ஜனவரி மாதத்து 'பெடியாற்றிக்ஸ்' மருத்துவ இதழ், அமெரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உலகில் முதன்முறையாக, இரத்த புற்றுநோய் பீடித்திருந்த ஒரு குழந்தையை, அதனுடைய சொந்த தொப்புள்கொடியில் உள்ள இரத்த திசுக்களை மறுபடியும் உடசெலுத்தி நோயை முழுமையுடன் குணப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள் என அறிவிக்கிறது.
'டேவிட் மார்கான்' மற்றும் 'ஷெரேட் என். சேல்வி' ஆகியவர்களை தலைமையாக கொண்ட இந்த ஆராய்ச்சி குழுவினர், 'lymphoblastic' எனப்படும் நோய் நிலையை அடைந்திருந்த அந்த மூன்று வயது உடைய குழந்தை எப்படி குணப்படுத்தினோம் என விளக்குகின்றனர்.
முதல் பத்து மாதம் இரசாயன (சிறப்பு புற்றுநோய்) மருத்துவத்திற்கு ('chemotherapy') பிறகும், குழந்தையின் நோய் முற்றி சிக்கலான நிலையில் இருந்தது. இரண்டாவது முறையாக இரசாயன மற்றும் கதிர்வீச்சு மருத்துவ முறைக்கு பிறகு நிலமை கொஞ்சம் சீரானது. அந்த சமயத்தில், பெற்றோர்களின் வேண்டுதல்களுக்கு இணங்க, குழுவினர் மருத்துவத்தை முழுமையாக செயல்படுத்த முடிவுசெய்து, குழந்தைக்கு இரத்த நாளங்கள் மூலம், பிறந்தவேளையில் தொப்புல்கொடி வழியாக எடுத்து சேமிக்கப்பட்டு அதிகுளிர் பாதுகாப்பில் இருந்த மாசற்ற ஆதி இரத்த திசுக்களை உட்செலுத்தினர்.
புதிதாக செலுத்தப்பட்ட இந்த இரத்த திசுக்கள் சிறிது சிறிதாக அனைத்து இரத்த சுரப்பிகளை ஆக்கிரமித்து, நல்ல திசுக்களை உருவாக்கி, நோயை போக்கி நீண்ட குணம் அடைய வழிவகுத்திருப்பதாக நம்பப்படுகிறது. இப்போது ஆறு வயது ஆகிற இந்த குழந்தைக்கு கடந்த மூன்று வருடங்களாக அதன் பழைய நோயை பற்றிய எந்த அறிகுறியும் இல்லையாம்.
அச்சப்படுபவர்களுக்கு மருத்துவர்கள் இங்கு முக்கியமாக குறிப்பிடுவது யாதெனில், புதிதாக உட்செலுத்தப்பட்ட இரத்த திசுக்களில் இரத்த புற்றுநோய் சம்பந்தமான கெட்ட திசுக்கள் ஏதும் இல்லை எனவும், இதனால் அதை நோய் குணப்படுத்த உபயோகிக்க எந்த தடையும் இல்லை என்பதே.
*
*
ஆதாரம் : 'லெ மோந்த்' பிரஞ்ச் நாளேடு.
ஆதாரம் : 'லெ மோந்த்' பிரஞ்ச் நாளேடு.
மொழி பெயர்ப்பு : மாசிலா.
எனது குறிப்பு : இவ்வகை மருத்துவங்களில் தொப்புள்கொடி இரத்த திசுக்களை சேமித்து பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் அதிக செலவு பிடிக்கும். அமெரிக்காவில் தனியார் கிடங்கில் இதற்காகும் செலவு 1300 டாலர்கள். மக்கள் தொகை பெருக்கம் கொண்ட குறிப்பாக வளரும் மற்றும் ஏழை நாடுகளின் அதிகமான நோய்வாய் பட்டிருக்கும் குழந்தைகளை இந்த முறையில் திட்டமிட்டு சிக்கனத்துடன் குணப்படுத்தலாம். பொறுப்பில் உள்ளவர்கள் நன்மை செய்வார்கள் என நம்புவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக