மூட்டு வலிகளால் அவதிப்படும் சிலருக்கு அக்குபங்க்சர் மற்றும் அலோபதி முறையில் வைத்தியம் செய்து பார்த்ததில் சில ஆச்சரியப்படும் வகையிலான பல புதிய நல்ல முடிவுகள் தெரிய வந்துள்ளன.ஆய்வுகளின் விபரம் :
முதலில் ஒரே மாதிரி மூட்டு வலி நோயால் அவதிப்படும் பல நோயாளிகள் 'அ', 'இ', 'உ' என மூன்று சம குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
பிறகு குழு 'அ' விற்கு பாரம்பரிய சீன அக்குபங்க்சர் வைத்திய முறைப்படி வலி உள்ள மூட்டு பகுதிகளில் தோலின் ஊடே 5 மற்றும் 40 மி.மீ. ஆழத்திற்கு ஊசிகளை செலுத்தி வைத்தியம் செய்தனர்.
குழு 'இ' விற்கு கொஞ்சம் மாறுபட்ட விதமாக இலேசாக சுமார் 1 லிருந்து 3 மி.மீ ஆழம் மட்டுமே தோலின் ஊடே ஊசிகளை செலுத்தி வைத்தியம் பார்த்தனர்.
குழு 'உ' விற்கு அலோபதி முறையில் வெறுமெனே வலி நிவாரணி மருந்துகளை கொடுத்தும் கினே தெராப்பி பயிற்சிகளையும் கொடுத்து மருத்துவம் செய்தனர்.
மொத்தத்தில், ஆறு முறை இதுபோல் சோதனை முறைகளை செய்து முடிந்த பின், ஆறு மாதங்களுக்கு பிறகு செய்த வைத்தியத்தின் பலன்களை ஆராய்ந்து பார்த்ததில் :
'அ' குழு 47.6% - (பாரம்பரிய சீன அக்குபங்க்சர் முறை)
'இ' குழு 44.2% - (பாரம்பரியமற்ற மேல்கட்டு அக்குபங்க்சர் முறை)
'உ' குழு 27.4% - (அலோபதி வைத்திய முறை)
ஆகிய விகிதங்களில் பயணடைந்திருப்பதை கண்டு வியந்தனர்.
இந்த ஆய்வுகள் மூலம் அறியவரும் ஒரு முக்கிய உண்மை :
பாரம்பரிய முறைப்படியான 'அ' முறை அக்குபங்க்சராக இருந்தாலும் சரி அல்லது 'இ' குழுவிற்கு செய்ததை போன்ற "பொய்" முறை அக்குபங்க்சராக இருந்தாலும் சரி, இவ்விரண்டு வகைகளில் எதுவாக இருந்தாலும் வலி உள்ள மூட்டு பகுதிகளின் தோலின் ஊடே ஊசி செலுத்தும் இந்த சாதாரண ஒரு செயலே நம் நரம்பு மண்டலங்களில் பல தொடர் மாற்றங்களை உண்டாக்கி வலி நிவாரண உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறது என்கின்றனர்.
நன்றி
Le Monde பிரஞ்ச் தேசிய நாளிதழ்.
மருந்து என்றாலே ஒரு விசப்பொருள்தானே? மருந்துகளை எவ்வளவுக்கு எவ்வளவு தவிர்க்கிறோமோ, அவ்வளவும் நமக்கு நல்லதே. எனவே, இது போன்ற அக்குபங்க்சர் முறைகளையும் சரிவர கற்று சுகாதாரமான மருத்துவத்தை கையாள்வோமே!
செலவுகள் அற்ற இந்த வகை வைத்தியங்கள் ஏழைகளுக்கு சிறந்ததே!
நன்றி.

இதற்கென்று கட்டாயம் ஒரு இணைய தளம் திறக்கவேண்டிய அவசியம் உள்ளது.


