=கலிஃபோர்னியாவின் மின்னும் சூரிய ஒளியின் கீழ் வறுமையின் தாண்டவம்=
***லாஸ் ஏஞ்சலஸ் மையத்தில் இருக்கும், 12000 வீடற்ற ஏழைகளை கொண்ட ஸ்கிட் ரோ (Skid Row) மிகவும் பரிதாபத்துக்குறிய ஏழைகளின் வறுமைக்கு சாட்சியாக உள்ளது. இன்றைய நகராட்சி அவர்களுக்கு மாற்றுவழி காண முழுமுயற்சி எடுத்து வருகிறது.***
மேலோட்டமாக பார்க்கையில், லாஸ் ஏஞ்சலஸ்'இன் அந்த வீதியில் அப்படி ஒன்றும் நூதனமாக எதுவும் தெரியவில்லைதான். இரண்டு பாழடைந்த கிடங்குகளுக்கு இடையில் ஒரு மீட்டர் உயர குப்பை கூலங்களுள் புதைந்து கிடக்கும் ஒரு உயர்-அழுத்த மின்சக்தி-மாற்றி இயந்திரம் மட்டும் கண்ணுக்கு தெரிகிறது. ஆனால் கூர்மையான பார்வை கொண்ட ஆண்றியு ஸ்மித்'இன் கண்களுக்கு எதுவும் தப்பாது. இந்த பகுதியின் கமிஷனரான இவர் பல வருடங்களாக ஸ்கிட் ரோ பகுதியில், நகரின் நட்ட நடுவில் இருக்கும் இந்த பரந்த வீடற்ற ஏழைகளின் வெட்டவெளி தங்கு தளத்தை கண்கானித்து வருகிறார். மற்ற அதிகாரிகளின் கண்களுக்கு புலப்படாத விடயங்கள் எல்லாம் இவரால் மட்டுமே சரிவர யூகிக்க முடியும். அன்றும் அப்படித்தான். குப்பை கூலத்தில் இடையில் சேறடைந்த காலணியின் இரு பாதடிகள் எட்டிப்பார்ப்பதை வைத்தே அதனுள் யாரோ மறைந்திருப்பதை புரிந்துகொண்டார்.
"யார் அங்கே? வெளியே வந்து விடு! உயர்-அழுத்த மின்சார எச்சரிக்கை அட்டையை நீ பார்க்கவில்லையா? உள்ளேயே உயிருடன் கருகிவிடுவீர்கள்!" என தடியால் வேலியின் மீது உராசியபடி கூவினார்.
"எனக்காக கவலை படாதீர். எனக்கு அப்படி ஒன்றும் ஆகாது. கட்டுமான வேலை தளங்களில் நான் பல வருடங்கள் வேலை பார்த்தவன்" என உள்ளிருந்து ஆண் குறலில் பதில் வந்தது.
ஒல்லிய தேகத்துடனான, பதற்றத்துடன் காணப்பட்ட 51 வயது 'ஜேக்' தான் அவர். பணத்தொலைகள் காரணமாக அனைத்தையும் இழந்து, 1980இல் இங்கு ஸ்கிட் ரோ'வில் கரை ஒதுங்கினேன் என விளக்கினார். அன்றிலிருந்து இதைவிட்டு விட்டு விலகாத இவர் இங்குள்ள 12000 வீடற்றவர் வெட்ட வெளியில் தங்கிவாழும் இந்த தளத்தில் சிறிய கூடாரம் மேலும் அட்டைகளால் ஆன இரவு பாதுகாப்பு அன்றாடம் காய்ச்சி மையத்தில் தங்கி வாழ்பவர்களில் ஒருவர்.
நகராட்சி ஏற்பாடு செய்யும் உதவிகளை உதறி தள்ளிவிட்டு, ஏறக்குறைய ஓராயிரம் பேரைப்போல், மனநோய், மது, போதை அடிமை இன்னும்வேறு சில காரணங்களுக்காக ஜாக் வெளியே வீதியில் வாழ்வதையே விரும்புகிறார்.
இரவுடித்தனங்கள், மோசடிகள், குண்டர்கள் காரணமாக இதுபோன்ற வெட்டவெளியில் வாழ்வது வரவர காவல்துறையினரால் மிகுந்த கண்கானிப்பில் இருந்து வருகிறது. பூதாகரமான பிரச்சினைகள் ஏதும் இல்லாததால், பொதுமக்கள் பார்வைக்கு புலப்படாத, தொழிற்சாலைகள் தளத்தில் மறைவான இடத்தில் உள்ள ஸ்கிட் ரோ வீடற்றவர்கள் தளம் சென்ற பத்து ஆண்டுகளாக பொதுமக்கள் அனைவராலும் சகித்துக்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலமாக அனைத்து சமூக தலைவர்களும் இப்பிரச்சினையை முக்கியமான ஒன்றாக கருத ஆரம்பித்து இருக்கிறனர். வில்லியாம் ப்ரேட்டன் எனும் லாஸ் ஏஞ்சலஸ்'இன் புது காவல் துறை அதிகாரி இந்த தளத்தில் நடக்கும் குற்றங்களை ஒரு முடிவுக்கு கொண்டுவர சபதம் எடுத்திருக்கிறார்.நிலம் வாங்கும் எண்ணத்துடன், தனியார் வீடுகள் கட்டுமான அமைப்புகள் இந்த தளத்தை கழுகுகள்போல் சுற்றி வலைய வருகின்றனர். அரசியல்வாதிகள் கூட இவ்விடத்து மேயரான அந்தோனியோ வில்லாரைகோசா'க்கு "நாட்டின் வெட்கம்" எனக்கருதப்படும் இந்த அவலத்தை சீர்செய்ய அனைத்துவித உதவிகளை செய்ய ஒத்துழைக்க முன் வருகின்றனர். இருந்தாலும், இந்த முயற்சி வெற்றிபெற அதிக காலம் பிடிக்கும் என சொல்லப்படுகிறது.
இரயில் தண்டவாளங்களின் ஒரு கோடியில் அமைந்திருக்கும் ஸ்கிட் ரோ, XIX'ஆம் நூ.ஆண்டில் உருவானது. 'மேற்கில்' வேலை தேடி வந்தவர்கள் இங்கு குறைந்த விலை தங்கும்விடுதிகள் காரணமாக நிறைய பேர் இங்கு தங்கினர். பிறகு மதுவருந்தகங்கள், விபச்சார விடுதிகள், மத பரப்பிகள் என வெவ்வேறு நிலை மாறின. 1929'ஆம் ஆண்டு உள்நாட்டு பிரச்சினை மற்றும் இரண்டாம் உலகப்போரின் போது ஸ்கிட் ரோ'வில் மது, போதை அடிமைகள், மன நோயாளிகள், வியாதிக்காரர்கள் போன்ற சேவை-உதவி தேவையுள்ள நலிந்த சமூகத்தினரை இங்கு சேர்த்து மறுவாழ்வு தளம் என்ற நோக்குடன் கூட்டினர். ஆனால், ஒரு நூற்றாண்டிற்கு பிறகு, சமுதாயத்தின் உயிர் ஓட்டத்தில் இருந்து விலகிய அனைத்து நலிந்த மக்களின் மிகப்பெரிய முகாமாக மாறி காட்சி அளிக்கிறது. அதே வேளையில், பாதுகாப்பற்ற இவர்களை சுரண்ட அடாவடி குண்டர் கும்பல்களும் உருவாகின. குற்றங்களும் அதிகரித்தன. அனைத்து சமூக சேவை அமைப்புகளையும் ஒன்று சேர்த்து எந்தெந்த வழியிலோ கடின உழைப்புடன் இவ்வவலத்தை சரிகட்ட முயற்சித்தனர். எதுவும் நினைத்ததைபோல் சரிவர நடக்கவில்லை. மாறாக மேலும் மேலும் புதிய பிரச்சினைகள்தான் உருவாகின.அரசியல்வாதிகளின் பல ஆண்டு பொறுப்பற்ற போக்கினால், இன்று ஸ்கிட் ரோ அமெரிக்காவின் வெட்கத்துக்குறிய படுமோசமான வீடற்றவர்களின் வெட்டவெளி தங்குதளமாக விளங்குகிறது.

*
*
ஆதாரம் : 'குரியர் இண்டர்நேஷ்னல்' எண் 846.

பிரெஞ்ச் வார பத்திரிகை.
மொழி பெயர்ப்பு : மாசிலா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக