இத்தாலியில், மாந்தூயெ என்கிற இடத்தில் அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் சில முப்பது கல்லறைகளை திறந்து பார்த்தபோது, ஒரு ஆண் - ஒரு பெண் புதிய-கற்காலத்தில் இருந்து(**) ஒருவரை ஒருவர் கட்டி பிடித்த நிலையிலேயே கிடந்ததை பார்த்து உணர்ச்சி பரவசம் அடைந்தனர்.
ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம், இரண்டு எலும்பு கூடுகள் கட்டி பிடித்துக்கொண்டு, ஏறக்குறைய 5000 ஆண்டுகளாக இதே தோற்றத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.அவர்கள் பற்களை ஆராய்ந்ததிலிருந்து அவர்கள் இள வயதிலேயே இறந்திருக்கிறார்கள் என தெரியவருகிறது. இவர்களது எலும்புகளை ஆராய்ந்து பார்த்து எந்த காலத்தில் இவர்கள் புதைக்கப்பட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதே வேளையில், எந்த காரணத்தினால் இவர்கள் இறந்தார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அனால், இப்படி கட்டிப்பிடித்து கொண்டு இருப்பதற்கான காரணத்தை யூகம் செய்துதான் பார்க்க முடியும்..
.
ஆதாரம் : Sciences et Avenir.com
.
.
(**)புதிய-கற்காலம் = Neolithic : ஆரம்ப கற்காலம் முடிவில் கல்லால் ஆன உபகரணங்களுக்கு மெருகேற்றப்பட்ட காலம். உலோக காலத்திற்கு முந்தைய காலம். பயிர் மற்றும் பண்ணை மிருகங்கள் வளர்ப்பு ஆகியவைகளின் ஆரம்பம்.
.
பழைய-கற்காலம் = Paleolithic. இதில் வரும் paleo என்ற சொல் தமிழில் வரும் 'பழைய' என்கிற வார்த்தையை ஒத்து வந்தாலும், இதன் பூர்வீகம கிரேக்க மொழி 'palaios' என விளக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக