2 பிப்ரவரி, 2007

பிரசவ நேரத்திற்கு தயாராகும் சிசு!

சிசுவானது தாயின் வயிற்றை விட்டு 'விடுதலை' பெறும் நேரமானது, சிசுவுக்கு மிகவுக்கு ஆபத்தானது. அந்த நேரத்தில் சிசுவின் மூளைக்கு போதிய அளவு ஆக்சிஜன் செல்லாமல் நரம்புமண்டலம் சார்ந்த சேதத்தை ஏற்படுத்த கூடும். ஆனால், பிரான்ஸ்'இன், மர்சேய் (Marseille) ஊரை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் யெஹெஜ்கெல் பென்-அரி (Yehezkel Ben-Ari) கூற்றின்படி, சிசுவானது பிறக்கப்போகும் நேரத்தை அறிந்து தாமாகவே ஆக்சிஜன் நுகர்வை அடக்கி குறைத்து சுமுகமான விடுதலைக்கு தன்னை பாதுகாத்து தயார் செய்துகொள்கிறது என்கிறார்.

இதை நிரூபணம் செய்ய, ஆராய்ச்சியாளர்கள் பெண் எலிகளின், கருதரித்த 18 நாளிலிருந்து பிறந்து 5 நாள்வரை இடையில் உள்ள சிசுக்களின் மூளைகளை எடுத்தாராய்ந்தனர். மூளைகளின் வேலைத்திறனை, கெபெ (GABA) எனறழைக்கப்படும், நீரோன் க்ளோரினேட் (neuron chlorinate)'இன் விகிதம் அளவெடுக்கப்பட்டு தீர்மானம் செய்தனர். இந்த 'கெபே'தான் சிசுக்களுக்கு உந்துசக்தி (excitation) கொடுக்கிறது. சிசு பிறந்தவுடன், இந்த க்ளோரினேட் விகிதம் வியக்கத்தக்கும் வகையில் ஏழாயிரம் முறை குறைவாக இறங்கி இருக்கிறது. இதனால் முளையின் நடவடிக்கைகள் குறைந்து, ஆக்சிஜன் தேவையை குறைத்து மூளைக்கு பாதுகாப்பு தருகிகிறது. பிரசவ கால ஆரம்பத்தில் சிசு பிறப்பதற்கு முன் ஏற்படும் கற்பப்பை இறுக்கம்தான் சிசுவுக்கு 'ஒசிட்டாசின் ஹார்மன்' (ocytocyn hormon) எனும் தூதுவன் வழியாக, உடனடி விடுதலை நேரத்தை அறிவிக்கிறதாம்.

ஆராய்ச்சியாளர் மேலும் கூறுவது : "குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழும் சில பிரசவங்களின்போது ஏற்படும் கற்பப்பை இறுக்க வலிக்கு தரும் வலி நிவாரிணி மருந்துகளை உடனடியாக மறுபரிசீலனை செய்யவேண்டும். செயற்கை முறையில் இந்த இறுக்கத்தை நாம் தடுப்பதினால், சிசுவானது இயற்கையான தன் பாதுகாப்பு நடவடிக்கை நிறுத்துங்கால், சிசுவுக்குதான் ஆபத்து." என்றார்.
*
*
நன்றி : 'சியான்ஸ் எ அவெனிர்'
பிரஞ்சு மாத இதழ் : Sciences et avenir.
மொழிபெயர்ப்பு : மாசிலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக