இப்போதெல்லாம் சிறுவர்களும் விடலை பருவத்தினரும் மிக அதிகமான நேரத்தை கணிணி திரைக்கு முன் அல்லது வீடியோ விளையாட்டு பெட்டிகள் முன் கழிக்கிறார்கள். பின்லேண்டில் எடுத்த ஒரு கணக்கின்படி, மூட்டுவலி, சதை பிடிப்புக்காக ஏகப்பட்ட சிறுவர்களும், விடலை பருவத்தினரும் (14-18 வயது) மருத்துவர்களை அனுகியதாக தெரிய வருகிறது. இவர்களில் கால்பங்கு தோல்பட்டை, கழுத்து வலிக்காகவும், 12% இடுப்பு வலிக்காகவும் அவதிப்பட்டதாக கணக்கெடுப்பு கூறுகிறது. ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் விளையாடினால் இதுபோன்ற உபாதைகள் எற்படும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
.
பிள்ளைகள் இதுபோனற விளையாட்டுகளை விளையாடுகிற போது அவர்களை தனியாக ஏதாவது ஒரு அரையில் விட்டுவிட கூடாது. புழக்கமுள்ள, வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்தே அவர்களை கவனிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 அல்லது 15 நிமிடம் ஓய்வெடுக்க வைக்க வேண்டும். விளையாடும்போது அவர்களிடம் அடிக்கடி பேச்சு கொடுத்து கொண்டே இருக்கவும் வேண்டும். சில விளையாட்டுகளில், அதிவேகமாக மாறி மாறிவரும் பலிச் பலிச்சென்ற காட்சிகளை தொடர்ந்து உன்னிப்பாக, மனதை நீண்ட நேரம் ஒருநிலை படுத்தி, விறுவிறுப்புடன் உடல் விரைப்புடன், ஒருவித கோர வெறிகொண்டு விளையாடுவதால், சில குழந்தைகளுக்கு 'எப்பிலெப்சி' எனப்படும் மூளை-நரம்பு சார்ந்த வலிப்பு ஏற்பகிறது. இது மிகவும் ஆபத்தானது.

கவனிக்க படாமல விட்ட சில குழந்தைகள் உண்மை உலகத்திற்கும், விளையாட்டில் உள்ள கற்பனை உலகத்திற்கும் வித்தியாசம் செய்ய தெரியாமல் அனைத்தையும் போட்டு மனதை குழப்பிக்கொண்டு கிடப்பர். ஒருசில குழந்தைகள் திடீர் திடீரென்று எதிர்பாரா நேரத்தில், நிஜ உலகத்தை விட்டு, கனவு உலகத்துக்கு போய் வருவர். உதாரணத்திற்கு : கவனிப்பற்ற ஒரு சிறுவன் கார் பந்தயம் விளையாட்டை மிகவும் விரும்பி அளவுக்கு அதிகமாக அனுபவிப்பவன். இவன் நிஜ உலகத்தில் வீதியை தாண்டும்போது ஒரு காரோ பஸ்ஸோ வேகமாக இவனை நோக்கி வருவதை பார்க்கும்போது, அந்த "ஒரு கணத்தில்" தான் விளையாடின காட்சிகளில் இருப்பது போல் கனவு கண்டு உணர்ச்சி அற்றவனாக தன்னை பாதுகாத்துக்கொள்ள ஏதும் செய்யாமல் நட்ட வீதியில் அப்படியே நிற்பான். அந்த கணத்தில் அவன் காதுக்கு யார் என்ன சொன்னாலும் உறைக்காது. வேறுசில விளையாடுகள் கொலைவெறி மற்றும் சண்டைவெறி போன்ற உணர்ச்சிகளை தூண்டுவதாக இருக்கின்றன.
.
.
இன்னுமொறு பிரச்சினை சமுதாயத்தை பற்றியது. தனிமையில் கனவுலகில் அளவுக்கு அதிகமாக விளையாடும் இளைஞர்கள் காலப்போக்கில் தான் சார்ந்த சமுதாயத்தை விட்டு மனதளவில் விளகி மிக நீண்டதூரம் சென்றிருந்து இருப்பர். இதனால் தங்களுக்கே உரிய சில சமுதாய அடையாளங்களை இழந்து பரிதவிப்பர். இதனால் மன அழுத்தம் ஏற்பட நிறைய வாய்ப்பு உண்டு.
.
அளவுடன் விளையாடினால் சில தரமுள்ள விளையாட்டுகளினால் நன்மைகளும் உண்டு. மூளை வளர்ச்சி மற்றும் ஓட்டமும் பெறும். பெற்றோர்கள் கவனம் செலுத்தி நல்ல விளையாட்டுகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். வயதிற்கு தகுந்தாற்போல் உள்ள விளையாட்டுகளாக இருக்க வேண்டும்.
.
மாறிவரும் இந்த அவசர உலகில், தாயும், தந்தையும் வேலையென்று வீட்டில் இல்லாத நேரத்தில், யாருடைய நேரடி கவனிப்பிலும் இல்லாத பிள்ளைகள் அவர்கள் இட்டத்திற்கு மனம் போனபோக்கில் கண்ட விளையாட்டுகளை கட்டுப்பாடில்லாமல் விளையாட நிறையவே வாய்ப்பு உண்டு. இந்த பருவத்தில் அவர்களை கவனத்துடன் பாதுகாத்து வளர்க்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக