9 ஆகஸ்ட், 2007

நேரங்கள், இடங்கள், மனிதர்கள். (உள்மன காட்சிகள்).

இன்று இரயிலில் பயணம் செய்துக்கொண்டிருக்கிறேன்.
சிறிய பயணம்தான்.
மிகுந்தது பத்து அல்லது பதினைந்து நிமிட பயணம்தான்.
எதிரில் அமர்ந்திருக்கும் சக பயணிகளை பார்க்கிறேன்.
ஒரு சிலரை நேரடியாகவே நேருக்கு நேர் பார்க்கிறேன்.
வேறு சிலரை அவர்கள் என்னை பார்க்காதிருக்கையில் பார்க்கிறேன்.
உடனே அவரை, அவர் உடையை, அவர் பாணியை கவனிக்கத் துவங்குகிறேன்.
என் உள் மனத்திரையில் பலவித படங்கள் அசுர வேகத்தில் மாறி மாறி ஓடுகின்றன.
அவரைப்பற்றி, அவர் பின்புலத்தைப்பற்றி, பூர்வீகம், சமுதாயம், வளர்ப்பு, கலாச்சாரம், பண்பாடு.
என்னையே நான் மறந்துவிடுகிறேன். அவர் சிந்தனா எல்லையை கடந்து அவரது அந்தரங்கத்தில் நான் புகுந்துவிட்டிருந்தேன்.
என் சக்திகளை, என் நேரங்களை அவர்கள் உறிந்துகொண்ருக்கிறார்கள்.
எங்கு பார்த்தாலும் மக்கள். பலவித மக்கள். பல இன மக்கள்.
ஒவ்வொருவரும் ஒருவிதம். அனைவரையும் என்னால் இப்படி எவ்வளவு நேரங்களுக்குத்தான் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?
அய்யகோ, என் நேரங்கள் இப்படித்தான் வீணாகின்றவா?
இருந்தாலும், இவ்வுலகில் இந்த தருணத்தில் நானும் அவர்களும் ஒரே இடத்தை ஒரே நேரத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறோம்?
பார்க்காமல் எப்படி?
நினைக்காமல் எப்படி?
பிறக்கும் வரை தாய் வயிற்றில் கொடியில் ஒட்டிக்கொண்டு ஊசலாடி வருகிறோம்.
வெளியே இக்கொடி வெட்டிய பின் காலம் என்னும் கடிகார கொடிக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுவிடுகிறோம்.
எல்லாமே காலம் காலம் என ஆகிவிட்டது.
வர வர இடம் என்கிற வார்த்தைக்கு பொருள் இல்லாமலே போய்விடுகிறது.
ச்சீ, என்னால் பொறுக்க முடியவில்லை.
இவர்கள் எல்லோரும் என்னிடமிருந்து எதையோ திருடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆம், என் காலத்தை.
அவர்களை பார்க்கும் நேரம் நான் அவர்களாகி விடுகிறேன்.
என்னை அவர்களுக்குள் அபகரித்துக்கொள்கிறார்கள்.
ஹூம்! வேண்டாம் இது உனக்கு.
பேசாமல் உன் கண்களை மூடிக்கொண்டு உன் சொந்த அந்தரங்க குடும்ப வாழ்க்கை பிரச்சினைகளைப் பற்றி மட்டும் யோசிக்க உன் நேரத்தை செலவிடு என என் உள் அவன் ஆனையிடுகிறான்.
கேட்டேன்.
அடிபனிந்தேன்.
கண்களை மூடியவண்ணம் மனக்குதிரை செல்லும் திசைகளை போக்கினை கவனிக்க ஆரம்பிக்கிறேன்.
மறுபடியும் இந்த நேரத்தை பற்றியே கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
எனக்கும் இடையில் இருக்கும் இந்த நேரத்திற்கும் என்னென்ன தொடர்புகள்? நான் எதனுடம் இணைக்கப் பட்டிருக்கிறேன்?
எதனுடன் பின்னப்பட்டிருக்கிறேன்?
நான் எந்த கொடியின் நுனிப்புழு. மனக்குதிரை வெகு தூரத்தில் ஆழமாக செல்கிறார்.
உண்மை உலகில்நான் பார்த்த படித்த பல காட்சிகள் அனைவற்றையும் ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வருகிறேன்.
ஆம் நாம் சுதந்திரம் இல்லாமல் காலத்தின் நேரத்தின் கயிற்று முனைகளில் கட்டி ஊசலாய் அந்தரத்தில் ஆடவிடப் பட்டிருக்கிற வெறும் இயந்திரங்களே. ஆதி முதல் அந்தம் வரை நம் யாருக்கும் சுதந்திரம் எனபது கிடையவே கிடையாது.
காலத்தில் இருந்து விடுதலைதான் அடைய முடியுமே தவிர சுதந்திரம் அடையவே முடியாது. நாம் அனைவரும் ஒரே காலத்தினை, ஒரே இடத்தினை பகிர்ந்து வருகிறோம்.
கடைசிவரை, நாம் அனைவரும் கொடி மனிதர்களே!
அன்றாடம் இதே காட்சிகள்.
அன்றாடம் இதே கேள்விகள்.
அன்றாடம் இதே முடிவுகள்.

