இப்போதெல்லாம் 'டாட்டா' குழுமம் ஐரோப்பா மீது மிகவும் ஆர்வமுடன் இருக்கிறது. 800 கோடி ஈரோவுக்கு ஆங்கிலேயரின் 'கோரஸ்' எஃகு ஆலையை வாங்குவதற்கு தயாராக இருந்த இக்குழுவின் துணை தொழிற்பிரிவான 'வி.எஸ்.என்.எல்' தொலை தகவல்-தொடர்பு பிரிவானது, சிப்ரிஸ் (Cipris) எனும் பிரஞ்ச் குழுமத்தை வாங்கப்போவதாக செவ்வாய் 16 ஜனவரி அன்று அறிவித்திருக்கிறது. இதன் மூலம் ஐரோப்பாவின் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்கூடங்களை குறிவைத்து வேவை செய்யமுடியும். இக்குழு, முதலில் பிரான்ஸில் காலூன்றி, பிறகு சுவிஸ், ஜெர்மனி மேலும் கடைசியாக இவ்வாண்டின் கடைசியில் இத்தாலியில் தொழிலை நிறுவும்.
'வி.எஸ்.என்.எல்'இன் ஒரு அங்கமாகப்போகும் 'சிப்ரிஸ்', 'போல் தொனெல்லி' என்பவரால் உருவாக்கப்பட்டது. 'சிப்ரிஸ்'இன் 100% முதலையும் இந்தியர் வாங்கிவிட்டாராம். 'சிப்ரிஸ்' என்பது ஒரு உருவமில்லா (virtuel) தொழில் குழுமம். இவர்களுக்கென்று தனியாக தகவல் தொடர்பு ஓடைகள் (traffic lines) கிடையாது. ஓடைகள் வைத்திருக்கும் மற்ற பெரிய குழுக்களிடம் இவர் அவைகளை வாடகை முறையில்பெற்று தொழில் நடத்தி வருகின்றனர். பண்ணாடுகள் அளவில் தொழிலை விறுத்திசெய்ய ஆர்வம் உள்ள தொழிற்கூடங்களுக்கு இது தகவல்-தொடர்பு சேவைகள் அளிக்கும். விவசாய-உணவு, சுற்றுலா, சொகுசு, ஆடை வகைகளில் உள்ள ஐரோப்பாவின் 36 000 சிறு-நடு தொழில்கூடங்கள்தான் இவர்களின் இலக்கம். இதன்படி, 2007ஆம் ஆண்டு 1000 கோடி டாலருக்கு (780 கோடி ஈரோ) வருமானம் உண்டான நல்ல பசையுள்ள தொழிலாக இருக்குமாம். மேலும், ஆண்டொன்றிற்கு 50% வளர்ச்சியுள்ள தொழிலாகவும் இது இருக்குமாம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 'வி.எஸ்.என்.எல்' ஒரு சாதாரண குறுகிய திட்டங்களை கொண்ட பொது நிர்வாகமாக இருந்தது. 2002இல், இந்திய அரசாங்கம் அதன் பங்குகளை திறந்துவிட்டதும் 'டாட்டா' குழுமம் சில பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதிலிருந்தே, இதன்மூலமாக தகவல் தொடர்பு துறையில் 'டாட்டா'வின் இத்துணை குழுமம் பெரிதாக வளர்ந்துவிட்டது. இதே ஆண்டு 'டாட்டா'வின் தலைமைக்குழுவின் உதவியுடன் 100 கோடி டாலருக்கு முதலீடு செய்து 2200 கோடி டாலர் வருமானம பெறுகிறது. இவர்களது இலக்கம் : உலகின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு தகவல்-தொடர்பு மற்றும் கோப்புகள்-குறல் பறிமாற்ற தேவையான ஓடைகள் அடைவதே.
உலகின் முதல்வன் :
2004இல் 'வி.எஸ்.என்.எல்', 13 கோடி டாலருக்கு அமெரிக்கன் டிக்கோ க்லோபல் (Tyco Global Network)இடமிருந்து 60 000 கி.மீ ஆழ்கடல் தந்தி கம்பி (cable) ஓடைகளையும், 2006இல் கனடாவின் டெலிக்லோப் (Teleglobe International)ஐ 23,9 கோடி டாலருக்கும் வாங்கியது. வட அமெரிக்கவிலிருந்து ஆசியா ஆப்பிரிக்கா வழியாக ஐரோப்பா வரை உள்ள 2 கோடி கி.மீ தரை மற்றும் ஆழ்கடல் வழி கம்பிகளின் ஊடே, ஆண்டொன்றுக்கு 210 கோடி நிமிடம் குறல்வழி பறிமாற்றங்கள் செய்யும் இக்குழு இன்றைக்கு, உலகின் முக்கிய முன்னோடி தகவல்-தொடர்பு தலைக்குழு என்று மார் தட்டிக்கொள்ளலாம். இவரது தொழில் போட்டியாளர் அமெரிக்காவின் 'வெரைஜன் அன் எ.டி.டி' (Verizon and ATT)
2006இல் அமெரிக்காவின் 'பாஸ்டன் கன்சல்டிங் க்ரூப்', வளர்ந்துவரும் நாடுகளின் திறமைமிக்க பண்ணாட்டு முகவளர்ச்சி கொண்ட முதல் 100 தொழில் குழுமங்களின் வரிசையில் டாட்டாவையும் குறிப்பிடுகிறது. அகில உலக அளவில் அகன்ற தகவல்-தொடர்பு பறிமாற்ற ஒடைகளை கொண்ட டாட்டாவின் 'வி.எஸ்.என்.எல்' இதன் மிகப்பறந்து விரிந்த தொழில் துறையால் மற்ற தொலை தொடர்பு குழுமங்களைவிட குறைந்த செலவுக்கு சேவைகள் அளிக்க முடியும் என் கணிக்கப்பட்டு உள்ளது.
கடைசியாக, இந்திய பொருளாதாரத்தின் அபாண்ட கடைசி இம்மூன்று ஆண்டுகளின் தொடர்ந்த 8.2% வளர்ச்சி மூலம் 'வி.எஸ்.என்.எல்' நல்ல இலாபம் கண்டு உள்ளது. இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான அதிகரித்துவரும் செய்தி பறிமாற்றங்கள் ஏனைய ஆசிய நாடுகளை உலக பொருளாதார அரங்கில் வலுவுள்ளதாக்க வழிநடத்தி செல்ல உதவும் என கணிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் தலை குழுமமாக விளங்கும் வி.எஸ்.என்.எல், 60 கோடி டாலருக்கு இரண்டு ஆழ்கடல் கம்பி ஓடைகளில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இதில் ஒரு ஓடை ஐரோப்பாவை இந்தியாவுடன் இனைக்கும்.
*
*
ஆதாரம் : "லெ மோந்" , பிரஞ்ச் நாளிதழ்.
மொழி பெயர்ப்பு : மாசிலா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக