3 மார்ச், 2007

பழமரபணுவியல் : மனிதர்கள் இப்பூமியில் பரவியது எப்படி?

ஒரு குடல்புண் கிருமியின் ஆப்ரிக்க வெளியேற்றம்.


ஹெலிக்கோபேக்டர் பைலோரி ( helicobacter pylori) எனும் குடல்புண் விளைவிக்கும் கிருமியின் வரலாற்றை மறு-ஆக்கம் (reconstruction) செய்து ஆராய்ச்சியாளர்கள் நமது முன்னோர்கள் நாம் வாழும் இப்பூமியில் பரவியது எப்படி என்பதை துருவி கணித்திருக்கிறார்கள்.
ன்ன இது, மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுபோல் தெரிகிறதா?
நாகரீக மனிதர்கள் ஆப்ரிக்க கண்டத்தை விட்டு வெளியேறி உலகின் ஏனைய பகுதிகளை ஆக்கிரமிக்க கிளம்பிய போது அவர்கள் வெறும் வயிற்றுடன் போகவில்லை. இன்று உலகத்தின் ஐந்து கண்டங்களையும் ஆக்கிரமித்து இருக்கும் ஹெலிக்கோபேக்டர் பைலோரி கிருமியை வயிற்றில் கூட்டிக் கொண்டேதான் அன்றும் புறப்பட்டார்கள்.
குடல்புண் வியாதிக்கு காரமாக இருக்கும் இக்கிருமி இன்று உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து சமுதாயங்களிலும் பரவலாக இருக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் சித்தத்திற்கு இதுவே சில ஆய்வுகளை உதிக்கச் செய்ய வழிவகுத்தது. கண்டத்திற்கு கண்டம் இக்கிருமிகள் காலப் போக்கில் சில சுய மாற்றங்களை அடைந்துவிட்டன. இபோது அதனுடைய மரபணு மாற்றங்களை ஆராய்ந்து பட்டியலிட்டு பின்னோக்கிச் சென்று துருவி இவைகளின் ஆரம்ப ஆதிமூலக் கிருமிகள் ஆப்ரிக்காவை விட்டு வெளிவந்த காலத்தை கணக்கெடுத்தனர். அதே நேரத்தில் இப்போதைய நாகரீக மனிதனின் காலத்தையும் சேர்த்ததே இதுவும்.
ஹெ.பைலோரி, நாகரீக மனிதனைப்போலவே, மனித குலத்தின் தொட்டிலை விட்டு ஏறக்குறைய 58.000 ஆண்டுகளுக்கு முன்னதாக புறப்பட்டிருக்கும் எனும் கூற்றை, இயற்கை (Nature) இதழில், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தின் பிரான்சுவா பலூ தலைமையிலான ஒரு பண்ணாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு முன் வைத்திருக்கிறது.
க்காலத்திற்கு பின்னோக்கிச் செல்லும் பொருட்டு அகில உலகத்தின் 51 வகை இனக்குழுக்களிடம் சற்றேறக்குறைய 769 ஹெ.பைலோரி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இம்மாதிரிகளின் மரபணு வித்தியாசங்கள் இவைகளை ஆறு வகையான மரபணு குழுமங்களாக பகுக்க வழி வகுத்தன. அதே வகையில் இக்குழுமங்கள் ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா, வட கிழக்கு ஆப்ரிக்கா, தெற்கு ஆப்ரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளுக்கு தகுந்தாற்போல் பகுக்கப்பட்டன. இப்பகுப்புகள் இப்போதுள்ள பலவித மக்கள் குழுமங்களை பிரதிபளிக்கும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன.
ருப்பதிலேயே, வடகிழக்கு ஆப்ரிக்காவின் மொத்த கிருமி வகைகள்தான் மிகப்பெரிய மரபணு வித்தியாசங்களை கொண்டதாக இருக்கின்றன. ஏனைய ஐந்து பூலோகப் பகுதிகளில், கிழக்கு ஆப்ரிக்காவை விட்டு தூர விலக விலக இவைகளின் மரபணு வித்தியாசங்கள் மங்கிப் போகின்றன. மனித குலத்தின் பிரிவுகளை கோடிட்டு காட்டும் மேலும் ஒரு தனித்துவம் இது.
பொதுவாகவே அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட மனிதகுல ஆதியின் ஆரம்பத்தை இக்கணிப்பு நிருபணம் செய்கிறது. அதாவது : இக்கிருமிகளின் முன்னோடி வேர்க்குழு ஆப்ரிக்க தொட்டிலில் போதிய அளவு நீண்ட காலம் வாழ்ந்து பலவித மரபணு மாற்றங்களை அடையப் பெற்றிருந்தது. இம்மக்களின் ஒரு சிறு குழுமங்கள் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி மற்ற கண்டங்களில் குடியேறியபோது கூடவே இவர்கள் தங்களது மூதாதையர்களின் ஆதி மரபணுக்களையும் சுமந்துச் சென்றார்கள்.
வைகளிலிருந்து, சுய உருமாற்றங்கள் அடைவதற்கான சராசரி காலத்தையும், ஆப்ரிக்க ஆதிமூல முன்னோடி வேர் கிருமிகள் மற்றும் இக்காலத்திய கிருமிகள் இடையே எத்தனை சுய உருமாற்றங்கள் என்பதனை கணக்கிட்டு, ஹெ.பைலோரி ஆப்ரிக்க கண்டத்தை விட்டு ஏறக்குறைய 58.000 ஆண்டுகளுக்கு முன் இதைனை வயிற்றில் கொண்ட மனிதனின் விருந்தாளியாக வெளியேறி இருக்கும் என மரபணு வல்லுனர்கல் கூறுகின்றனர்.
நாகரீக மனிதன் ஆப்ரிக்காவை விட்டு ஏறக்குறைய 60.000 ஆண்டுகளுக்கு முன் வெளியேறி இருக்கக் கூடும் என ஏற்கனவே யூகிக்கப்பட்டதை இம்முடிவுகள் ஆமோதிக்கின்ற வகையில் அமைந்துள்ளன. இருந்தாலும், வேறு பல மாற்றுக் கேள்விகளுக்கு விடையில்லாமலேயே இருக்கின்றன. அதாவது : நாகரீக மனிதன் ஆப்ரிக்காவை விட்டு ஒரே பெரும் அலையாகவா அல்லது பல சிறு அலைகளாக கிளம்பினானா? இப்படி கிளம்பி குடியேறியவன் ஆசியாவிலும் மற்றும் ஐரோப்பாவிலும் தான் சந்தித்த நாகரீகமற்ற மக்களை முழுதும் தள்ளிவிட்டு இடம்பிடித்தானா?
அலீஸ் போம்புவா
சியான்ஸ் எ அவெனீர்
(08/02/07)
மொழி பெயர்ப்பு : மாசிலா.
பழமரபணுவியல் : paléo-généologie.