10 கருத்துகள்:

  1. மாசிலா,

    உளவியல் ரீதியாக அலசி இருக்கிரீர்கள் உங்கள் பயணத்தையும் அது சார்ந்த பார்வையையும், ஆனாலும் ரொம்பவும் யோசித்து தலைமுடியை இழக்க வேணாம்(என்னை விட ஒரு 2 அங்குலம் நீளமாவே இருக்கு உங்கள் கேசம்,)

    ஃபயர் பாக்ஸில் எழுத்துகள் உடைந்து வருகிறதே ஏன்?

    பதிலளிநீக்கு
  2. சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  3. மாசிலா,

    தனித்தனி வரிகளாக எழுதினால், கவிதைப் போலவும் தத்துவம் போலவும் இருக்கும் !

    :)

    ஆக்கம் நல்லா இருக்குங்க. காலத்தின் கைகளில் பொம்மைகள் நாம்.
    :)

    பதிலளிநீக்கு
  4. வருக வவ்வால். உங்கள் கருத்துக்கு நன்றிங்க. தலை முடிய பத்திய கவலைய விட்டுடுங்க. கொட்டுனாகூட சீக்கிரமே மறுபடியும் எனக்கு வளர்ந்துடும்.
    ;-D

    துளசி கோபால் உங்க வருகைக்கும் பாராட்டுதலுக்கு ரொம்பவும் நன்றிங்க ஐயா.
    உண்மையிலேயே நான் இந்த நேரத்தைப் பற்றி சதா மண்டைய போட்டு குடைந்துகொண்டே இருப்பேன். இது விசித்திரமான ஒரு மாயம் என்றே நினைக்கிறேன்.

    கோவி.கண்ணன் ஐயா உங்க வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுதலுக்கும், அறிவுரைக்கும் நன்றிங்க.

    நீங்க உரைத்த மாதிரியே பக்கத்தை மாற்றி அமைத்துவிட்டேனய்யா.

    உங்க மூன்று பேருக்கும் மீண்டும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. மன அலசலின் நல்லதொரு வெளிப்பாடு!!;-)

    பதிலளிநீக்கு
  6. வாங்க யோசிப்பவரே.
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

    எல்லாம் சும்மா ஒரு கிறுக்கல்தான்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு மாசிலா.

    பதிலளிநீக்கு
  8. வாங்க வெற்றி.
    உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. /பிறக்கும் வரை தாய் வயிற்றில் கொடியில் ஒட்டிக்கொண்டு ஊசலாடி வருகிறோம்.
    வெளியே இக்கொடி வெட்டிய பின் காலம் என்னும் கடிகார கொடிக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுவிடுகிறோம்.
    எல்லாமே காலம் காலம் என ஆகிவிட்டது./

    எவருக்காகவும் காத்திருக்காமல் காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நம்மையும் அறியாமல் நாமும் அதனுடன் இழுபட்டு போய்க்கொண்டே இருக்கிறோம்.

    (அப்புறம் கோவி சார் சொன்னத கொஞ்சம் கண்டுக்குங்க ;))

    பதிலளிநீக்கு
  10. வாங்க அருட்பெருங்கோ. உங்க கருத்திற்கு மிக்க நன்றி.

    //(அப்புறம் கோவி சார் சொன்னத கொஞ்சம் கண்டுக்குங்க ;))// இன்னுமா?!!! அதேன் முடிஞ்ச வரைக்கும் மாத்தினேட்டேனுங்கள!

    பதிலளிநீக்கு