29 ஏப்ரல், 2008

தீண்டாமை எனும் ஈனச்செயல்கள்!

வெட்கம், மானக்கேடு, அசிங்கம்...

இன்றைய உலகில் இன்றும் இதுபோன்ற தீண்டாமை எனும் ஈனச்செயல்கள் நடப்பது இந்தியாவில் மட்டும்தான் ந‌ட‌க்கக் கூடும். இப்பிரச்சினையில் கடைக்காரரை மட்டும் குறை சொல்லக்கூடாது. பிழைப்பிற்கு இதுபோன்ற ஈனச்செயல்களை செய்ய அவர் கட்டாயப் படுத்தப்பட்டு இருப்பார். முக்கிய குற்றவாளிகள்: ஊரில் உள்ள மற்ற மனிதர்களாகவே இருப்பர்.

எது எப்படியோ. ஆகமொத்தத்தில் இதெல்லாம் வெறும் கேடுகெட்ட‌ மூடத்தனமே. வெறுமனே மற்றவர்களை மட்டந்தட்டி தன்னை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கும் இச்சிறுபுத்தி மனிதர்கள் இந்திய மக்கள் சமுதாயத்தை உள்ளிருந்தே அரிக்கும் பாழும் கிருமிகள். கையாளாகாத முட்டாள்கள். இந்தியாவின் எதிரிகள். எங்கிருந்தோ வந்த நாடோடி பார்ப்பனன் உருவாக்கிய சாதி அமைப்புகளை தாங்கி உயர்த்தி, அவனின் விருப்பப்படி மன்னின் மைந்தர்களை ஊதாசீனப்படுத்தும் இவர்களது தீண்டாமை செயல்களானது : காட்டிக்கொடுப்பது, கூடே இருந்துகொண்டே சக சமுதாய மக்கள் அழிவிற்கு குழி வெட்டுவது, சமுதாய ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பது, அமைதி வாழ்விற்கு பங்கம் விளைப்பிது போன்ற குற்றங்களுக்கு இனையானது. சமுதாய முன்னேற்றத்திற்கு இடைஞ்சல் தரும் இதுபோன்ற நஞ்சுக் காளான்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி சிறையில் அடைத்து ஒற்றுமையுடன் வாழ்வதெப்படி என பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இதுபோன்று த‌ங்க‌ளை தாங்க‌ளே உயர்த்திகொள்ளும் ம‌னித‌ர்க‌ளின் பிள்ளைக‌ள் (ஏழை எளியவர்களின் பிழைப்பில் உடல் வளர்த்து, அவர்களது உழைப்பிற்கு தகுந்த‌ போதிய ஊதியம் கொடுக்காமல் சக்திகளை கொள்ளை அடித்து) பெரிய‌ ப‌டிப்புக‌ள் ப‌டுத்துவிட்டு வாலிப வயதில் த‌ங்க‌ள் கிராம‌ங்க‌ளை விட்டுவிட்டு பெரிய‌ ந‌க‌ர‌ங்க‌ளிலோ, அந்நிய‌ நாடுக‌ளிளோ வேலை செய்வார்க‌ள். அந்நிய‌ நாடுகளிலோ, மாடு ம‌ற்றும் பன்றி மாமிச‌ங்க‌ள் உண்ணும் பல இனத்து ம‌னித‌ர்க‌ளுக்கு ஈடாக‌, ச‌ரிச‌மமாக, அவர்களுக்கு கீழ்வேலை வேலை செய்து ஒன்றுபட ஒற்றுமையுடன் வாழ்ந்தே தீரவேண்டு. அப்போது இவ‌ர்களது தீண்டாமைக‌ளை தூக்கி எரிந்துவிட்டு இனம் தெரியாத யார் யாருக்கோ கூழை கும்பிடு போட்டே தீர‌வேண்டும். ப‌ண‌த்திற்கு இவ‌ர்கள் எதையும் செய்வார்க‌ள். 'அதையும்' கூட‌ செய்வார்க‌ள்.

தீண்டாமைக‌ளை அட‌க்கி ஒழித்துக்க‌ட்டுவ‌த‌ற்கு மாற்று வ‌ழிக‌ள் நிறைய இருக்கின்ற‌ன. தீண்டாமை என்றொரு பூதம் என்றுமே இருந்தது இல்லை. எல்லாமே ஒரு எழுதப்படாத உடன்படிக்கையின் பேரில்தான் நடக்கிறது. ஏமாற்றுபவனும் சரி, ஏமாற்றப் படுவனும் சரி, எல்லாமே கற்பனைதான். மனோவசிய முறையில் ஒருவன் மற்றவனை நோகடித்து அழிப்பதில் சுக‌ம் காணுகிறான். இன்னொருவ‌னோ அடிவாங்குவ‌தில், வலியில் த‌ன் சுய‌ அழிவில் சுக‌ம் காணுகிறான். அனைவ‌ருமே மனோ வியாதிக்கார‌ர்க‌ளே! இரு ச‌முதாயமும் இவ்விழி நிலைகளுக்கு பொறுப்பு.

ஏமாற்றாதே, ஏமாறாதே!
அடிக்காதே, அடி வாங்காதே!
அழிக்காதே, அழிந்து விடாதே!

மடையர்களின் ஈன கற்பனைகளுக்கு மசியாமல் தான் விரும்பிய நேர்மையான வாழ்க்கையை துணிச்சலுடன் வாழ்ந்து காட்டுவோம். எந்த மடையனும் யாருக்கும் எந்த பாடத்தையும் கொற்றுக் கொடுக்க அவசியம் இல்லை. அன்றும் சரி, இன்றும் சரி, உலகம் இந்த முறையில்தான் தொடர்ந்து இயங்கிக் கொண்டு வருகிறது. இதில் மாற்றம் ஏதும் இருக்காது.

(பி.கு. நெல்லை நியூசின் //தீண்டாமைக்கு இந்த டம்ளர் மட்டுமா சாட்சி?// என்கிற‌ த‌லைப்பில் வ‌ந்த‌ இடுகைக்கு நான் அனுப்பிய பதில் க‌ருத்து).

நன்றி.

1 கருத்து:

  1. மாசிலா,

    நீண்ட நாள்களுக்கு பிறகு சாட்டையை சுழற்றி இருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. இந்த தீண்டாமை நுழைந்ததால் இந்தியா இன்னும் நோஞ்சானாகவே இருக்கிறது. :(

    பதிலளிநீக்கு