7 கருத்துகள்:

  1. நல்ல தகவல் ஆனால் இவை எந்தளவு தூரம் நம்பகமானவை என்பது மேற்கொண்டு செய்யபடும் ஆராய்ய்சிகளை அடுத்தெ முடிவு செய்ய முடியும்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா3/3/07, 9:46 AM

    நீங்கள் எந்த தமிழ் எழுத்து குறியை உபயோகித்தீர்கள்

    நான் நெருப்பு நரி-ல் என்னால் இதை படிக்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
  3. வி.ஜெ சந்திரன் வரவுக்கு நன்றி. இக்கட்டுரையை நான் முதன் முதல் படிக்கையில் ஆராய்ச்சியாளர்களின் புத்தி கூர்மையை கண்டுதான் மிகவும் வியந்தேன். ஒரு வேளை, இத்துறையை சார்ந்தவர்களுக்கு இதெல்லாம் சகஜமோ?

    இருக்கலாம்.

    இராஜராஜன் உங்கள் கட்டம் எனக்கு புரிகிறது. ஏற்கனவே வேறொரு பதிவர் இப்பிரச்சினை எழுப்பி இருந்தார். இது என் அடைபலகையில் உள்ள சிறு தவறுதல் காரணமோ?

    இருந்தாலும் இப்போது நான் வரிகள் அனைத்தும் இடதுபக்கம் அடுக்கி வைக்கப்போகிறேன். இதன் பிறகாவது உங்களுக்கு படிக்க வருகிறதா என பாருங்கள்.

    மற்றபடி நான் உபயோகிப்பது ஒருங்குறிதான்.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. //நாகரீக மனிதன் ஆப்ரிக்காவை விட்டு ஒரே பெரும் அலையாகவா அல்லது பல சிறு அலைகளாக கிளம்பினானா? இப்படி கிளம்பி குடியேறியவன் ஆசியாவிலும் மற்றும் ஐரோப்பாவிலும் தான் சந்தித்த நாகரீகமற்ற மக்களை முழுதும் தள்ளிவிட்டு இடம்பிடித்தானா?//
    நாகரீகமற்ற மனிதர்கள் என யாரைக் குறிப்பிடுகிறீர்கள் மாசிலா? நியாண்டர்தல்களையா? எனில் அவர்கள் க்ரோ-மக்னான் மனிதர்களிடமிருந்து அப்படி ஒன்றும் 'நாகரிக' நிலையில் வேறுபட்டிருக்க மாட்டார்கள். நியாண்டர்தல்கள் நாம் சார்ந்துள்ள மானுட இனமா (species) அல்லது மற்றொரு மானுட இனமா என்பது விவாதத்துக்குரியது என்றாலும் கூட. நிற்க..ஸ்டீபன் ஓபன்ஹைமரின் கருதுகோளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். ஆப்பிரிக்காவிலிருந்து எழுந்த முதல் மானுட அலை தெற்காசியா வந்தது. பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்தது. சில முக்கிய மரபணு பன்மையாக்கங்களுக்கு தெற்காசிய உதயகளமாக அமைந்தது.இங்கு கொடுக்கப்பட்டுள்ள அருமையான அனிமேஷனையும் பாருங்கள்:
    இங்கு http://www.bradshawfoundation.com/stephenoppenheimer/

    பதிலளிநீக்கு
  5. இப்பதிவின் கருத்தோடு ஒட்டிய ஒரு கேள்வியை எனது இப்பதிவில் மூன்றாம் கேள்வியாக வைத்துள்ளேன். எனக்குப் பதில் தெரியாது? உங்களிடம் பதில் இருப்பின், உதவுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. நல்வரவு அரவிந்தன் நீலகண்டன் அவர்களே.
    இத்துறையில் நல்ல ஞானம் உடையவர்போல் தெரிகிறீர்.
    நன்று.
    நான் படித்த எனக்கு பிடித்த சில பிரசுரங்களை தமிழுள்ளங்கள் அறிந்துகொள்ளவே வெறுமனே இப்படி மொழி பெயர்த்து எழுதினேன். மற்றபடி இத்துறை சார்ந்தவனில்லை. இதில் நல்லறிவு உடைய நீங்கள் நேரம் ஒதுக்கி நல்ல துறைசார் கட்டுரைகள் எழுதினால், வரவேற்கத் தக்கதே.

    உங்களது விளக்கப்படங்கள் அருமை.
    ஆக்கம் செய்ய முயற்சிப்பேன். அதன் விளக்கப்படி புரிவதாவது : என் கட்டுரையின் ஆழக்கருத்து நியாண்டர்தல்களையே மையமாகக் கொண்டிருக்கிறது என்பதே.

    நன்றி அரவிந்தன் நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  7. அன்பர் தருமிக்கு வணக்கம். நல்வரவு.

    உங்கள் கேள்விகளூக்கு பொருமையாக பதில் அளிக்க முயற்சிக்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு