12 பிப்ரவரி, 2007

நிலவு மனிதனின் நடத்தையில் மாற்றம் ஏற்படுத்துகிதாம்...

சிறு வயதில் தாத்தா, பாட்டி எல்லாம் சொல்வார்களே.... ஞாபகம் இருக்கிறதா?
பௌர்ணமி அன்று வெளியில் படுக்க கூடாது..... கெட்டது
அமாவாசையில் பிறந்தவன்.... அப்படித்தான், தறுதலை...? என்று.
.
மேலும், நிலவொளியில் காதலர்கள் ஒரு தனி சுகத்தை..... ம்ம்ம்....
.
அப்போதெல்லாம், இதையெல்லாம் ஏதோ மூட நம்பிக்கை, சடங்கு அப்படி இப்படி என துச்சமாக மதித்தோம். நிலவின் நிலைப்படி பஞ்சாங்க கணக்குகளும் உண்டு. அவைகளையும் ஏதோ பழையோ கரடி என ஏளனம் செய்தோம்.

இப்போது நான் சமீபத்தில் படித்த ஒரு செய்திகளின்படி "நிலவு மனிதனின் நடவடிக்கைகளில் தாக்கம் உண்டாக்குகிறதாம்." என ஆய்வு பூர்வமாக கூறுகின்றனர்.

நம் பெரியவர்கள் சொன்னால்... மூட நம்பிக்கை,
இதையே வெள்ளைக்காரன் சொன்னால்.....வேத வாக்கு?

எனது முந்தையபதிவான "மாயாவின் அழிவு" லும் பஞ்சாக்கத்தை பற்றி
(http://naalainamathae.blogspot.com/2007/02/blog-post_11.html ) கூறப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கையில், நம்மிடம் நம் மூதாதையர்கள் தயவால் அரியபல அறிவு பொக்கிஷங்கள் அடங்கி கிடக்கின்றன என்பதே நிரூபனம் ஆகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக