15 ஆகஸ்ட், 2007

நாகாசாக்கியை அழித்தது நியாமானதா???

1947 ஆகஸ்ட் 9 அன்று நாகாசாக்கியில் அமெரிக்கர்கள் தங்களது இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் நாகாசாக்கியில் எரிந்தனர். 70.000 உயிர்களை குடித்த இச்செயல் நியாயமானதா? 60 ஆண்டுகளுக்கு பிறகும் இக்கேள்விக்கு இன்றும் பதில் இல்லாமலே இருக்கிறது.

சில யூகங்கள் மட்டும்

ஹீரோஷிமாவில் எரியப்பட்ட லிட்டில் பாய் அணுகுண்டு வீச்சைப்பற்றி யாருக்கும் எந்த கேள்விகளும் எழுந்ததில்லை. இது போர் வழக்க அடிப்படையில் எதிரிக்கு கொடுக்கப் பட்ட ஒரு அதிரடி வைத்தியமாக கருதப்படுகிறது.

ஆனால நாகாசாக்கியில் வீசப்பட்ட ஃபேட் மேன் அணுகுண்டு தேவை இல்லாமலும் அமெரிக்கர்களின் சொந்த ஆதாயங்களுக்காக எரியப்பட்டது என சில சர்ச்சைகள் எழுந்திருக்கிறது.

ஜப்பானியர்களின் முரட்டுத்தன நாடுபிடிக்கும் அராஜக அரசாங்கத்தின் பொறுப்பு இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், மீள முடியாத அதிநாசங்களை விளைவிக்கும் இக்குண்டின் தன்மைகைளை நன்கு அறிந்த அமெரிக்கர்கள் நாகாசாக்கியை அழிக்க கொஞ்சமும் தயங்காமல் ஃபேட் மேனை எரிந்து அதனை நாசமாக்கினர்.


ஏன் இப்படி செய்தார்கள்?

இதுதான் இன்று அனைவர் மனதிலும் நிற்கும் கேள்வி.

யால்ட்டா ஒப்பந்த்தப்படி, ஆகஸ்ட் 8 அன்று ரஷ்யர்கள் ஜப்பானிடம் போர் பிரகடனம் செய்த சில மணி நேரங்களில் மான்ச்சூரி, சக்காலைன் மற்றும் கூரைல்ஸ் தீவுகள் (Mandchourie, Sakhaline, Kouriles) ஆகியவைகளை ஆக்கிரமிப்பு செய்தனர். இது மட்டுமில்லாமல் ஜப்பானிய தீவுகளைத் தாண்டி கொரியாவிலும் ரஷ்யர்கள் கால் பதித்தனர். ரஷ்யர்களின் இவ்வாக்கிரமிப்புகள் அமெரிக்கர்களுக்கு சில மன சஞ்சலங்களை உண்டாக்கியது.

இவர்களை பயமுறுத்த தங்களது ஆயுத பலணை காட்டவே நாகாசாக்கியில் இரண்டாவது அண்குண்டு வீசப்பட்டதாக யூகிக்கப்படுகிறது. ஜெனரல் மாக் ஆர்தர் ஜப்பானை ரஷ்யர்களுடன் கூட்டாக சேர்ந்து ஆக்கிரமித்து நிர்வகிக்க தனது மறுப்பை வெளிக்காட்டுகிறார்.

1955ல் ரஷ்யர்கள் மான்ச்சூரியை விட்டு வெளியேறுகிறார்கள். சாக்கலைன் மற்றும் கூரைஸ் தீவுகள் இன்றும் ரஷ்யர்கள் வசமே இருக்கின்றன. 1951 ஆம் ஆண்டின் சான் பிரான்சிஸ்கோ போர் முடிவு ஒப்பந்தத்தில் ரஷ்யா கையொப்பமிட மறுக்கிறது. இதன்படி பார்த்தால், ரஷ்யா இன்றும் ஜப்பானுடன் போரில் இருக்கிறது.

நன்றி "Lemonde", பிரஞ்ச் நாளிதழ்.

1 கருத்து:

  1. மாசிலா , நல்லப்பதிவு ,

    இம்பீரியல் சக்திகளுக்கு தாக்கு பிடித்து எதிர்ப்பு காட்டிய ஒரே ஆசிய நாடு ஜப்பான் தான். எனவே ஜப்பானின் செயல் நாடு பிடிக்கும் செயல் என சொல்ல முடியாது. பல பேட்டை ரவுடிகள் இருக்கும் இடத்தில் தன்னையும் அப்படி காட்டிக்கொண்டால் தான் அவர்களிடம் இருந்து தப்ப முடியும் என்ற நிலை கூட இருந்து இருக்கலாம்.

    பியர்ல் ஹார்பர் படம் பார்த்தீர்களா அதிலும் பழைய படம் ஒன்று இருக்கிறது அத நன்றாக இருக்கும். பியர்ல் ஹார்பரை ஜப்பான் தாக்கியது தான் அமெரிக்க அணு குண்டு வீசக்காரணம்.ஜப்பான் செய்த தவறும் அது தான். ஒரு மொழிபெயர்ப்பு பிரச்சினையால் தான் அந்த தாக்குதல் நடந்தது என்று சொல்வார்கள்.

    ஆனால் இரண்டாவது குண்டு ஏன் வீச வேண்டும். கேள்விக்குறியது தான் அது நீங்கள் சொன்னது போல தங்கள் பலத்தை காட்டவாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு