யூ ட்யூபின் இணை நிறுவனர் சேட் ஹர்லே (Chad Hurley) சென்ற சனி 27 ஜனவரி அன்று தவோஸ்'இல் நடந்த பொது அரங்கத்தின் போது தன் நிறுவனம் விளம்பரங்கள் மூலம் வரும் வருமானத்தை இனி வலைஞர்களுடன் பங்கிட்டுகொள்ள போவதாக அறிவித்திருக்கிறார். இவரது ஒலி-ஒளி படத்தளத்தை கூகள் 16500 கோடி டாலருக்கு வாங்கியது தெரிந்ததே.
'படைக்கும் திறனை' ஊக்குவிக்க அளிக்கும் தொகையாக 'பதிப்புரிமை பெற்ற' வலைஞர்களுக்கு, இணையத்தில் ஒலி-ஒளி பட பதிப்பாளர்களுக்கு இந்த சன்மானம் வழங்கப்படும். மேலும் நிறைய திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் அவை அமுலாக்கப்படும். உதாரணத்திற்கு, 3 வினாடி குறு-விளம்பர படங்கள் பட ஆரம்பத்தின் போது வெளியிடப்படும். பிபிசி வானொலிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் கூறியது : "வருகிற மாதங்களில் வலைஞர்கள், விளம்பரதாரர்கள், உபயோகிப்பாளர்கள் எந்த அளவு இந்த மாற்றத்தை உள்வாங்குவர் என கவனிப்போம்."
இந்த வகை பொருளாதார வார்ப்பு ஏற்கனவே Revver தளத்தில் பாவிக்கபட்டு வருகிறது. பணம் சம்பாதிக்கமட்டும் குறியுடன் வரும் வலைஞர்களை தவிர்த்து, ஒலி-ஒளி பட கலை ஆர்வமுள்ளவர்களை மட்டும் ஈர்க்கும்பேரில், யூ ட்யூபின் நிறுவனர்கள் உடனடியாக இத்திட்டத்தை அமுல்படுத்துவதாக இல்லை. உலகம் முழுவதிலும் இருந்து, இத்தளத்தில் நாள் ஒன்றுக்கு 700 கோடி படங்கள் பார்க்கப்படுகிறது. இப்பார்வையாளர்கள் ஆதரவுடன், நல்ல ஆர்வமுள்ள திறமை வாய்ந்த 'படைப்பாளர்களை' உருவாக்க முடியும் எனவும் சேட் ஹர்லே கூறினார்.
நன்றி : லெ மோந்த்
*
பின் குறிப்பு : கலை ஆர்வம் நிறைந்த நம் தமிழ் இளைஞர்கள் இச்சந்தர்பத்தை பயண்படுத்தி சிறந்த படைப்புகளை உருவாக்கி பயணடைவர் என நம்புவோம். பிறகு என்ன? இன்றே ஒலி-ஒளி பெட்டியை கையில் எடுத்து ஆரம்பிக்க வேண்டியதுதானே!
மிக பயனுள்ள தகவல் நன்றி மாசிலா
பதிலளிநீக்கு