"மருந்துக்குழந்தை" (குழந்தை மருந்து அல்ல). ஒரு புதுமை!
பிரான்சில் புதிதாக ஒரு மருத்துவ சீர்திருத்த சட்டம் அமல்படுத்த பட்டிருக்கிறது. அதன்படி இனிமேல் "மருந்துக்குழந்தைகள்" (medical baby) உருவாக்கி பெற்றுக்கொள்ளலாம். அந்த "மருந்துக்குழந்தைகள் என்றால் என்ன?
மருந்துகுழந்தைகள் என்றதும் "அப்பட்ட நகல்" (clone) குழந்தை என நினைக்க வேண்டாம். இந்த 'மருந்துக்குழந்தைகள்' விவகாரத்தில் மருத்துவத்தின் தலையீட்டு எல்லையானது : சோதனைக்குழாய் கருதரிப்பு, புதிய கரு-முன்பரிசோதனை (diagnostic pre-implatation) மற்றும் செயற்கை கரு உள்விதைத்தல்.( artificiel insemination) வரைமட்டும்தான். பிரான்சிலும், ஐரோப்பாவிலும் செய்த மருத்துவ முறைகளின்படி இந்த புதிய வித மருத்துவம், பரம்பரை மரபணு வியாதிகள் (genetic diseases) உள்ள பெற்றோர்களுக்கு அவ்வியாதிகள் அற்ற குழந்தைகள் பெற்றுக்கொள்ள வசதிசெய்கிறது.
புதிய கரு-முன்பரிசோதனையின் அடிப்படை கொள்கை மிகவும் சாதாரணமானது. தாயின் சினை முட்டைகள் மற்றும் விந்தின் அணுக்கள் ஊடே சோதனை குழாயில் உருவான கருவில் இருந்து மூலக்கரு திசு (ovocyte cellule) ஒன்றினை எடுத்து அதில் பெற்றோர்களின் மரபனு பரம்பரை வியாதி உள்ளதா இல்லையா என பரிசோதிப்பர்.
உதாரணத்திற்கு, உங்கள் குடும்பத்தில் முன்னோர்களுக்கு ஏற்கனவே யாருக்காவது இரத்தசோகை போன்ற கொடிய நோய் இருந்ததாக வைத்துகொள்ளூங்கள். உங்களுக்கு இந்த வித நோய் இப்போது இல்லாமல இருக்கலாம். ஆனால், உங்கள் இரத்தத்தில் எங்கோ உறைந்து கிடக்கும் இந்த அனுவினால், இனி பிறக்க இருக்கும் உங்கள் குழந்தைக்கு இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
மேற்கூறிய புதிய கரு-முன்பரிசோதனை மூலம் இவ்வியாதி அற்ற "பரிசுத்தமான" மூலக்கரு திசுக்களை மட்டும் தேடி கண்டுபிடித்து ஆரோக்கியமான் குழந்தை உருவாக்குவார்கள். இதன்படி பார்த்தால், ஆதியான மரபனுவை கைவைத்து இவர்கள் எந்த விதத்திலும் மாற்ற முயற்சிப்பதில்லை. வெறுமனே தேவையான நல்ல ஆரோக்கியமான மூலக்கரு திசுக்களை மட்டுமே தேடி பொறுக்கி எடுக்கிறார்கள்.
இப்போது உன்மையான மருந்துக்குழந்தையின் விபரத்திற்கு வருவோம். இதிலும் மரபனு மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால், இந்த முறையில் பரிசோதனைகளை கொஞ்சம் அளவுக்கு அதிகமாக நடத்துகிறார்கள். உதாரணத்திற்கு, இப்போது ஏற்கனவே பிறந்திருக்கும் குழந்தைக்கு ஒன்றுக்கு பரம்பரை மரபனு வியாதி பீடித்திருக்கிறது என வைத்துகொள்வோம்.( உ: இரத்த சோகை). இருந்தும் உங்களுக்கு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம். பிறக்கப்போகும் குழந்தை ஏற்கனவே உள்ள குழந்தையைப்போல் உங்கள் பரம்பரை வியாதி தாக்காமல் இருக்க இப்போது வழிசெய்வது சாத்தியமாகிவிட்டது.
அதுமட்டும் இல்லாமல், இங்குதான புதுமையே இருக்கிறது. உயிர் குடிக்கும் வியாதி உள்ளவர்கள், அவர்களுக்கு தேவைப்படும் அடிப்படை உயிவாழ் ஆரோக்கிய திசுக்கள் ஒருவர் உடலில் இருந்து இன்னொருவர் உடலுக்கு செலுத்தும்ப்போது கொடுப்பவர்- பெறுபவர் திசுக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஒத்து போகிறதோ, அவ்வளவுக்கும் நோயாளி விரைவில் பூரண குணம்பெற சாத்தியம் அதிகம் உண்டு. இந்த வகையில் சகோதர-சகோதரிகளுக்கு இடையில் உள்ள திசு ஒற்றுமைகள்தான் உன்னதமானது. எனவே, கரு முன்பரிசோதனையின்போதே, முடிந்தவரையில் ஏற்கனவே பிறந்து
வியாதியுடன் இருக்கும் சகோதரனின் திசுக்களின் தரத்திற்கு ஒப்பான, நெருக்கமான திசு கொண்டை மூலக்கருவை தேடி கண்டுபித்து செயற்கை முறைகுழந்தை கருதரிக்க செய்வார்கள். புதிய சிசு பிறக்கும்போது தொப்புள் கொடி மூலம் ஆரோக்கியமான திசுக்களை சேகரித்து அதன் மூலம் வியாதி உள்ள சகோதரனுக்கு மருத்துவம் செய்ய அடிப்படை திசுக்களாக உபயோகிப்பர்.
எச்சரிக்கை : இருந்தாலும், இந்த வித மருத்துவ முன்னேற்றத்தை வைத்து சிலர் 'மருந்துகுழந்தை' வியாபாரம் போன்ற தில்லு முல்லுகளில் ஈடுபடுவர் என அரசாங்கம் கவனத்துடன் இருக்கிறது.
போம்ஸ்(Pomms) பிரஞ்சில் மொழி பத்திரிகையில் இருந்து மொழி பெயர்த்தது.
அன்புடன் மாசிலா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக