24 செப்டம்பர், 2007

யானைக்கால் வியாதியை பற்றிய ஒரு புதிய செய்தி!

யானைக்கால் மற்றும் கை பெருத்தலுக்கு காரணமாக இருக்கும் "ப்ருகியா மலாயி" (Brugia malayi) எனப்படும் நூல்புழு மனித உடலில் எப்படி குடியேறுகிறது எந்தெந்த வகையில் உரு மாற்றம் பெருகிறது போன்ற அதன் பரிணாம வளர்ச்சியை கண்டறிந்து முடிந்தாக ஒரு பன்னாட்டு ஆராய்ச்சியாளர் குழு தெரிவிக்கிறது. உலகத்தில் இன்று ஏறக்குறைய 14.00.00.000 மனிதர்கள் இந்த நோயினால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர் மற்றும் இதில் 4.00.00.000 மனிதர்கள் இதன் காரணமாக உடல் ஊணமுற்று இருக்கின்றனர் என உலக நல அமைப்பு தெரிவிக்கிறது.

அயெதெஸ், க்யுலெக்ஸ், அநொபிலெஸ்... (Aedes, Culex, Anopheles..) போன்ற வகை கொசு கடிகளால் இந்த நுன் நூல்புழு நம் உடலுக்குள் வந்தடைகிறது. ஆரம்ப நிலையில் சிறு புழுவாக இருக்கும் இது மனித உடலில் புகுந்த பின் நூல் போன்ற வாலிப நிலையை அடைந்து, பிறகு மனிதனின் பலவித நோய் எதிர்ப்புச் சக்தியின் செயலியாக உள்ள திரவக (lymphe)ஓட்ட வலையான நுன்னிய நாளங்கள் மற்றும் சுரப்பிகளால் ஆன அமைப்பில் தங்கிவிடுகின்றன. இப்படி நாளங்களில் தங்கிவிடுவதால் இவைகளில் திரவகங்கள் சுதந்திரமாக ஓடமுடியாமல் அடைபட்டு இதனால் தசைகள் வீங்கி பெருத்துவிடுகின்றன. கால்கள், கைகள் மேலும் விரைகள், ஆண்குறி, பெண்களின் மார்பகங்கள் மற்றும் யோனியும் இதனால் வீங்கி பெருத்துவிடுவது உண்டு.

ப்ருகியா மலாயி (Brugia malayi) மற்றும் இதோபோல் இன்னொரு வகை நூல்புழுவான வுச்சிரிரியா பேங்க்ரோப்டி (Wüchereria bancrofti) போலவே நூதனமான முறையில் இரண்டு படிகளில் இனப்பெறுக்கம் செய்கின்றன. வாலிப நிலை அடைந்த ஆண் மற்றும் பெண் புழுக்கள் ஆண் மனிதர்களின் உடலில் இனப்பெறுக்கம் செய்யும்போது, அதி நுன்னிய குட்டை மற்றும் நூல் வடிவ புழுக்களை இரத்தத்தில் உலாவ விடுகின்றன. கொசுக்கள் நம்மை கடிக்கும்போது இவைகள் உறிஞ்சப்பட்டு அதன் உடலில் குடியேறுகின்றன. இந்த குழந்தை பருவ புழுக்கள் வாலிப பருவத்தை அடையும் முன் இடையில் கொசுக்களின் உடல் வழியாக வாழ வேண்டிய இயற்கையின் கட்டாயத்திற்கு உட்பட்டிருக்கிறது. கொசுக்களின் உடலில் தங்கி வளர்ச்சி அடைந்த புழுக்கள் பிறகு மாற்று மனிதர்களை கடிக்கும்போது மேலும் பல மனிதர்களுக்கு இந்நோயினை பரப்புகிறது.

இந்த ஆய்வுகளின் பயனாக ஆய்வாளர்கள் புதிய வகை திறமையான நோய் தீர்ப்பு முறைகளை கண்டுபிடித்து புதிய சிறப்பான மருந்துகளையும் உருவாக்க முடியும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். முக்கியமாக, இந்த நூல்புழு எப்படி மனிதனின் இயற்கையான நோய் தடுப்பு சக்திகளை ஏமாற்றி அவன் உடலுக்குள் குடியேறுகிறது என்பதை கண்டறிய ஆவல் தெரிவித்து உள்ளனர். ஒரு பெண் புழு, எட்டாண்டுகள் வரை மனித உடலில் வாழ்ந்து நாளொன்றுக்கு ஒரு ஆயிரக்கணக்கில் குட்டி புழுக்கள் ஈன்றெடுக்கும் தகுதி படைத்திருக்கிறது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இன்றைய நோய் தீர்ப்பு முறைகளானது, நுன் நூல் புழுக்களை மட்டும்தான் அழிப்பதாக உள்ளதாகவும், வாலிப நிலை அடைந்த தாய் தந்தை புழுக்களை அழிக்க முடிவதில்லை எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால், இதற்கான மருந்துகளை பல ஆண்டுகளாகவும் அல்லது வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நோயாளிகள் இருக்கின்றனர். இந்தியாவும் ஆப்ரிக்காவும்தான் உலகத்திலேயே அதிகமாக இந்த நோயால் பீடிக்கப்பட்ட மனிதர்களை கொண்டிருக்கிறது. இது போதாதற்கு, இன்றைய காலத்து பெறுகிவரும் புது வகை நகர சுகாதாரமற்ற நெருக்கமான வாழ்வு முறை இந்நோய் இலகுவாக பரவுவதற்குத்தான் வழி வகுத்துக்கொண்டு வருகிறது என்று உலக நல அமைப்பு எச்சரிக்கின்றது.

Cécile Dumas
Sciences et Avenir.com(21/09/07)

5 கருத்துகள்:

  1. மாசிலா!
    பட்டகாலிலே படும் என மேலும் மேலும் இந்த வெப்பவலைய நாடுகளுக்குத் தான் இந்தத் தொல்லை போல்.
    தடுப்பு மருந்து ஏதுமில்லையா?? வருமுன் காக்க வழியே இல்லையா??

    பதிலளிநீக்கு
  2. மாசிலா தொழுநோயைப் போலவே அருவருப்பானது என்று மற்றவர்களால் குற்றம்சாட்டப்படும் இந்த நோய் பரவுவதே சுகாதாரமற்ற சூழலால்தான்.. ஆனாலும் நோய் தீர்வது வருடக் கணக்கில் என்பதால் இதனால் அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் சொல்ல முடியவில்லை. ராஜபாளையம் அருகே ஒரு கிராமத்தில் 98 சதவிகிதம் பேர்.. அதாவது வீட்டுக்கு வீடு இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டு காலைத் தூக்கித் தூக்கி நடந்து வருவதை டிவியில் பார்த்தபோது மனம் கஷ்டமாக இருந்தது. எத்தனையோ மருத்துவ சிகிச்சை முறைகள் புதிது புதிதாக வந்தும் இந்த நோய்க்கு உடனடித் தீர்வை காண முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

    பதிலளிநீக்கு
  3. வருகை தந்து கருத்தளித்த
    சூர்யா
    ஜெஸிலா
    யோகன் பாரிஸ்
    உண்மைத்தமிழன் ஆகிய அனைவருக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு