American Global Financial Integrity (GFI) ஆய்வின்படி ஆண்டு 2010இல் வளரும் நாடுகளில் இருந்து 858 மில்லியார் டாலர்கள் சட்டத்துக்கு புறம்பான மற்றும் தவறான வழிகளில் வெளியேறி உள்ளதாக அறிவிக்கிறது. இது சென்ற ஆண்டுகளை விட 10% அதிகமாம்.
இப்பாழும் பணங்கள் அப்படி எங்குதான் போய் மாயமாய் மறைகின்றன?
GFI தலையாயர் Raymond Baker கூற்றின்படி (அடாவடி) பண சொர்க்கம் மற்றும் வளர்ந்த நாட்டு வங்கிகளிலும் இவை போய் அடைகின்றன என்கிறார்.
அகில உலக அளவில் பொருளாதர நிலை மந்தமடைந்த நிலையிலும் இவ்வடாவடி செயகல்கள் அதிகரித்த வன்னமாகவே இருந்திருக்கிறது எனவும் அவர் உறுதி செய்கிறார். இப்படி அடாவடித்தனமாக திசை திருப்பப்பட்ட பணங்களை சம்பத்தப்பட்ட நாட்டு அரசு நிர்வாகங்கள் ஒழுங்கான முறையில் கண்கானித்து தடுத்து உள்நாட்டில் செலவழித்து இருந்தால் ஏழ்மையை ஒழித்து உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
சீனா முதல் இடத்தில்.
420 மில்லியார் டாலர் பறிகொடுத்து சீனா முதலிடத்தில் இருக்கிறது. பின் மலேசியா 64 மில்லியார் $ , மெக்சிக்கோ 51 மில்லியார் $ மற்றும் ரஷ்யா 43 மில்லியார் $ போன்ற நாடுகள் தொடர்கின்றன.
நன்றி : LaTribune.fr
GFIயின் அறிக்கையில் நம்ம இந்தியா எந்த இடத்தில் என தெரியவில்லை. ஒரு வேளை அவங்களுக்கே மர்மமா ஏதாவது வச்சி அழுத்திட்டாங்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக