வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஆகஸ்ட், 2007

இந்திய அறிவை திருடிய ஐசாக் நியூட்டன்!

இப்படியென்று மான்செஸ்டர் பல்கலைகழகமே கூறுகிறது.

இதோ அதனுடைய விபரம் :

முன்னுரை : NEWTON மற்றும் LEIBNIZ ஆகிய இரு ஐரோப்பிய கணித மேதைகளும் கண்டுபிடித்ததாக நம்பப்படும் "infinitésimal" கணக்கு முறைகளின் அடிப்படை தத்துவங்களை, இவர்களுக்கு முன் 250 ஆண்டுகளுக்கு முன்பே இடைக்காலத்தில் (middle-age) வாழ்ந்த இந்திய அறிஞர்களால் கண்டறியப்பட்டது என்று மான்செஸ்டர் ஆய்வாளர்கள் ஆணித்தரமாக அடித்து கூறுகிறார்கள். நம் நாட்டில் நன்றாக வேரூண்றி இருந்த காலனி ஆதிக்கத்தின் ஏசு நம்பிகள் (Jesuits) மூலம் இத்தத்துவங்கள் திருடுடப்பட்டு மேற்கூறிய இரண்டு அறிஞர்கர்களும் இந்த கணக்குகளின் அடிப்படை தத்துவத்தினை அறிந்து அதை வைத்து மேலும் சீறிய ஆராய்ச்சிகள் பல செய்து உலக அரங்கில் புத்திசாலி கணக்கு மேதை என்கிற நல்ல பெயரை தட்டிச்சென்றனர்.
***
17 ஆம் நூ.ஆ. இன் கடைசி 50 ஆண்டுகளில், NEWTON மற்றும் LEIBNIZ ஆகியவர்களின் "infinitésimal calculus" என்றழைக்கப்படும் "différentiel and integral calculation" கணக்கு தத்துவங்கள் பற்றிய ஆராச்சிகள் அபார வளர்ச்சி கண்டன. ஆண்டு 1350 ஆரம்பத்திலேயே இந்திய கணக்கு மேதைகள் இத்தத்துவங்களின் அடிப்படிகளை கண்டறிந்து இருந்ததற்கான ஆதாரங்களை மான்செஸ்டர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டதாக அறிவிக்கின்றனர்.

'School of Kerala'வின் பழமை வாய்ந்த ஆவணங்களில் இருந்து கிடைத்த ஆதாரங்களே மான்செஸ்டர் ஆய்வாளர்களின் இந்த அறிவிப்புக்கு மூலம். ஈரோப்பிரயல்லாத அயல் நாட்டு கணக்கு ஆராய்சிகள் தத்துவங்கள் பற்றிய புத்தகம் எழுதிய Dr George Gheverghese Joseph என்பவரும் "différentiel calculation"இன் அடிப்படையான முடிவில்லாத தொடர்கணக்கு முறையை (concept of infinite series) இந்தியர்கள் நன்கு அறிந்து இருந்தனர் என்றும் அவர் கூறுகிறார். இந்த வகை தத்துவங்கள் மற்றும் "goniometrical functions" பாவித்து, Pi and 9,10 போன்ற எண்களை மதிப்பிட்டு, சில காலத்திற்கு பின் "seventeen décimals" ஆகியவைகளையும் அறிந்து இருந்தனர் என்றும் எழுதுகிறார். இந்த கண்டுபிடிப்புகள்தான் நியூட்டன் அழைத்த "method of the fluxions" என்கிற "differential calculus" முறை கணக்கின் தத்துவத்திற்கு ஆணிவேராம்.

அக்காலங்களில் இந்திய மண்ணில் கால்பதித்து வேரூண்றியிருந்த ஏசு நம்பிகள் (Jesuits) இவ்வறிவுகளை திருடி சத்தமில்லாமல் ஈரோப்பின் அறிவியல் ஆராய்ச்சி துறைகளுக்கு ஏற்றுமதி செய்து இருப்பதாக மான்செஸ்டர் ஆய்வாளர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர். இந்த ஏசு நம்பிகள் சிறந்த கணித மேதைகளாகவும்ம், கடினமான உள்ளூர் மொழியை நன்கு கற்றறிந்தும் இருந்தனராம். "கேரளா பள்ளி"யின் மீது இவர்களுக்கு எப்போதுமே ஒரு தனிப்பட்ட நாட்டம் இருந்ததாம். ஏனென்றால், அப்போதைய Grégoire XIII பாப்பாண்டவர் உத்தரவின்படி, அந்நாளைய ஐரோப்பிய நாட்காட்டி முறையான Julien calenderஐ சீர்திருத்தம் செய்ய இப்பள்ளி மூலம் இவர்கள் புகழ்மிக்க இந்திய நாட்காட்டி அட்டவணை முறைகளையும் திருடி இருக்கிறார்களாம். மேலும், கடல்வழியியல் மற்றும் வானவியல் ஆகிய துறைகளில் இருந்தும் அறிவுத்திருட்டுகளை நடந்தேற்றி இருக்கிறார்களாம்.

நன்றி.

Joël IGNASSE
Sciences et Avenir.com
13/08/07

குறிப்பு.

இநத மொழியாக்கத்தில் நான் "அறிவுத்திருட்டு" என கூறியிருப்பது எனது சொந்த கருத்தே. இதை படிக்கும் அனைத்து தமிழரும் ஆமோதிப்பர் என நம்புகிறேன். இதை ஏன் தனிப்பட தெரிவிக்கிறேன் என்றால், பிரஞ்ச் மொழி கட்டுரையில் இந்த எனது "அறிவுத்திருட்டு" வார்த்தையை அவர்கள் "அறிவுக்கடத்தல்" என குறிப்பிட்டு இருந்தனர்.

"படுத்துகிணு போத்திகிணா இன்னா? இல்ல, போத்துகிணு படுத்துகிணா இன்னா நைனா? எல்லாம் ஒன்னுதானுங்கள? ஹி!ஹி!!ஹி!!!."

இப்ப ச்சும்மா ஒரு தமாசுக்கு :

"மாட்டிக்கிணாரு மாட்டிக்கிணாரு! நம்ம கைப்புள்ள கையும் களவுமா நல்லா வசமா மாட்டிக்கிணாரு!"

நன்றி.
மாசிலா.

19 பிப்ரவரி, 2007

5000 ஆண்டு அழியா காதலர்கள்!

இத்தாலியில், மாந்தூயெ என்கிற இடத்தில் அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் சில முப்பது கல்லறைகளை திறந்து பார்த்தபோது, ஒரு ஆண் - ஒரு பெண் புதிய-கற்காலத்தில் இருந்து(**) ஒருவரை ஒருவர் கட்டி பிடித்த நிலையிலேயே கிடந்ததை பார்த்து உணர்ச்சி பரவசம் அடைந்தனர்.

ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம், இரண்டு எலும்பு கூடுகள் கட்டி பிடித்துக்கொண்டு, ஏறக்குறைய 5000 ஆண்டுகளாக இதே தோற்றத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.அவர்கள் பற்களை ஆராய்ந்ததிலிருந்து அவர்கள் இள வயதிலேயே இறந்திருக்கிறார்கள் என தெரியவருகிறது. இவர்களது எலும்புகளை ஆராய்ந்து பார்த்து எந்த காலத்தில் இவர்கள் புதைக்கப்பட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதே வேளையில், எந்த காரணத்தினால் இவர்கள் இறந்தார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அனால், இப்படி கட்டிப்பிடித்து கொண்டு இருப்பதற்கான காரணத்தை யூகம் செய்துதான் பார்க்க முடியும்.
.
.
ஆதாரம் : Sciences et Avenir.com
.
.
(**)புதிய-கற்காலம் = Neolithic : ஆரம்ப கற்காலம் முடிவில் கல்லால் ஆன உபகரணங்களுக்கு மெருகேற்றப்பட்ட காலம். உலோக காலத்திற்கு முந்தைய காலம். பயிர் மற்றும் பண்ணை மிருகங்கள் வளர்ப்பு ஆகியவைகளின் ஆரம்பம்.
.
பழைய-கற்காலம் = Paleolithic. இதில் வரும் paleo என்ற சொல் தமிழில் வரும் 'பழைய' என்கிற வார்த்தையை ஒத்து வந்தாலும், இதன் பூர்வீகம கிரேக்க மொழி 'palaios' என விளக்கப்பட்டு உள்ளது.

11 பிப்ரவரி, 2007

'மாயா'க்கள் அழிவின் மர்மம் என்ன?

கெடு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னமேயே வந்த அழிவு.
.
என்ன நடந்தது?

அமெரிக்க இந்தியர்களான பண்டைய 'மாயா'க்கள் தங்களது கால அழிவின் முடிவை ஆண்டு 2012'க்கென கணித்து கெடு குறிப்பிட்டு வைத்திருந்தனர். ஆனால், அவர்களது நாகரீகம் குறித்த அந்த காலத்திற்கு 1000 அண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டது. இந்த அழிவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதைப்பற்றிய சில யூகங்கள்.



இந்த யுகத்தின் 810ஆம் ஆண்டில், மாயாவின் 'டிகால்' நகர், அதாவது தற்போதைய குவாத்தமாலாவின் வடக்கே இருந்தது, சக்திவாய்ந்த ஒரு நகரமாக இருந்தது. 50,000 பேர் வாழ்ந்த வந்த பிரம்மிக்க வைக்கும் அரச நகரை சுற்றிலும் எண்ணிலடங்கா புற நகர்கள் அமைந்திருந்தன. குடிமக்கள் பண்பாட்டு அடையாளங்கள் மற்றும் சின்னங்களை உடைய தளங்களை இணைக்கும் அகன்ற வீதிகளும், நகரத்தின் மத்தியின் உயரத்தில் ஆலயங்களும் கோபுரங்களும், பல மண்டபங்களும் மற்றும் சில பந்து விளையாடும் மைதானங்களும் இருக்கின்றன. வெட்டவெளி மைதானத்தின் நுழைவு வாசலில், "த்சொம்ப்பாந்த்லி" எனும் காட்சியகத்தில், கடைசியாக நடந்த போட்டிகளில் தோற்றுப்போன வீரர்களின் சீவப்பட்ட தலைகளின் காட்சிகள் மக்களின் கவனத்தை ஈர்த்தன.

கி.மு iv - கி.பி xi இடைப்பட்ட காலங்களில் பூத்த 'மாயா' நாகரீகத்தின் எழுச்சி மிக்க புகழ் உச்சியின்போது, ஆண்டு 600 - 800களுக்கு இடையே புதிதாக நிறுவப்பட்ட அதிகமான பண்பாட்டு சின்னங்கள் நகரங்களை குதூகல புத்துணர்ச்சியுடன் அழகில் மிளிர வைத்தன. 16 கி.மீ சதுர பரப்பளவில் எங்கு பார்த்தாலும் 3000 கட்டிடங்கள் அனைத்து வடிவங்களில் உருவாகின. ஆண்டு 292 தேதியிட்ட ஒரு நினைவு சின்னத்தின்படி, அரச வம்சத்தினரின் ஆரம்பகால ஆட்சியிலிருந்து குறைந்தபட்சம் 33 வம்சத்தினர் 'டிக்கால்'ஐ ஆண்டு வந்திருக்கின்றனர். 'பூஜ்ஜிய-நிலவு-குருவி', 'சிறுத்தை பெரிய பாதம்' (379-426), கார்மேக வானம் (426-457), மேலும் '(கக்காவோ)மரம் ஆண்டவர்' போன்றவர்களை புகழ்மிக்கவர்களில் ஒருசிலராக குறிப்பிடலாம். அரச-நகரத்தின் அதிபர் ஆனவர் அனைத்து ஆதிக்க சக்திகளையும் பெற்றவராக இருந்தார். பண்டைய எகிப்து 'ஃபாரஓன்' போல், படைகள், நிர்வாகம், மத குருக்கள் ஆகியவர்களின் தலைவருமாக இருந்தார். இவரது கூடத்தில், இவருடைய மனைவிகளும், இளவரசர்களும், மரியாதைக்கு உரியவர்களும், பணியாட்களும், சாமியார்களும் புழங்குகின்றன்ர். இச்சமூகம் கைவினை தொழிலாளி (நெசவாளர், பீங்கான் தொழில், சிற்பி, ஓவியர்), வியாபாரிகள், விவசாயிகள் என தொழில் வாரியான கோட்பாட்டுடன் சீரியமுறையில் வரிசைப்டுத்தி வர்க்க வாரியாக அமைக்க பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் அரச ஆதிக்க சக்திக்கு பணிவிடை செய்வதே கண். ஆண்டு 810இன் கால கட்டத்தில், அந்த ஒரு நாள்,'டிக்கால்'இன் மக்களுக்கு தங்கள் எதிர்காலத்தை பற்றிய கவலை மனதை கலக்கி வந்தன.

அன்றொரு நாள், எண் 2 கோபுர ஆலயத்தின் எதிரில் உள்ள பெரிய வளாகத்தில் குழுமி இருந்தனர். 38 மீட்டர் உயரத்தில் உள்ள சாமியார்கள் ஆழ்ந்த சடங்குகளை செய்து வேண்டுவதை, செங்குத்தான படிகட்டுகளின் கீழே இருந்துகொண்டு அனைவரும் கவனித்து வருகின்றனர். செயற்கை மலையைப்போல் உள்ள கோபுரங்களின் உச்சம் மனிதர்களை தெய்வங்களிடம் இணைக்கின்றன, பூமி மற்றும் அதன் அதள பாதாளம் வின்னுலகத்திற்கு இணைத்து தொடர்பு கொடுக்கிறது. சாதாரண எளிய கதர் துணிகளில், மணிகள் மற்றும் சிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட, சில சமயங்களில் சிறுத்தை தோலிலான உடைகளையே சாமியார்கள் அணிந்து இருந்தனர். ஒரு நூறு கி.மீ மேற்கில் உள்ள 'போனாம்பக்' எனும் நகரத்தில் இப்படித்தான் ஓவியர்கள் சித்தரித்து இருந்தனர். பத்திகளின் வாசனை உயரே ஏறுகிறது. கெட்ஜால் சிறகுகளால் ஆன அழகுமிக்க ஆபரணங்கள் அணிந்த, கண்ணை பறிக்கும் பவள நிறத்தில், மன்னரும் அங்கு காத்துகொண்டு இருக்கிறார். அவருக்கும் மனக்கவலைதான்.


அனைவருக்குமே, போர், சடங்குகள், அன்றாட வாழ்க்கை பிரச்சினகள் எதுவாக இருந்தாலும் அனைத்தும் காலங்களின் ஓட்டங்களில் பின்னி பிணைந்து இருக்கின்றன. இங்கு குறிப்பிடும் காலங்கள் இரண்டு வகை நாட்காட்டிகள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு இருக்கின்றன. ஒன்று சடங்கு சாங்கியம், மற்றொன்று சூரியன் அதிலும் முக்கியமாக 'நீளக்கணிதம்' அடிப்படையில் உள்ளது. இது அவர்களது "அரிய கண்டுபிடிப்பு" என மாயா பற்றிய அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். இவர்கள் மட்டுமே தனித்து பெற்றிருந்த இந்த கால அளவு கோளை சம காலகட்டங்களில் (300-800) உபயோகித்து வந்தனர். 'மாயா'க்களுக்கு படைப்பின் ஆரம்பம் என்பது ஆகஸ்ட் 13 ஆண்டு (minus) -3114இல் அதாவது : 13ஆவது பக்துன் 4 அஹௌ 4 கன்கின் ( 13th baktun 4 ahau 4 kankin). இதுவே ஒரு பெரிய சுழற்சியின் (சக்கரம்) ஆரம்ப காலம். இதன் முடிவு 23 டிசம்பர் 2013ஆம் ஆண்டு என கணக்கிடபட்டு இருந்தது. அறிந்தவரை, மாயாக்கள் மட்டும்தான் இதுபோன்றை முறையில் தங்களது வரலாற்றினை பதித்து இருந்தனர். பலவிதமான தொடர் சுழற்சிகளே இவர்களுடைய மன உளைச்சல்கள் தந்தன.

கால துண்டிப்புகள் மற்றும் ஒன்றிலிருந்து மற்றொறு சுழற்சிக்கு மாறுதல்கள் போன்றவற்றை எல்லாவற்றிற்கும் மேலான ஆபத்தானது என கருதினர். <<இப்போது உள்ள உலகத்திற்கு முன் வேறுபல உலகங்கள் இருந்ததாக நிச்சயத்துடன் நம்பினர். ஆகையால் ஒவ்வொரு படைப்பிற்கும் பின் ஒரு அழிவு உண்டென்பதையும் நம்பினர்.>> ஆகையால் அனைத்தையும் முன் எச்சரிக்கையுடன் பாவிக்க வேண்டினர். இதற்காக 'குறி' சொல்லும் 'பஞ்சாங்கம்' மீது நம்பிக்கை வைத்தனர். உதாரணத்திற்கு, <<ஒரே மாதிரியான பெயர் கொண்ட ஒவ்வொரு 'கட்டுன்' (256 ஆண்டுகால முடிவில்)இன் போது,ஒரே மாதிரியான நிகழ்வுகள் அடிக்கடி திரும்பி வரும் எனவும் நம்பினர்>> இந்நம்பிக்கையின்படி அடுத்த இன்னொரு சீற்றத்தை எதிர்நோக்கி இருந்தனர்.

வானவியல் விஞ்ஞானத்தை , இப்படித்தான் 'மாயா'க்கள் கணித்தனர் : << வின் கோள்களை பற்றிய நாம் அறிந்த இக்கால விஞ்ஞான பூர்வ ஆதாரங்கள் ஏதும் அவர்களுக்கு இருந்தது இல்லை>>. எதிர்காலங்கள் மற்றும் 'குறி' பற்றிய இவர்களுடைய ஈர்ப்புகள் அனைத்தும் 'ஷிலாம் பலாம்'(Chilam Balam) அல்லது 'பொபொல் வுஹ்'(Popol Vuh) மற்றும் சில அரிய கோட்பாடுகள் உள் அடங்கிய ஒருவகை 'புராணங்கள்' வழியாக தெரிய வருகின்றன. இதில் முக்கியமாக ட்றெஸ்ட் (Dresde) கோட்பாடு (xiii நூ.ஆ), இறையாண்மை மற்றும் வானவியல பற்றியது அல்லது 'மத்ரித்' (Madrid) கோட்பாடு (Tro- Coresianus), 1250 மற்றும் 1450 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவே, ராசிபலண்கள், பஞ்சாங்கங்களுக்கு அடிகோளி வருகின்றன.

ஆண்டு 810இல் இன்று நாள், எண்.2 கோபுரத்தின் உயரத்தில், பெரிய பூசாரி மற்றும் 'டிக்கால்'இன் அரசரும் இவர்களது மறைவை அறிவிக்கும், தூரத்தில் குழுமும் மேகத்தை பார்த்தார்களா? நீண்ட காலமாக மர்மம் என கருதப்பட்ட, இவ்யுகத்தின் ixஆவது மற்றும் xஆவது நூ.ஆ. வாக்கில், "யுகாட் அ ந்" (Yucat à n) துணை கண்டத்தின் மத்தியில் பரவி இருந்த 'மாயா' நகரங்கள் மக்களை இழக்க தொடங்கியது. xiv நூ.ஆ. ஆரம்பத்தில், ஸ்பெய்ன் நாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் மத்திய அமெரிக்காவில் கால் பதிக்கையில், பாழடைந்த கட்டடங்கள், எலும்புறுக்கி நோய் கிருமி தாங்கிய கொசுக்கள் அண்டிய சேற்று வெளிகளைத்தான் கண்டனர். பிரயாண உபயோகத்திற்கு கூட ஒருபோதும் இதுவரை மிருகங்களை உட்படுத்தாத மெசோ-அமெரிக்காவில் (Meso-America), அனைத்து கட்டுமானங்களும் மிருகங்களின் உதவி இல்லாமலேயே கட்டிய நாகரீகத்தவரின் மண்ணில் முதன்முதலாக ஸ்பெய்ன் நாட்டுக்காரர்கள் 'ஹெரன் அ செ ஒ ர்டோபா' (1517), 'யுஆன் டி க்ரிஜல்வா' (1518), 'ஹெர்ன் அ ந் கொர்தேஸ்' (1525) ஆகிய மூவர் குதிரை சவாரி மூலம், வெப்ப நில காடுகளை தாண்டி, செங்குத்தான சுவர்களுடைய மலைகளில் ஏறினர். ஒரே வருடத்தில், மெஜோ-அமெரிக்காவின் மற்றொரு மிக சிறப்பு-சக்தி வாய்ந்த நாகரீகமான அஜ்டேக்ஸ் (Aztèques)ஐ வெற்றிகொண்டனர். ஸ்பெய்ன் நாட்டவர்கள் அப்போது எதிர்கொண்ட 'மாயா'க்கள் முன்காலத்திய பெரும் புகழ்மிக்க ஒரு நகரத்து மக்களாக இருக்கவில்லை.

'மாயாபான்'(Mayapan) நாகரீகம் வெள்ளையர்களின் "யுகாட் அ ந்"இன் உட்புகுதலுக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பே அனைந்துவிட்டது. பெரும் மன்னர்கள் மறைந்து விட்டனர். மிச்சம் மீது சில குழுக்களும் மேலும் ஒரு கிராம விவசாயமும்தான் எஞ்சி இருந்தது. மிச்சமுள்ள இவர்கள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொடுத்த தொந்தரவுகளால், வெள்ளையர்கள் வெற்றிகாண இருபது வருடங்கள் பிடித்தன. குறைந்த எண்ணிக்கை ஸ்பெய்ன் நாட்டு துருப்புகள் எதிரில், சிற்சில போராளிக்குழுக்கள் நீண்ட காலம்வரை தாகுபிடித்து வந்தனர். உதாரணத்திற்கு, இப்படியான ஒரு குழு, 'பெடென் இட்ஜ்' எனும் ஏரித்தீவில் xvii ஆம் நூ. ஆ. வரை போராடி வந்தது. மாயாக்களின் சக்திவாய்ந்த கடைசி எதிப்பு போராட்ட குழு 1697இல் வீழ்ந்தது. அச்சமயத்தில், ஸ்பெய்ன் நாட்டவர்களின் சித்தத்திற்கு, இவ்விந்தியர்கள் ஒரு காலத்தில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்த மத்திய அமெரிக்காவின் எழுச்சிமிக்க ஒரு நாகரீகத்தின் பரம்பரையாளர்கள் என்பது உதித்திருக்குமா?

ஆக மொத்தம், 'யுகாட் அ ந்'இன் வடக்கில் சந்தித்த வானளாவிய மிகப்பெரிய நினைவு, பண்பாட்டு கட்டடங்களை பார்த்து ஆக்கிரமிப்பாளர்கள் பிரமித்து போயிருந்தனர் என்பது மட்டும் உறுதி. இதில் முக்கியமாக 'அக்ஸ்மல்' மற்றும் 'சிச் எ ந் இட்ஜ் அ' (Uxmal - Chich é n Itz à) கண்டுபிடித்தனர். (1524- 1579) காலத்திய 'டியேகோ டி லேண்டா', 1549ஆம் ஆண்டு துணைகண்டத்திற்குள் வந்தபோது, இங்கிருந்த அகன்ற கல் கட்டிட நகரங்களை பார்த்து, மறைந்துவிட்ட சக்தி வாய்ந்த ஒரு உலகம் வாழ்ந்த அடையாளங்களை இனம் புரிந்துகொள்கிறார். இவர் மாயாக்களின் எழுத்துகளை, நாட்காட்டிகளை புரிந்துகொள்ள அயராத முயற்சி எடுத்தார். இதே இவர்தான், 1562ஆம் ஆண்டில் மாயாக்களை 'திண்டத்தகாதவர்கள், சாத்தான்கள்' எனச்சொல்லி பொது 'கொலை'மற்றும் மாயா அகரத்தில் எழுதப்பட்ட ஏகப்பட்ட புத்தகங்களை <<மூட நம்பிக்கை சூன்ய பொய்கள் நிறைந்தவை நிரைந்தவை>> என எரித்துவிட்டார். இதற்கு பாவ பரிகாரம் தேடிக்கொள்ளவே பிற்காலத்தில் 'மாயா'ஆராய்ச்சிகள் நிறைய செய்தார். இவர் எழுதிய <<'யுகாட் அ ந்'இல் பார்த்தவைகளின் தாக்கம்>>தான் இன்றைக்கு பண்டைய மாயாக்களின் அடிப்படை செய்தி கோப்புகளின் தனித்துவம் வாய்ந்த அதிகாரபூர்வ ஊற்றாக விளங்குகிறது. அதில் அவர் "எண்ணிக்கையில் அதிக அளவிலும், நிறைய இடங்களிலும், அழகிய முறையில் வெட்டி எடுக்கப்பட்ட கற்களைகொண்டு கட்டிய நகரங்களின் கட்டிட பழைய தடயங்களை பார்த்து ஆச்சரியத்தில் பிரமித்து போனதாக" எழுதுகிறார்.

நீண்ட காலமாகவே பதில் ஏதும் இல்லாமல்போன இம் 'மாயா'க்களின் வீழ்ச்சிபற்றி, சமீப காலத்திய அகழ்வாராய்ச்சி மற்றும் தட்ப-வெப்ப ஆராய்ச்சிகளின் சில கண்டுபிடிப்புகளால், மிகுந்த ஈர்ப்புள்ள யூகங்களை உருவாக்கி இருக்கிறது. மூன்று 'மூல-காரணங்கள்' முன் மொழியப்பட்டு இருக்கின்றன.

முதன்முதலில் : அரசியல் வீழ்ச்சி. இது உறுதியானது ஒன்று. மாயா நாகரீகத்தில் 'கௌரவத்திற்கு' எப்போதுமே தொடர்ந்த போட்டி இருந்து வந்திருக்கிறது. போட்டியென்றால் அங்கே எதிரியும் உண்டு. அளவுக்கும் அதிகமாக செலவுகள் செய்து, விலை உயர்ந்த அலங்காரங்களை உடைய மிக உயர்ந்த கோபுரங்களை பெறுவது கௌரவத்தின் சின்னமாக கருதப்பட்டது.

இந்த (சூதாட்ட) விளையாட்டில் நிறைய மன்னர்கள் தோற்று கடைசியில் ஆட்சி அதிகாரங்களை இழந்து வீழ்ச்சி அடைந்தனர். இவர்கள் தங்களது ஆட்சி, சொத்துகளை மற்றவர்களுடன் பங்குபோட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். 'x'ஆம் நூ.ஆ. இன் அடையாள எழுத்துகளில் குறிப்பிட்டு உள்ள விபரங்களின்படி : நிறைய சாமியார்கள், பிரபுக்கள், போர்வீரர்கள் உருவானது சமுதாயத்தின் கேடுகளை நன்கு உரைக்கிறது. முதன்முறையாக, பல சுவர் சித்திரங்களில் இவர்கள் அதிக அளவில் தென்படுகிறார்கள். சமுதாயத்தில், மேலும் மேலும் அதிக சக்திகளை பெற்று சடங்குகள், பலியிடுதள், போர் செய்வது போன்ற நிர்வாகம், கட்டுப்பாடுகளை செய்தும் வருகின்றனர். இதுவரை, இம்மாதிரியான சிறப்பு உரிமைகள் அரசருக்கு மட்டுமே உட்பட்டிருந்தது. << சாமிகள் கூட அரசர் இடத்தை பிடித்துவிட்டன. ஆட்சியாளர்கள் ஆதிக்க சக்தியுடன் இருந்தபோது, கடவுள் முறைக்கு இடம் கிடைக்காமல் இருந்தது. அரசர்களே கடவுளாக கருத பட்டன்ர்.>> என்கிறார் க்லோத் பொதேஜ்.

மத்திய கீழ்த்தரை சமகாலத்து கலாச்சார அழிவுக்கு பிறகு, ஆட்சி பிரிக்கப்பட்டு பல துறையாளர்கள் வசம் கைமாறியதாக நம்பபடுகிறது. "கலாச்சாரம், அறிவு, மதம் போன்றவைகளால் இதுவரை ஒற்றுமையுடன் வழி நடத்தி செல்லப்பட்ட 'மாயா' சமுதாயத்தில் ஓட்டைகள் விழுந்தது. எழுத்துகளும், புகழ்பெற்ற நீள்கணிதமும் தூண்களில் இருந்து மறைந்தன. பெரிய கட்டுமான பணித்திட்டங்கள், கற்தூண்கள் நடுவது போன்றவைகள் நிறுத்த படுகின்றன. பழைய வரலாறுகள் புதிய வரலாறுகளால் மறைத்து மாற்றி அமைக்கப்பட்டு, சக்திமிக்க ஆட்சியாளர்கள் இல்லாததால், வரவர 'மாயா' நகர்கள் சீனத்து சண்டைக்கார மன்னராட்சிகளை போல் காட்சி அளிக்கிறது. இரண்டாவது யூகம் : இத்திடீர் அழிவுக்கு காரணம் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள்.

'மாயா'க்கள் அமைதி விரும்பும் மக்கள் அல்ல. அவர்கள் அடிக்கடி போர் செய்துகொண்டிருப்பவர்கள். மனிதர்களை பலிகொடுக்கும் வழக்கம் உடையவர்கள் ஆகையால், அவர்களை எதிர்ப்பவர்களை கண்மூடிதனமான இறை நம்பிக்கை அடிப்படையில் பாவபரிதாபம் பார்க்காமல் எண்ணில் அடங்காத நபர்களை பலியிட்டிருக்கலாம். போர்களின்போது பிடிபட்ட எதிகளை பிரார்த்தனை பலிகளுக்கு இறையாக்கி வின்னுலக பரம சக்தி பெறும் நோக்கில் செயல்பட்டனர். ஆனால், இவையனைத்தும் இவர்கள் போட்ட சண்டைகளின் நிலவரத்தை விளக்க போதுமானதா? 'அர்தர் தெமாரெஸ்ட்' போன்ற வட அமெரிக்காவின் சில அகழ்வாராய்ச்சியாளர்கள் 1980 - 1990 ஆண்டுகளில் உலகுக்குமுன்வைத்த சில நிகழ்வுகளின் அடிப்படையின்படி, இப்பயங்கர சண்டைகள் 'பிடெக்பேட் உ ந்' (Petexat ù n)என்கிற பகுதியில், சரித்திரம் வாய்ந்த 'செய்பல்'(Seial) நகர் 'பெட் எ ந்' (Pet é n) இல்ஆண்டு 760இல் இருந்து ஆரம்பித்து நடந்தேறி இருக்கலாம் நம்பப்படுகிறது.

பாரிஸின், அகழ்வாராய்ச்சி குழுமத்தின் (CNRS-Paris-X) அமெரிக்கர் துறையின் மேலாளர் தொமினிக் மிஷ்லெ (Dominique Michelet) கூற்றின்படி, <<போர், பட்டாளங்களின் தடயங்கள், வெற்றி சூடியவர் சின்னங்கள், தீடீரென அழிக்கப்பட்டு பரப்பளவு சுறுக்கப்பட்டு சில தளங்கள் அல்லது அயல் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துகொள்ள வேண்டி அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள்>> போன்றவைகளும் தென்பட்டன. இவைகள் அறியகொடுப்பது : சலக்முல் மற்றும் டிக்கல் (Calakmul and Tikal) போன்ற மிகப்பெரிய மாயா உலக தலை நகரங்களின் இடையே ஆதிக்கம் நிலைநிறுவுதல் அடிப்படையில் ஏவப்பட்ட, இவர்களின் விசுசாச மற்றும் எதிர் உணர்வு அலைகளால் தூண்டப்பட்டு குறுநில மன்னர்கள் இடையில் துணைப்போர்கள் நடந்தேறின. வரைபட எழுத்து, மற்றும் அகழ்வாராய்ச்சி தடயங்களை ஒப்பிட்டு பார்க்கையில், இச்சண்டைகளின் காரணமாக, இப்பகுதி முழுதுமே பூலோக வரைபடத்தில் தடயமே இல்லாத வாறு அழிக்கப்பட்டுவிட்டது. <<50>> எனவும் தொமினிக் மிஷ்லே கூறினார்.

அரச-நகரங்களுக்கு இடையே, பெருமை மற்றும் கௌரவம் ஆகியவைகளுக்கு நடந்த இப்போர்களினால் நம்பக தன்மை இழந்து, பாதுகாப்பின்மை அதிகரித்து சமூகத்தை நிலைகுலைய செய்தன. viiஆம் நூ.ஆ. இன் கடைசியில் திடீரென இம்மாதிரி அக்கிரமங்கள் அதிகரித்தது ஏன் என்பது இன்னும் புரியவில்லை. ஒரு வேளை இப்பகுதியின் தட்ப-வெப்ப நிலை மாறுதல்களின் தாக்கங்களால் மாயா இனத்தினரின் முழுஅழிவு முக்கிய கட்டத்தை அடைந்து முற்று பெற்றிருக்கும் எனவும் யூகிக்க படுகிறது.

இம்மூன்றாவது 'வழி'தான் ஆராய்ச்சியாளர்களால் முன்மொழிய படுகிறது. ஹிஸ்பானியர்கள் வருவதற்கு முந்தைய காலத்து இப்பகுதியில், செயற்கை நீர்பாசன முறையில் அல்லாமல், இயற்கையாக காலந்தவராமல் பெய்த மழை நீரை நம்பியே பயிர் செய்து வந்தனர். சாகுபடி ஒன்றிற்கு, வருடம் குறைந்தது 600 மி.மீ அளவு மழைநீர் தேவையாக இருந்தது. <<நிறைய காலங்களில், விளைச்சல் அழிவை தவிர்க்கும் மிக குறைந்த பட்ச மழை நீர் தேவையின் கணிக்கப்பட்ட அளவான 450 மி.மீ நீரைகூட பெய்யப்பெறாமல் வானம் பொய்த்துவிட்டது. உண்மையில், ஆதியில் நீண்டகால தட்ப-வெப்ப நிலை மாறுதல்களின் தாக்கங்களைவிட, திரும்ப திரும்ப ஏற்பட்ட தட்ப-வெப்ப நிலை விபத்துக்களாலே அதிக பாதிப்புக்கு உள்ளாயினர். தொடர்ந்த வரட்சிகள், ஒவ்வொன்றும் இடைவிடாமல் ஒரு சில வருடங்களுக்கு அடுத்தடுத்து ஏற்பட்டதும் ஒரு காரணம். >> என்கிறார் தொமினிக் மிஷ்லெ.

1993 ஆம் ஆண்டிலிருந்து, தட்ப-வெப்ப நிலை வல்லுனர்கள் முன்வைத்திருக்கும் அநேக ஆராய்ச்சி முடிவுகளின்படி, மேலே கடைசியில் கூறப்பட்டு இருக்கும் இக்கணிப்பே ஒவ்வானது என உறுதியளிக்கிறது. 'யுகாட் அ ந்'இன் துணைக்கண்டத்தின் வடக்கு மேலும் கிந்தானா ரோ(Quintana Roo)மெக்சிக்கோவையும் இக்கூற்றுகள் முதலில் சாரும். ஏறிகளின் படிமங்களில் அண்டியிருக்கும் உப்பு-உலோக தடயங்கள் மற்றும் நத்தை போன்ற பிராணிகளின் ஓடுகளில் உள்ள பிராண வாய்வு தடயங்களையும் (isotopoe) ஆராய்ந்து பார்த்ததில் மிக கடுமையான தட்ப-வெப்ப பிரச்சினைகள் முக்கியமாக ஆண்டு 800-1000 இடைப்பட்ட காலங்களில் மோசமான வறட்சி இருந்து வந்ததாக ஃப்லோரிடா பல்கலை கழகத்தின் புவி விஞ்ஞானிகள். 2003இல் வெனீசுலாவின் வட-கிழக்கில் (மெக்சிக்கோவின் கடலோரத்தை தள்ளிய போதிய தொலைவில் உள்ள நில பரப்பளவில்) சரிஆகொ(Cariaco)இல் கடல் ஆழத்தின் படிமங்களில் நடத்திய 'பண்டைகால-தட்ப-வெப்ப' ஆராய்ச்சிகளின் ஊடே வழக்கத்திற்கு மாறான மிக மோசமான மழை ஏமாற்றங்களும் காலம் தவறி பெய்வதும் போன்றவைகள் ஒரு குறிப்பிட்ட காலம் இருந்து இருக்கிறடுது என தெரிய வருகிறது. இக்கூற்றுகளின் மூலம் : <<ஆண்டுகள் 760, 810, 860 மற்றும் 910களின் காலங்களில் மிக கடுமையான வரட்சி தொடர்வுகள் இருந்தன>> என விளக்குகிறார் தொமிக் மிஷ்லெ.
இவைகளின் விளைவுகளால் மாயா'க்களின் விவசாயத்திற்கு பயங்கர கேடுகள் உண்டாகின. வறட்சி மற்றும் அதிக ஈரம் ஆகிய இரண்டு கால நிலைகளையும் தாங்கும் தகுதி கொண்ட சோளம், மழை இல்லாத நீண்ட கால வறட்சியை தாங்க முடியாது. இதுபோன்ற கடின காலங்கள் அடிக்கடி வந்ததால்,தலைவர்கள் சமாளிப்பதற்கு திறமையற்றவர்களாக இருந்திருப்பர். மக்களின் கண்டனத்திற்கு ஆளான சில தலைவர்கள் பதவி இழந்து மறைந்தனர். அனைத்து தலைவர்களும் ஆண்டு 760க்கே மறையவில்லை. ஆண்டு 810இல், வேறு பல தலைவர்கள் மறைந்தனர். ஆண்டு 860இல் இன்னும் அதிகமாவர் போயினர். ஆண்டு 910இல் அனைவரும் மறைந்து விட்டனர் என கூறுகிறார் யூகாட் அ ந்'இல் பிரன்ச்-மெக்சிகோ அகழ்வாராய்ச்சி குழுமத்தின் தலைவர் தொமிக் மிஷ்லே கூறுகிறார். இந்த சீரழிவுக்கு காரணம் தலைவர்களின் மேல் மக்களுக்கு இருந்த வெறுப்பு அல்லது திறமை இல்லாத அரசியல் அமைப்பு முறை மட்டும் காரணமாக இருக்க முடியாது. மாறாக, இது அனைத்து தர மக்களையும் முழுமையாக தாக்கிய விபரீத பிரச்சினையால்தான். இதனால், மக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஊர் ஊராக வெளியேறுகின்றனர்.

இப்படியாக, 19ஆம் நூ.ஆ.இன் கடைசியில் 'டிக்கால்'தனது 90% மக்களை இழந்துவிட்டு இருந்தது. ஜேரெட் டைமண்ட் எனும் அமெரிக்கர் சமீபத்தில் எழுதி வெளிவந்த புகழ் பெற்ற தன்'அழிவு' புத்தகத்தில் குறிப்பிட்டது : பொதுவாகவே, பண்டைய மாயா, வைக்கிங் போன்ற சமுதாயங்கள தங்களது வளம், கையிருப்பு,பொருளாதாரம் ஆகிய திறன்களை மீறிய மக்கள் தொகை, காடுகள் அழிப்பு, தட்ப-வெப்ப நிலை மாற்றங்கள், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தெரியாத திறமையற்ற தலைவர்கள் ஆகியவைகளே காரணம் என்கிறார்.

1970 ஆண்டுகளில் இருந்து, வல்லுனர்கள் ஒருமித்த கருத்துடன் கூறுவது : அரிய நிகழ்வுகளை தவிர, பொதுவாக ஒரு நாகரீகம் அழிவதற்கு ஒரே "ஒரு" காரணம் மட்டும் பின்னனியாக இருக்க முடியாது. டைமண்ட் முன்வைப்பது போல் அழிவுகளுக்கு என்று ஒரு "பொது வழிமுறை" இருக்கிறதா? உண்மை இல்லாதது என எதுவும் இல்லை. குறிப்பாக, 'மாயா'நகர்களில் அழிவு விடயத்தில் தட்ப-வெப்ப, மண், விவசாயம் சார்ந்தவை மட்டும் ஒரே தலையாய காரணமாக இருக்க முடியாது. இவர்களை தவிர இதே மெசோ-அமெரிக்காவில் வேறு சில மறைவுகளும் நடந்தேறி இருக்கின்றன என்பதை அனைவரும் மறந்து விட்டிருக்கின்றனர்... உதாரணத்திற்கு, 'தெஓஐஹுஅக் அ ந்'(Teoeihuac à n)இன் கலாச்சாரம் (கி.பி 200-500 காலங்களின் அமெரிக்க கண்டத்தின் பெறுமைதக்க மிகப்பெரிய நகர வாழ் அமைப்பு கொண்டவை), இதில்லாமல், இன்னும் ஒல்மேக்(Olmèques) கலாச்சாரம்... இன்றைய நாட்களில் வழக்கமாக கூறப்படும் <<மாயா சமகால நாகரீகத்தின் அழிவு>> (அதாவது இந்த யுகத்தின் 800 மற்றும் 900 காலத்திய எண்ணிலங்கா தளங்களின் மறைவு) என்பது ஒன்று கூடிய பல நிகழ்வுகள் காலம், இடம் நெடுக பரவலாக மற்றும் பலவித அளவுகளில் தாக்கியதால் இருந்து இருக்க கூடும். சில நிகழ்வுகள் பல முழு மாநிலங்களை தாக்கின. மற்றவை சில நகரங்களை மட்டும் தாக்கின.

ஆண்டு 1000ம் வாக்கில், நகரங்கள் தனது மக்களை முழுதும் இழப்பதற்கு முன், இத்தாக்குதல்கள் முதலில் அதன் அதிகாரத்தில் உள்ளவர்களை சக்தி இழக்க செய்தது. பின் காலம் கழிந்து, ஹிஸ்பானிய முற்கால, மாயா உலகத்தின் முக்கியமான உயர் நகரங்களான சிச் எ ந் இட்ஜ் அ(Chich é n Itz à - 1221), பிறகு மயாப் அ ந் (Mayap à n - 1450)ஆகியவைகள் கைவிடப்பட்டன. பல நூற்றாண்டுகளாக, முழுதும் கைவிடப்பட்ட பெரும்பாலான கல் நகரங்கள் மண்ணில் புதைந்து மூழ்கிய நிலையில் இருக்க மனித வெறிகொண்ட காடுகள் அவைகளை இரையாக்கி விழுங்கின.
*
*
பெர்நாதெத் அர்நோ
சியான்ஸ் எ அவெனீர்
*
படங்கள் : இணைய சேகரிப்பு
*
மொழி பெயர்த்தது : மாசிலா.
படங்களின் விளக்கத்திற்கு இங்கே

25 ஜனவரி, 2007

ஆஸ்திரேலியாவின் ஆதி வரலாறு.

இந்நாள்வரை, பூர்வ குடிகளான 'அபோரிஜனல்' இக்கண்டத்திற்கு வந்து சுமார் 8000 ஆண்டுகள் இருக்கும் என நம்பப்பட்டது. 1969'ஆன் ஆண்டின் முங்கோ (Mungo) இனப்பெண், பிறகு முங்கோ இன ஆண் வாழ் தடயங்கள் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியின் முடிவுகள்படி, இவர்கள் சுமார் 45000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என தெரியவருகிறது. மண்ணின் பல படிவங்களின் அடியில் மிக நல்ல நிலையில் பாதுகாப்பாக இருந்த இவர்களின் எலும்பு கூடுகளை ஆராய்ந்து பார்த்ததில் இவர்கள் ஆசியாவிலிருந்து, கடல் மார்க்கமாக நுழைந்து பெருகி சிறுக சிறுக முழு கண்டத்தையும் அடைந்தனர் என தெரிய வருகிறது. மேலும் இவர்கள் வாழ்ந்த மற்ற பல தளங்களை ஆராய்ந்ததிலிருந்து, உலகத்திலேயே இவர்கள்தான் முதன் முதலில் தானியங்களை நசுக்கி மாவு செய்யும் முறை அறிந்திருந்தனர் எனவும் கூறப்படுகிறது.
*
*
ஆதாரம் : 'குரியர் இண்டர்நேஷ்னல்' எண் 846.
பிரெஞ்ச் வார பத்திரிகை.
மொழி பெயர்ப்பு : மாசிலா.