குறிக்கோள் : அனைத்து மருந்து பெட்டிகளில் உள்ள ஆங்கில விளக்க சீட்டுகளை முழுதும் தமிழில் மொழி பெயர்த்து தருவது.
இலக்கம் : ஆங்கிலம் ஓரளவே அல்லது சுத்தமாக படிக்க தெரியாத தமிழ் மக்கள் மருந்துகளின் நன்மை தீமைகளை புரிந்து கொள்ள வசதி செய்யும் பொறுட்டு இந்த ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
இதற்கென்று கட்டாயம் ஒரு இணைய தளம் திறக்கவேண்டிய அவசியம் உள்ளது.
தளத்தில், மொழி பெயர்ப்புகள் செய்து முடித்த உடன், மருந்தகங்கள் இதனை பதிவு எடுத்து மக்களுக்கு கொடுக்க வேண்டியதுதான் மிச்சம். அல்லது மருத்துவர்களே இதை செய்யலாம்.
தளத்தை நிர்வகிப்பதற்கு ஆகும் பொருளாதார தேவைகளுக்கு விளம்பரம், பொது உதவி, உற்பத்தியாளர்கள் உதவி, வியாபார அங்கங்கள், அரசு உதவிகள், அன்பளிப்பு ஆகியவைகளை நாடலாம்.
மொழி பெயர்க்கும் பொறுப்பை தமிழ்மண வலைப்பதிவர் அனைவரும் ஏற்று செய்யவேண்டும்.
இதற்கென்று கட்டாயம் ஒரு இணைய தளம் திறக்கவேண்டிய அவசியம் உள்ளது.தளத்தில், மொழி பெயர்ப்புகள் செய்து முடித்த உடன், மருந்தகங்கள் இதனை பதிவு எடுத்து மக்களுக்கு கொடுக்க வேண்டியதுதான் மிச்சம். அல்லது மருத்துவர்களே இதை செய்யலாம்.
தளத்தை நிர்வகிப்பதற்கு ஆகும் பொருளாதார தேவைகளுக்கு விளம்பரம், பொது உதவி, உற்பத்தியாளர்கள் உதவி, வியாபார அங்கங்கள், அரசு உதவிகள், அன்பளிப்பு ஆகியவைகளை நாடலாம்.
மொழி பெயர்க்கும் பொறுப்பை தமிழ்மண வலைப்பதிவர் அனைவரும் ஏற்று செய்யவேண்டும்.
ஒரு மருத்துவர், ஒரு தமிழ் வல்லுனர், ஒரு (நட்சத்திர) விருந்தாளி பதிவர் ஆகிய மூவர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட வேண்டும். மொழி பெயர்ப்பு வலையில் ஏற்றும் முன் இக்குழு அனைத்தையும் ஆராய்ந்து தன் கடைசி ஒப்புதலை அளிக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் உள்ள முதன்மை விளக்க சீட்டின் நிழற்படம் இருத்தல் அவசியம்.
எதிர்பாரா விபத்துகளை தவிர்க்க, மொழி பெயர்ப்பு கூடவே மருந்து பெட்டியின் வண்ண நிறத்து நிழற்படம் இருக்க வேண்டும்.
எளிய முறையில் செய்திகளை தேடுவதற்கு கணினி வல்லுனர்களின் சீரிய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

மொழி பெயர்ப்பு இரண்டு நிலைகளில் இருத்தல் அவசியம்.முதல் நிலை : தமிழ் நன்றாக படிக்க தெரிந்தவர்கள், இரண்டாம் நிலை : கொஞ்சமே படிக்க தெரிந்தவர்கள் என்பனவைகளை கருத்தில் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
இதை இன்னும் சிறப்பிப்பதற்கு சில வகை படங்களை உபயோகிக்கலாம்.
இதற்கு முதற்கட்டமாக உடனடியாக முடிந்தவரை இன்றிலிருந்தே மொழி பெயர்ப்பு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
இத்திட்டம் நல்லபடியாக செயல்பட துவங்கியதும், ஏனைய இந்திய அனைத்து மொழிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

இத்திட்டம் சீரிய முறையில் செயலபட அனைத்துவித அலோசனைகளும், கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.இதை தமிழ்மணம் தனது தளத்தில் இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்து திட்டம் நடைபெற ஆவன செய்யுமென்று நம்புகிறேன்.
இத்திட்டத்தினால் என்னென்ன பயண்கள் கிடைக்கும்?
இத்திட்டத்தினால் என்னென்ன பயண்கள் கிடைக்கும்?
1. கண்மூடித்தனமாக மருந்துகளை வாங்கிச் செல்லாமல், விளக்க செய்திகளை படித்து மக்களின் அறிவு வளரும்.
2. கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியத்தால், தமிழும் வளரும்.
3. மருந்தகங்கள், மருத்துவர்கள் ஆங்கிலம் அறியா மக்களை ஏமாற்ற முடியாது.
4. வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் ஒருசில பழைய மருந்துகளை மக்கள் தன்னிச்சையாக உபயோகிக்க முடியும்.5. மருத்துவர்கள், மருந்தகங்கள் விளக்கி சொல்லாத சில முக்கிய ஆபத்தான விடயங்களை மக்கள் தாங்களாகவே அறிந்து கொள்ள முடியும்.
இங்கு விளக்காத இன்னும் இதர பல பயண்களும் உள்ளன.
இவண்
மாசிலா.
படஉதவி : தமிழ்நாடு எச்.ஐ,வி குழந்தைகள் பராமரிப்பு அமைப்பு. விலாசம் மறந்து விட்டது.

பிரான்சில் எந்த நாட்டுப் பொருளானாலும் பிரஞ்சு மொழி விளக்கமின்றி விற்க அனுமதியில்லை.
பதிலளிநீக்குஉங்கள் இந்தத் திட்டம்;யோசனை வரவேற்பிற்குரியது.செய்வார்களா?
உங்கள் யூகம் எனக்கு புரியவில்லயே யோகன் பாரிஸ். இது இந்தியாவிற்குத்தான் தகும்.
பதிலளிநீக்குஉங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
இது ஒரு திறந்த வெளி பொதுத் திட்டம். அனைவரும் பங்கேற்க வேண்டிய ஒன்று. கருதுக்கள் ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன.
வரவேற்கவேண்டிய திட்டம்.
பதிலளிநீக்குபயனுள்ள திட்டம். நான் தயார். ஆரம்பிப்போம்...
பதிலளிநீக்கு