5 மார்ச், 2007

நாதஸ்வரம் பற்றி சில கேள்விகள்.

வணக்கம் அன்பர்களே!

நாதஸ்வரம் எனும் இக்குறிச்சொல்லிலேயே கலப்படம் ஆகியிருக்கிறதே. சுத்தமான தமிழ் குறிச்சொல் என்னவாக இருக்கும்?

இதற்கு கூட வாசிக்கும் ஒத்து வைப்பற்றி இன்னும் தெரிந்துகொள்ள ஆசை வந்துவிட்டது. யாராலும் கவனிக்கப் படாத இவ்வாத்தியம் உருவான வரலாறு, பின்புலம் என்னவாக இருக்கும்? இது இல்லாமலே கச்சேரிகள் நடத்த முடிமா?

இன்னொமொரு இணை வாத்தியமான ஜால்ரா விற்கு தமிழ் வார்த்தை என்னவாக இருக்கும்? தாளம் என்பது சரியான வார்த்தைதானா?

ஒரு சிறிய ஆராய்ச்சிதான்.

பாண்டிச்சேரியில் முத்தியால்பேட்டை எனும் ஊர் பக்கங்களில் பொதுவாக நாவிதர்கள்தான் இக்கலையை ஒரு இணைத்தொழிலாக கற்று பழகி பிழைத்தும் வந்தார்கள். மற்ற ஊர்களில் எப்படியோ?

உங்கள் பதிலுக்கு நன்றி.

10 கருத்துகள்:

  1. நாயனம் எனச் சொல்லிக் கேட்டு இருக்கிறேன். நமக்கெல்லாம் பீப்பீதான்! :)

    பதிலளிநீக்கு
  2. இசைவேளாளர்கள் என்று ஒரு வகுப்பினர் உண்டு. அவர்களில் பெண்கள் நடன கலைஞர்களாகவும் ஆண்கள் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களாகவும் வருவர். இந்த கருவியின் பெயரைப்பற்றி எனக்கு அதிக தெளிவில்லை. ஒத்து என்பது ஒரு தனி வகை நாதஸ்வரம் - அது மற்ற கச்சேரிகளில் தம்புரா அல்லது சுருதிப்பெட்டி எப்படி உபயோகப்படுத்தப்படுகிறதோ அது போல ஆதார சுருதியை தொடர்வதற்காக நாதஸ்வர கச்சேரிகளில் பயன்படுத்தப்படுவது.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா5/3/07, 7:35 AM

    அவர்களில் அதிகம் பேர் இதை வாசிக்காதது ஏன் ? :-)

    பதிலளிநீக்கு
  4. நன்றி இலவசக்கொத்தனார் (அப்பப்பா எம்மாம் பெரிய பேரு!).

    நன்றி லக்ஷ்மி.
    நல்ல விளக்கங்கள் கொடுத்து இருக்கீங்க. ஒத்து பற்றி நான் நினைத்ததைதான் சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  5. மாசிலா!
    நாயனம் எனும் சொல் ஈழத்திலும் வழக்கில் இருந்தது.
    இச் சொல் பற்றிய ஆய்வை மொழிவல்லுனர்கள் தான் கூறவேண்டும்.
    ஆனாலும் தங்கள் முத்திலால் பேட்டை செய்தி;எமக்குப் புதிது ஈழத்தில் இக்கலைஞர்களை "நட்டுவர்" என
    அழைப்பர். இப்போ இசை வேளாளர் எனக் குறிப்பிடுகிறார்கள்.
    பரம்பரையாக இதைப் பயில்பவர்கள்;மிகுந்த இசை ஈடுபாடுடையோர்.
    ஈழத்தில் இவர்கள் இசைப் பங்களிப்பு பற்றி நான் எழுதிய கட்டுரை ;இங்கே படிக்கவும்;
    இது சக வலைப்பதிவர் குமரனின்;கூடலில் வந்தது.
    http://koodal1.blogspot.com/2006/03/156.html

    பதிலளிநீக்கு
  6. "மகாராணி உனைத் தேடி வரும் நேரமே! எங்கும் குழல் நாதமே!"

    வைசா

    பதிலளிநீக்கு
  7. வைசா, என்ன சொல்ல வந்தீங்க?
    விலாசம் தவறி வந்துட்டீங்களா?
    எனக்கு ஒன்னும் புரியல!

    பதிலளிநீக்கு
  8. நாயனம் அதன் பெயர் என நினைக்கிறேன்.நாகஸ்வரம் என்றும் சொல்வார்கள். இசை வேளாளர் என்ற மரபினர் இதைக் குலத் தொழிலாகக் கொண்டவர்கள். தஞ்சை,திருவாரூர் பகுதிகளில் அதிகம் உள்ளனர்.தமிழகத்தின் முதல்வர் கலைஞரும் இம்மரபினர்.ஆனால் ஏனோ அவர்களை நாவிதர் என தப்பாக சொல்கின்றனர் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  9. // வைசா, என்ன சொல்ல வந்தீங்க?
    விலாசம் தவறி வந்துட்டீங்களா?
    எனக்கு ஒன்னும் புரியல!
    //

    சரியாத்தான் வந்திருக்கேன்னு நெனைக்கிறேங்க.

    அதில அழுத்தமா அந்தச் சொல்லைக் காட்டியுமா புரியலை?

    நாதஸ்வரத்தைக் குழல் என்றும் அழைக்கலாம்.

    வைசா

    பதிலளிநீக்கு
  10. உங்க பதிவோட அலைன்மெண்டை ஜஸ்டிபைடா வைக்காதீங்க. நெருப்புநரியில் தெரிய மாட்டேங்குது.

    பதிலளிநீக்கு