எந்த நாட்டு பிரஜை" என்று கேட்டார்.
நான் "அதையெல்லாம் உன்னிடம் சொல்ல விரும்பவில்லை, முதலில் நீ யார் அதை கேட்பதற்கு?" என கோபத்துடன் பதிலலித்தேன்.
உடனை அவர் தன்னை பிரஞ்சில் அசிங்கமாக விளியப்படும் "மனூஷ்" எனும் நாடோடி இனத்தவர் என அறிமுகப் படுத்திக்கொண்டார். மேலும் அவர் சொன்னதுதான் என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது. இந்த "மனூஷ்" என்பவர்கள் இந்திய பூர்வீகமாம். பாரசீகத்தில் இருந்த காலநடையாக வந்த இவர்கள் சிந்தி எனப்படுபவர்களாம். இவர்கள் பேசும் மொழியும் சிந்தியாம்.
விந்தையான உலகம். விந்தையான மனிதர்கள். எதிர்பாராத சந்திப்புகள்.
இதில் கடைசியில் இன்னொமொரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால், அந்த மனிதரே என்னை பாதுகாப்பாக இருக்கும்படி ஒரு சகோதர பாசத்துடன் அறிவுரை செய்துவிட்டு சென்றார்.
நன்றி.
பிறகு நானும் ஏனைய அனைத்து பயணிகளும் இரயிலில் ஏறி அமர்ந்து புறப்பாடுக்கு காத்துக் கொண்டிருந்தோம். கடைசி நேரத்தில் கதவுகள் மூடும் வேளை பார்த்து அதே ஆடவர் இரயிலில் நுழைய முயற்சித்து, கதவிடுக்கில் சிக்கிக்கொண்டார். இது ஒன்றும் பெரிய ஆபத்தானது இல்லை. கொஞ்சம் திமிரி தள்ளினால் கதவு திறந்து இரயிலுள் நுழைந்து விடலாம். ஆனால், அந்த மனிதரோ வேண்டுமென்றே அந்த இடுக்கில் இருந்து விடுபடாமல், எதுவும் நடக்காதது போல் கொஞ்சம் இருமாப்புடன் வெளியே எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். இப்படி இருந்தால் தானியங்கி முறை இரயில் கிளம்பாது. அனைத்து பயணிகளும் இவருக்காக காத்துக்கொண்டிருந்தோம்
அவர் அருகாமையில் இருந்த நான் கொஞ்சம் பரிதாபப்பட்டு அதே சமயம் ஆத்திரமும் கொண்டு மேலாடையை பற்றி உள்ளுக்கு இழுத்தேன். நான் செய்த இந்த செயலை பொறுக்காத அவர் என் மீது கோபம் கொண்டு, என்னை அடிப்பேன் உதைப்பேன் மூஞ்சை உடைப்பேன் என சண்டைக்கு வந்து பயமுறுத்தினார்.
சுய நிலமையில் இல்லாத அவரது இந்த போக்கை கண்டு நான் எதுவும் வீண் தகராறு செய்யவில்லை. மேலும் இதனால் எனக்கு போலீசாரோடு பிரச்சினனகள் ஏற்படும் என்பதை அறியாமல் இல்லை.
நான் என்னுடைய செய்கையின் உட்கருத்தை சொன்னேன். பிறகு கொஞ்சம் அமைதியான அவர் நான் இந்திய பூர்வீகம் என்பதை புர்ந்துகொண்டு, என்னை "நீ எந்த நாட்டு பிரஜை" என்று கேட்டார்.
நான் "அதையெல்லாம் உன்னிடம் சொல்ல விரும்பவில்லை, முதலில் நீ யார் அதை கேட்பதற்கு?" என கோபத்துடன் பதிலலித்தேன்.
உடனை அவர் தன்னை பிரஞ்சில் அசிங்கமாக விளியப்படும் "மனூஷ்" எனும் நாடோடி இனத்தவர் என அறிமுகப் படுத்திக்கொண்டார். மேலும் அவர் சொன்னதுதான் என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது. இந்த "மனூஷ்" என்பவர்கள் இந்திய பூர்வீகமாம். பாரசீகத்தில் இருந்த காலநடையாக வந்த இவர்கள் சிந்தி எனப்படுபவர்களாம். இவர்கள் பேசும் மொழியும் சிந்தியாம்.
விந்தையான உலகம். விந்தையான மனிதர்கள். எதிர்பாராத சந்திப்புகள்.
இதில் கடைசியில் இன்னொமொரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால், அந்த மனிதரே என்னை பாதுகாப்பாக இருக்கும்படி ஒரு சகோதர பாசத்துடன் அறிவுரை செய்துவிட்டு சென்றார்.
நன்றி.
சுவையான சந்திப்பு,ஆச்சரியமான தகவல், நாமெல்லாம் ஒரு இடத்தில் இருந்தே வந்துள்ளோம். இந்தத் தலை,கால்(புரியுமெனக் கருதுகிறேன்) எல்லாம் இடைச் செருகலே!!!
பதிலளிநீக்குமாசிலா,
பதிலளிநீக்கு//விந்தையான உலகம். விந்தையான மனிதர்கள். எதிர்பாராத சந்திப்புகள்.//
உண்மையில் இது ஒரு விந்தையான அனுபவம்.
பாரிஸ் ஆக இருக்கவே இத்தோடு போயிற்று, இது போன்ற போதையில் பொது இடத்தில(ஹோட்டல்) வாந்தி எடுத்த ஒருவருடன் எனக்கும் அனுபவம் ஏற்பட்டது.
ஆனால் அவர் போலிஸ் அதிகாரி என்று சொல்லி ஒரு போன் பண்ணினா போதும் உன்னை தூக்கிட்டு போய் பின்னிடுவாங்க என்று மிரட்டியது தான் மிச்சம்!
தமிழ்நாட்டுக்கு வந்தா இது போல எல்லாம் செய்யாதிங்க , யார் கண்டா அது போன்றவங்க அமைச்சராகவோ , எம்.எல்.ஏவாகவோ கூட இருக்கலாம் :-))
தெற்கு, மத்திய ஆசிய மக்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் காலம்காலமாக இருந்த தொடர்பு சுவாரசியமானது.
பதிலளிநீக்குஇரு வருடங்களுக்கு முன் ஒரு பதிவர் தான் ஒரு கிழக்கு ஐரோப்பிய திரைப்படத்தை பார்த்தபொழுது கேட்ட வார்த்தை பஞ்சாபி மொழியை ஒத்திருந்தது கண்டு ஆச்சரியமடைந்ததாக தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பாக்கிஸ்தானின் சிந்து மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட சிந்தி மக்கள் இஸ்லாமின் பரவலின்போது விரட்டப்பட்டிருக்கலாம். அப்பொழுது இவர்கள் மேற்கு நோக்கி நகர்ந்திருக்கலாம்.
இந்தியாவில் பூட்டானி, கிஷானி, மன்சந்தானி என பெயர்களைக் வைத்துக்கொண்டு( அத்வானி எனும் அரசியல்வாதியைத் தவிர்த்து) சிந்திகள் பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டிருப்பார்கள்.
ஹங்கேரி(Hungary) என்ற பெயரில் இருக்கும் 'Hun' என்ற பெயர், ஐரோப்பவில் 5-10ஆம் நூற்றாண்டுகளில் படையெடுத்த சீனர்களின் பெயரால் ஏற்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.
இதையும் படிச்சுப் பாருங்க..
பதிலளிநீக்குhttp://www.romani.org/rishi/rnames.html
மாசிலா... இந்திய தொடர்பு இருக்கு என்று சொல்லப்படும் இந்த நாடோடிகள் எனப்படுவோர் நிறைய கிழக்கு ஜரோப்பா நாடுகளில் உள்ளனர்
பதிலளிநீக்குயோகன் பாரிஸ்(Johan-Paris : // நாமெல்லாம் ஒரு இடத்தில் இருந்தே வந்துள்ளோம். இந்தத் தலை,கால்(புரியுமெனக் கருதுகிறேன்) எல்லாம் இடைச் செருகலே!!!//
பதிலளிநீக்குவாங்க யோகன் பாரிஸ். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா. ஆம், நீங்கள் கூறுவதுபோல் நாமெல்லாம் ஏறக்குறைய (ஆப்ரிக்க) ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் போல்தான்.
பிறகுதான் அவரரும் பூலோகம், தட்பவெப்ப நிலைகள், சுற்றுச்சூழல் காரணமாக நமக்கென சில பழக்கங்களை உருவாக்கிக்கொண்டு பாகுபாடு பார்த்து ஒருவரை ஒருவர் குறை சொல்லியும், பயந்தும், மிரண்டும், உயர்த்தியும், தாழ்த்தியும் வாழ்ந்து வருகிறோம்.
இந்த வகை நாடோடிகளுக்கும் தென்னிந்திய கருப்பின திராவிடர்களுக்கு கலப்படம் இல்லையென்றே நினைக்கிறேன்.
எப்படியோ, நாம் அனைவரும் மனிதர்களே.
வாங்க வவ்வால். உங்க கருத்திற்குன் அனுபவ பகிர்தலுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குவவ்வால் : //தமிழ்நாட்டுக்கு வந்தா இது போல எல்லாம் செய்யாதிங்க , யார் கண்டா அது போன்றவங்க அமைச்சராகவோ , எம்.எல்.ஏவாகவோ கூட இருக்கலாம் :-))//
அதென்னது "கூட" என்றொரு இழுப்பு. அப்படியேதான். அவர்கள் இதையும் செய்வார்கள் இதற்கு மேலும் செய்வார்கள். இவைகளைத்தான் அன்றாட ஊடகங்களில் பார்க்கிறோமே.
பெரியவங்க "அரசியல் ஒரு சாக்கடை" என்பது ச்சும்மாவா? எல்லாம் ஒரு காரணத்தோடத்தான்.
வாங்க பெத்த ராயுடு. நிறைய சுவாரசியமான செய்திகளை அறிய கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
பதிலளிநீக்கு//பாக்கிஸ்தானின் சிந்து மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட சிந்தி மக்கள் இஸ்லாமின் பரவலின்போது விரட்டப்பட்டிருக்கலாம். அப்பொழுது இவர்கள் மேற்கு நோக்கி நகர்ந்திருக்கலாம்.// இல்லை ஐயா. இவர் பாரசீகம் எனப்படும் ஈரானை பூர்வீகமாக கொண்டவராம்.
நான்கூட ஒராண்டுக்கு முன் ஈரானிய மக்கள் குழுக்கள் வாழ்முறை பற்றிய ஒரு ஆவணப்படம் பார்த்தேன். அதில் ஈரானில் நகரங்களில் அல்லாமல் பாலைவனப்பகுதிகளில் ஒரு சில மக்கள் கூட்டங்கள் இசுலாமியர் அல்லாதவர்கள்(இன்றும்கூட). அவர்கள் வணங்குவது சூரியனை. அவர்களை நெருப்பு மூட்டி யாகம் செய்கிறவர்கள். அவர்கள் படைக்கும்போது காய்கறிகள் பழவகைகளும் உண்டு. அவர்கள் பேசும் மொழியும் வேறு. இதை பார்த்ததும் உடனே எனக்கு இந்து மதத்தின் நியாபகம் வந்தது, நீங்களும் நினைப்பது போல். மேலும், அவ்வின பெண்கள் தலையை முக்காடிட்டு மூடுவதும் இல்லை. இவர்களைப்பற்றிய தனிப்பட்ட ஆராய்ச்சி யாரேனும் செய்தார்களா என தெரியவில்லை.
//ஹங்கேரி(Hungary) என்ற பெயரில் இருக்கும் 'Hun' என்ற பெயர், ஐரோப்பவில் 5-10ஆம் நூற்றாண்டுகளில் படையெடுத்த சீனர்களின் பெயரால் ஏற்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.//
இத்தகவலுக்கு மிக்க நன்றி பெத்த ராயுடு ஐயா.
மாசிலா
பதிலளிநீக்குசுவாரசியமான பதிவு.நன்றி.
ஹூனர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் மத்திய ஆசியாவை சேர்ந்தவர்கள்.அட்டிலா த ஹன் போன்ற மாபெரும் தளபதிகள் அவர்கள் இனத்தில் உண்டு.ஹூனர்கள் ஐரோப்பா மேல் படை எடுத்து ரோம் வரை சென்று கடைசியில் ஹங்கேரியில் தங்கிவிட்டனர்.
இந்தியாவுக்கு தோரமானா எனும் தளபதி தலைமையில் வந்த ஹூனர்கள் கடைசியில் இங்கேயெ செட்டிலாகி இந்துமதத்தை தழுவி ராஜஸ்தானில் தங்கி விட்டனர்.ராஜபுத்திர மக்கள் அனைவரும் ஹூனர்கள் தான்
சின்னக்குட்டி : //இந்திய தொடர்பு இருக்கு என்று சொல்லப்படும் இந்த நாடோடிகள் எனப்படுவோர் நிறைய கிழக்கு ஜரோப்பா நாடுகளில் உள்ளனர்//
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிடுவது முக்கியமாக ருமேனிய வகை "ஜித்தான்" எனப்படும் நாடோடிகள். Notre dame de Paris என்கிற அனிமேஷன் படத்தில் வரும் நாடோடி கும்பல்கள் இவர்கள்தான். இட்லர் தன்னுடைய அராஜக ஆட்சியின்போது யூதர்களைப்போலவே இவர்களையும் வேட்டை ஆடினான். இவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்டனர். இன்றும் இவர்கள் ஐரோப்பிய அனைத்து நாடுகளிலும் பொது சமுதாயங்கள் எதிலும் ஒட்டாமல் விளிம்பு நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு நிரந்தர கல்வீடுகள் வாழ்க்கை பிடிக்காது. கூடாரம் போட்டு வெளியில் கும்பலாக வாழ்வதே இவர்களின் பிடித்த பண்பாடு. தேவைகளுக்கேற்ப கூடாரங்களை கலைத்து அடிக்கடி வெவ்வேறு இடம் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
இந்த காரணத்தால், இவர்கள் பிரான்சில் எந்த வித பொருட்கள் வாங்கினாலும் அதற்கு விற்பனை வரி கிடையாது. வேறு எந்த வரியும் அரசாங்கத்திற்கு கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப் பெற்றுள்ளனர். இவர்கள் நல்ல நாட்டிய மட்டும் இசை கலைஞர்கள்.
நான் சந்தித்த ஆடவர் பாரசீகத்தில் இருந்து இந்தியாவுக்கு குடி புகுந்தவர் வகை. 'ஜித்தான்' மக்கள் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு வந்த நாடோடிகள்.
செல்வன் : //ஹூனர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் மத்திய ஆசியாவை சேர்ந்தவர்கள்.அட்டிலா த ஹன் போன்ற மாபெரும் தளபதிகள் அவர்கள் இனத்தில் உண்டு. ஹூனர்கள் ஐரோப்பா மேல் படை எடுத்து ரோம் வரை சென்று கடைசியில் ஹங்கேரியில் தங்கிவிட்டனர்.//
பதிலளிநீக்குவாங்க செல்வன். மிக அருமையான தகவல்வகளை கொண்டுவந்திருக்கிறீர்கள். நீங்களும் இவைகளை பற்றிய ஆராய்ச்சிகள் சில செய்து எங்களுக்கு விளக்கமாக எழுதுக்களேன். நீங்கள் கூறியிருப்பதுபோல் இந்த மனித குடியேற்றங்கள், நடமாட்டங்கள் அனைத்து வரலாற்று விசயங்களும் மிகவும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.
பதிவர் பெத்த ராயுடு இங்கு தன் பின்னூட்டத்தில் கூறியிருக்கும் //ஹங்கேரி(Hungary) என்ற பெயரில் இருக்கும் 'Hun' என்ற பெயர், ஐரோப்பவில் 5-10ஆம் நூற்றாண்டுகளில் படையெடுத்த சீனர்களின் பெயரால் ஏற்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.// இந்த கருத்திற்கும் உங்களின் வாதத்திற்கும் சில ஒற்றுமைகள் இருப்பதுபோல் தெரிகிறது.
நம் வாழ்நாட்களில் பாதி நேரங்களை நம் பூர்வீகம் பற்றிய ஆய்வுகளிலேயே செலவிடுகிறோம் போல் தெரிகிறது.
//இந்தியாவுக்கு தோரமானா எனும் தளபதி தலைமையில் வந்த ஹூனர்கள் கடைசியில் இங்கேயெ செட்டிலாகி இந்துமதத்தை தழுவி ராஜஸ்தானில் தங்கி விட்டனர்.ராஜபுத்திர மக்கள் அனைவரும் ஹூனர்கள் தான்// அறிய இத்தகவல்களுக்கு மிக்க நன்றி. உங்கள் ஊக்கத்திற்கும் நன்றி செல்வன்.
//இந்தியாவுக்கு தோரமானா எனும் தளபதி தலைமையில் வந்த ஹூனர்கள் கடைசியில் இங்கேயெ செட்டிலாகி இந்துமதத்தை தழுவி ராஜஸ்தானில் தங்கி விட்டனர்.ராஜபுத்திர மக்கள் அனைவரும் ஹூனர்கள் தான்//
பதிலளிநீக்குசெல்வன் இது ஒரு ஆதாரமற்ற , இந்தியாவில் உலவும் எண்ணற்ற செவிவழிகதைகளில் ஒன்று தான். ராஜ்புத் பூர்வீகமாக இந்தியாவை(ஹிந்துஸ்தான்) சேர்ந்தவர்கள் தான்.
இன்னும் சொல்ல போனால் ராமனின் வழிதோன்றல் , கிருஷ்ணரின் வழித்தோன்றல் என்று சொல்லப்படுபவர்கள்.
இது போல பல்லவர்கள் பற்றியும் கதை உண்டு , ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று, ஆனால் அவற்றுக்கு எல்லாம் ஆதாரம் கிடையாது.
அதிலும் இன்றைய ஆப்கானிஸ்தான் எல்லாம் அப்பொது ஹிந்துஸ்தானில் ஒரு பகுதி தான். எல்லாமே அப்போ தனி நாடு தானே! இப்போதைய இந்தியாவிற்குள்ளேயே அக்காலத்தில் எத்தனை நாடுகள் இருந்தது என்பது தெரியும் தானே!
வவ்வால்
பதிலளிநீக்குஅது செவி வழி செய்தி இல்லை.பல அறிவியலாளர்கள் சொல்லும் வரலாறு அதுதான்.
சில வலைதளங்களை தந்திருக்கிறேன்.படித்து பாருங்கள்.
http://www.hyperhistory.com/online_n2/civil_n2/histscript4_n2/rajputs.html
http://rajputana.htmlplanet.com/scy_raj/scy_raj1.html
////பாக்கிஸ்தானின் சிந்து மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட சிந்தி மக்கள் இஸ்லாமின் பரவலின்போது விரட்டப்பட்டிருக்கலாம். அப்பொழுது இவர்கள் மேற்கு நோக்கி நகர்ந்திருக்கலாம்.// இல்லை ஐயா. இவர் பாரசீகம் எனப்படும் ஈரானை பூர்வீகமாக கொண்டவராம். //
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிடுவது 'பார்ஸி' இன மக்களை என நினைக்கிறேன். அவர்கள் 'தீ'யை வழிபடுபவர்கள். 'ஸொராஸ்ட்ரியன்ஸ்' (zorastrians) என்று பண்டைய பாரசீகத்தில் வாழ்ந்த குடிமக்கள். இவர்களில் சிலர் இஸ்லாமிய பரவலின்போது இந்தியா வந்து குஜராத்திலும், மஹாராஷ்ட்ராவிலும் குடியேறினார்கள். இந்தியாவின் சிறந்த (எடுத்துக்காட்டு - exemplary)சிறுபாண்மையினராக விளங்கும் பார்ஸிகள் பல துறைகளில் புகழ் பெற்றவர்கள். அவர்களில் சிலர் டாடா (JRD, ரத்தன்), நானி பல்கிவாலா, ஸுபின் மேஹ்தா, ஹோமி பாபா, பீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா போன்றோர்.
சிந்தி மக்கள் பெரும்பாலும் ஆடை வியாபாரத்தில் ஈடுபடுவோர். அவர்கள் நீரை 'ஜுலெலால்' என்று வணங்குவார்கள். பொதுவாக சிந்திகள் வியாபாரத்தில் எதுவும் செய்வார்கள் என்று ஒரு கருத்து உண்டு. எடுத்துக்காட்டாக, பம்பாயில் 'உல்லாஸ் நகர்' பகுதியில் பல போலி வெளிநாட்டுப் பொருட்களை தயாரித்து 'Made in USA' என்று விற்பார்கள். கேட்டால் 'Ulhasnagar Sindhi Association' என்று கூறிவிடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். பொதுவாக மிகவும் கஞ்சத்தனம் கொண்டவர்கள். இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? என்னுடைய அறைத்தோழனாக இரு வருடங்கள் ஒரு சிந்தி இருந்தார். அவர் ஒரு 'முன்மாதிரி' சிந்தியாக இருந்தார் :) அப்போது தெரிந்து கொண்டதுதான்.
//**இந்த வகை நாடோடிகளுக்கும் தென்னிந்திய கருப்பின திராவிடர்களுக்கு கலப்படம் இல்லையென்றே நினைக்கிறேன்.*//
பதிலளிநீக்குஅய்யா என்ன சொல்லுறீங்க...
மாசிலா,
பதிலளிநீக்குசுவையான தகவல், அதை சுவைபட நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இடுகையின் செய்தி வியப்பளிக்கிறது.
கோவி.கண்ணன் : //மாசிலா,
பதிலளிநீக்குசுவையான தகவல், அதை சுவைபட நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இடுகையின் செய்தி வியப்பளிக்கிறது.//
வாங்க ஐயா.
பாரிஸ், இலண்டன் போன்ற மாநகரங்களில் எண்ணிலடங்கா இனத்து மக்கள் எங்கும் நிறைந்திருப்பர். ஒரு சில சமயங்களில் இது நமக்கு கொஞ்சம் எரிச்சல் ஊட்டுவதாக இருந்தாலும் இதையே வேறு கோணத்தில் பார்த்தால் நான் இதிலிருந்து நிறைய பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அகிலம் முழுதும் இருந்து வந்திருக்கும் இத்தனை வகை மக்களை சந்திப்பதும் ஒருவகை பெருமை. அத்தனை வகை கலாச்சாரங்கள், மொழிகள், சிரிப்புகள், அழுகைகள், வரலாறுகள், நிறங்கள், இசை, கலை, உணவு வகைகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதில் எனக்கு மிகவும் பிடித்தது கருப்பர்கள் இன சின்ன கைகுழந்தைகள்தான். மிக மிக அழகாக அற்புதான மனதை கொள்ளை கொள்ளும் ஆனந்த காட்சி.
