உலக வங்கியிடம் கடன் வாங்க
ஆதிவாசி சமூகங்கள்
ஓட்டுப் பொறுக்க
சேரி சமூகங்கள்
மதம் மாற்ற
தலித் சமூகங்கள்
முன்னேற்றத்தை தவிர்க்க
கிராம ஏழைகள் சமூகங்கள்
சரியான கூலி தராமல் ஏமாற்றி பிழைக்க
படிப்பறிவில்லா சமூகங்கள்
கடன் கொடுத்து குடும்பங்களை மூழ்கடிக்க
புதிய நுகர்வோர் வெறி பிடித்த சமூகங்கள்
கடன் கொடுத்து தற்கொலைகளை தூண்ட
விவசாய சமூகங்கள்
கூட்டங்களுக்கு ஆள் பிடிக்க
புறநகர் சமூகங்கள்
போராட்டம் நடத்த காரணம் வேண்டி
ஆதரவற்ற அறியா சமூகங்கள்
எதிர்கட்சியாளர்கள் உயிருடன் இருப்பதை அறிவிக்க
தாழ்த்தப் பட்ட சமூகங்கள்
இவை அனைத்தும்
சீட்டுக்கட்டு ஜோக்கரை போன்ற
ஜோக்கர் சமூகங்களே!
அருமை தோழர்!
பதிலளிநீக்குவேதனையான உண்மை மாசிலா
பதிலளிநீக்குநீங்கள் உணர்வு முழுமையாக எழுதி இருக்கிறீர்கள். ஆசிட் உண்மைகள். அரசியல் வாதிகள் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறீரகள்
பதிலளிநீக்குஅவலங்களை தோலுறிப்பது தொடரட்டும்.
வணக்கம் தமிழச்சி, செல்வன், கோவி.கண்ணன். உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஇச்சமூகங்களை குழம்புக்கு கறிவேப்பிலை மாதிரி உபயோகித்து பின் தூக்கி எறிந்து அழிப்பதில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு.
தேவைப்படும் போது மட்டும் காலி இடங்களை நிறப்பவும், பின் தேவையில்லாத போது எதற்கு உபயோகமற்ற இடைஞ்சல் தரும் கோமாளிகளைப்போல பாவிக்கப் படுகிற சமூகங்களே இவைகள்.
மாற்றுவோம் இது போன்ற அவலங்களை!
நன்றி.
உண்ர்ச்சிப்பூர்வமான கவிதை. மிகச் சிறப்பாக சமூகத்தின் மீதான கோபத்தை சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள், மாசிலா.
பதிலளிநீக்குவீராதி வீரன் வாங்க.
பதிலளிநீக்குசீட்டாட்டத்தில் ஜோக்கர் தனியாக இருக்கையில் எந்த மரியாதையும் கிடையாது. ஆட்டத்தில் வேறெதுவும் சரிப்படவில்ல என்கிற போது இந்த ஜோக்கர் ஐயா அனைத்திற்கு பொருந்துவார். பிறகு மறுபடியும் தேவையில்லாமலே போய்விடுவார்.
சில சமயங்களில் ஜோக்கர் கையிருப்பில் இருக்கும்போதே, இதன் உபயோகமில்லாமலே ஆட்டம் முடிக்க முடியும்.
ஆகவே நான் சொல்ல வந்தது யாதெனில்,
சுய நலத்திற்கு மட்டும் இதுபோன்ற சமூகங்களை பகடைக்காயாக பயன்படுத்தும் இந்த சமுதாய கேடுகளை வெளிக்கூறுவதே!