15 செப்டம்பர், 2007

பிம்பத்தின் பிடியில்!

அழகி எனும் பிம்பத்தின் பிடியில்

அரசியல்வாதி எனும் பிம்பத்தின் பிடியில்

அறிவாளி எனும் பிம்பத்தின் பிடியில்

கொள்கைவாதி எனும் பிம்பத்தின் பிடியில்

மதவாதி எனும் பிம்பத்தின் பிடியில்

பகுத்தறிவாளன் எனும் பிம்பத்தின் பிடியில்

நாத்திகன் எனும் பிம்பத்தின் பிடியில்

ஆத்திகன் எனும் பிம்பத்தின் பிடியில்

நடிகன் எனும் பிம்பத்தின் பிடியில்

கணவன்-மனைவி எனும் பிம்பத்தின் பிடியில்

படிப்பாளி எனும் பிம்பத்தின் பிடியில்

நல்லவன் எனும் பின்பத்தின் பிடியில்

சாதிகள் எனும் பிம்பத்தின் பிடியில்

தலித் எனும் பிம்பத்தின் பிடியில்

இதர பல பிம்பங்கள் அனைவற்றின் பிடிகளிலும்
நாம் நம் வாழ்க்கைகளை சிக்க வைத்து அதை காப்பாற்றவே
வாழ்நாட்கள் அனைத்தையும் இழந்து வருகிறோம்.

மனிதா!

ஏன் உன்னை நீயே ஒரு கூண்டுக்குள் சிறை வைத்தாய்?

மற்றவர்களுக்காக

நீ ஏன் சிறை அடைந்தாய் அல்லது அடைக்கப்பட்டாய்?

எப்போது நீ இவைகளிலிருந்து விடுதலை பெறப் போகிறாய்?

பிம்பங்களை உதறித் தள்!

சுதந்திரமாக வாழ கற்றுக்கொள்!

நீயும் ஒரு காலத்தில் சிறு பிள்ளையாக இருந்தாயே!

அதை நினைவு கூர்வாயா?

மறுபடியும் குழந்தையாக, இளைஞனாக மாறு!

காற்றை உணர நேரம் எடுத்துக்கொள்.

குடிக்கும் தண்ணீரில் சுவை அறிய கற்றுக்கொள்.

அன்பை கொடுக்க கற்றுக்கொள்!

இதுவே நல்ல தருணம்

இப்போதே மாறிவிடு

மறுபடியும் ஒரு புது மனிதனாக

சுதந்திர மனிதனாக பிறப்பாயாக!

இது உன்னால் முடியும்!

4 கருத்துகள்:

  1. மாசிலா ,

    நல்லா சொன்னிங்க... கேட்கத்தான் யாரும் தயாராக இல்லை!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா15/9/07, 12:28 PM

    நல்ல கவிதை

    visit the link
    பிம்பங்களின் உலகம்
    http://www.jyothiramalingam.org/blog/?p=31

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை மாசிலா.பின்பற்ற முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. மாசிலா,
    " பிம்பங்களின் பிடியில்" ஒரு நிஜவாழ்க்கையில் ஒன்றிவிட்ட உண்மை இது. நானும் ஒரு பெரிய தலையின் ஆங்கில உரையை தமிழாக்கம் செய்துள்ளேன். வாசித்து விமர்சியுங்கள்.

    பதிலளிநீக்கு