பயணம் என்றாலே எதிர்பாராத சந்திப்புகள்தானே!
வருகை தந்து, கருத்து கூறி ஊக்கமளித்ததற்கு மிக்க நன்றி தோழர் கோவி.கண்ணன்.
வியக்கத்தக்க நட்சித்திர வாரம் முடிந்து நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
சுவையான சந்திப்பு, செய்தி. அவர்களை பற்றி மேலும் தகவல்கள் அறிய முடியுமா என பார்க்கவேண்டும்.
பதிலளிநீக்குபெத்த ராயுடு சொல்வது சரியெ. உல்லாஸ் நகர் சிந்தி அசோஸியேஷன் என சொல்வது இன்றும் நடக்கிறது. பல நகல் பொருட்கள் தயாரிக்கப்பட்டு அசல் பொருளாக மும்பையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நல்ல துணி வகைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மிகவும் கஞ்சர்கள் என்றாலும் சாப்பாடு விசயத்தில் அப்படி இல்லை. இவர்களும் மார்வாடிகள் போல வியாபார ரத்தம்.
TBCD : //**இந்த வகை நாடோடிகளுக்கும் தென்னிந்திய கருப்பின திராவிடர்களுக்கு கலப்படம் இல்லையென்றே நினைக்கிறேன்.**
பதிலளிநீக்குஅய்யா என்ன சொல்லுறீங்க...//
வாங்க TBCD.
ஆமாங்க, முதலில் இவங்க வெள்ளைத்தோல் உடையவங்க. இவங்க வட இந்தியாவிலேயே குடியேறிவங்க.
உங்களுக்கு ஏதாவது புது விசயம் தெரிந்தால் சொல்லுங்கள். அறிந்து கொள்வதற்குத்தானே நாம் இங்கு எல்லோரும் குழுமி இருக்கிறோம்.
உங்கள் வருகைக்கும் கேள்விக்கும் மிக்க நன்றி TBCD அய்யா.
செல்வன்,
பதிலளிநீக்குஇது போன்ற சைட்களில் எதாவது ஆதாரம் தந்து போடுகிறார்களா எனப்பாருங்கள் குத்து மதிப்பாக சொல்லி இருப்பார்கள்.சரி நீங்கள் விக்கி பீடியாவையும் ஒரு தடவை எட்டிப்பாருங்கள் , என்ன சொல்லி இருக்கென்று. ராஜ்புத் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று மட்டும் தான் இருக்கும். விக்கிபீடியா நம்பகம் அர்றது என்று இப்போ நீங்கள் சொல்வீர்கள் :-))
இணையத்தில் இப்படி தான் எதை ஏற்றுக்கொள்வது , அதன் நம்பகத்தன்மையை இதை எல்லாம் பார்க்க வேண்டும்.
பதிவு சுவாரசியமுன்னா அதுக்கு வந்த பின்னூட்டங்கள் அதி சுவாரசியம்.
பதிலளிநீக்குஅருமையான தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி .
வாங்க துளசி கோபால்.
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்திற்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி.
மாசிலா,
பதிலளிநீக்குநல்ல சுவாரசியமான தகவல்கள்.
பதிவுக்கு நன்றி.
தோழர் மாசிலா பாரீஸ் மெட்ரோவில் சில மனிதர்கள் கஞ்சா அடித்துவிட்டு தனியாக ஏதோ பேத்திக் கொண்டிருப்பதை நானும் கண்டிருக்கிறேன். பல மனிதர்கள் அவர்களை அருவருப்புடன் பார்ப்பதும் ஓதுங்கி போவதும் உண்டு. நீங்களோ அவரையும் மதித்து பேசி ஒரு பதிவாகவும் போட்டுவிட்டீர்களே? வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு