தமிழ்மண தளத்தை பிடித்தவைகளில் சேமித்து வைக்கும்போது பெயர் அருகில் ஒரு சிறிய நீல நிற பூ வருமே தெரியுமா? அவர்தான் இவரோ? ஆனால், ஒரு சிறு வித்தியாசம். இங்கு பார்க்கும் இப்பூவிற்கு ஐந்து இதழகள் மட்டுமே. அவருக்கு ஆறு இதழ்கள். உண்மையில் அப்படி ஆறு இதழ்கள் கொண்ட பூ இருக்கிறதா? இல்லை, வெறும் கற்பனையா?
மேலும் சில படங்கள்.
நல்ல படங்கள். ஆறு இதழ்களுடன் பூ இருக்கிறதான்னு இனிமேல் தான் கவனிக்கணும் :)
பதிலளிநீக்குவாருங்கள் திரு.
பதிலளிநீக்குதமிழ்மணம் ஒரே போர் களமாக இருக்கிறது என நிலமையை கொஞ்சம் இலகுவாக்க இட்ட பதிவே இப்பூ படங்கள். மன அனைதி தேடி இங்கு வந்தால் கத்திகளும் கப்படாக்களும் போட்டி போட்டுக்கொண்டு பறக்கின்றன. தலையை காட்டவே பயமாக இருக்கிறது. :-((
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
வாழ்க்கை பாடங்கள் கற்றுத்தரும் உங்களது ஏழைகளை பற்றிய நிழற்படங்கள், முக்கியமாக, செங்கல் சூளையில் வேலை செய்பவர்களின் உருவங்கள் இப்போது என் கண் முன் இருக்கின்றன.
மீண்டும் நன்றிகள் திரு.
மாசிலா!
பதிலளிநீக்குஇந்த "மாசிலாப் பூக்கள்" எனக்கும் மிகப்பிடிக்கும்.
மிக அழகான படங்கள்...இது தானே இவற்றின் காலம்..எல்லாற்றுக்கும் பெயர் தான் தெரியாது. இதில் அப்பிள் பூவும் இருக்கிறது. சரியா,,??
வாருங்கள் யோகன் பாரிஸ்(Johan-Paris)
பதிலளிநீக்கு"மாசிலாப் பூக்கள்" அடடே! இதுவும் நன்றாகவே இருக்கின்றதே! சிரிப்பு ஒரு பக்கம் இருக்க மனமும் குளிர்ந்தது. என் தந்தை படித்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அவர் எனக்கு இட்ட பெயர் அல்லவா?
அந்த வெள்ளை நிற பூக்கள் ஆப்பிள் பூ என்றுதான் நினைக்கிறேன்.
இதில் என்னை மிகவும் கவர்ந்த நீல நிற பூவைப்பற்றி கொஞ்சம். தரையில் புற்களோடு புற்களாக வளர்ந்து கிடந்த இதனை பூதக் கண்ணாடி வைத்துதான் பார்க்க வேண்டும். அந்த அளவு சிறியது. தரையில் படுத்து பிடித்த படம்.
இப்பூக்களைப் போலவேதான் சில மனிதர்களும். அழகு, திறமை, கலை, ஞானம், உடையவர்கள் மீது போதிய நேரமும் கவனமும் செலுத்தாமல் வீணாக்கப்பட்டு வருகிறார்கள்.
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris).
அழகான பூக்கள்!
பதிலளிநீக்குபூக்கள் நிறத்தால் கவர்ந்து,
மணத்தால் பேசுகின்றன.
பூக்களிற்கு மயங்காதவர் யார்?
பகிந்தமைக்கு ரொம்ப நன்றி
வாருங்கள் செல்லி.
பதிலளிநீக்குவந்த வேகத்தில் வார்த்தைகளால் நீங்களும் ஒரு பூ வரைந்துவிட்டீர்களோ!
ஊக்கத்திற்கு நன்றி.
அழகானப் பூக்கள். என் பதிவுபடமும் மணி வடிவ மலர்தான். ஆனால் ஆறு இதழ்கள் உள்ளதா எனத் தெரியவில்லை :)
பதிலளிநீக்குஅருமையான படங்கள்... அப்படியே பூக்களின் பெயர்களையும் போட்டால் இன்னும் சிறப்பா இருந்திருக்கும் :)))
பதிலளிநீக்குவாருங்கள் மணியன்,
பதிலளிநீக்குவாருங்கள் ஜி - Z.
வருகை தந்ததற்கு மிக்க நன்றி.
வெள்ளை நிற பூக்கள் ஆப்பிள் மர பூக்கள் என்பது மட்டும் தெரியும்.
ஊக்கங்களுக்கு நன்றி.
ungalukku eppadingga ippadiyellam kelvi thonuthu?
பதிலளிநீக்குromba yosippeenggalo?
.:: மை ஃபிரண்ட் ::.
பதிலளிநீக்கு//romba yosippeenggalo? //
?
என்ன சொல்ல வர்றீங்க .:: மை ஃபிரண்ட் ::.?
நமக்கு அந்த கெட்ட பழக்கம் எல்லாம் கிடையாதுங்க. தமிழ்மணத்திலதான் அதுக்கு நிறைய பேரு இருக்கிறாங்க இல்லியோ?
:-))
Huernia procumbens , Barberry..
பதிலளிநீக்குஇது எல்லாம் 6 இதழ்கள் கொண்டதாம்
அதிசயம் தான்..