26 நவம்பர், 2006

கொலைகார பாவிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

தலித்துக்களுக்கும், பலமற்றவர்களுக்கும் கொடுமைகள் செய்துவரும் சதிகார சாதிக்கார குடும்பத்து பிள்ளைகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை :

முன் மாதிரி உங்கள் அப்பன்கள் பண்ணைகளை, தொழிற்கூடங்களை உள்ளூரிலேயே காலம் முழுக்க ஓட்டி ஏழைகளையும், வலிமை அற்றவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும் அடிமையாக வைத்திருந்த காலம் முடிந்துவிட்டது என்பதை நீங்கள் சரிபட உடனடியாக புரிந்துகொள்ளவேண்டும். பெரிய நகரங்களிலோ, மேல் நாட்டிலோ மேல் படிப்பு, உயர்ந்த வேலைகள் செய்துவரும் நீங்கள் உங்கள் அப்பன் தொழில்களை சொந்த ஊரிலோ, கிராமத்திலோ போய் இனி செய்யமாட்டீர்கள். கட்டாயமாக நீங்கள் உங்கள் குடும்பத்தை, வீட்டை, ஊரை, கிராமத்தை விட்டு வெளியே வந்து உங்கள் தகுதிக்கு உடனான வேலைகளை தேடி, பெரிய படிப்பு படிப்பதற்கு பெரிய நகரங்களுக்கோ, அல்லது வெளி நாட்டிற்கோ போயே ஆகவேண்டும்.

உங்கள் அப்பன்கள் இன்றும், சாதி, மத பெயர்களைச்சொல்லி பலமற்றவர்களை, தலித்துக்களை மனிதாமற்ற முறையில் அவமானப்படுத்தி, கொலை செய்து, வீடுகளை எரித்து, பெண்களை கற்பழித்து, அடிப்படை மனித தனி உரிமைகளை மறுத்து மிருகங்களைவிட கேவலமான முறையில் நடத்தி, பல பொருளாதார, அடிப்படை சுதந்திர நெருக்கடி கொடுத்து வஞ்சித்து சாகடித்து ஒரு இன அழிப்பையே நடத்தி வருகின்றனர். அவர்கள் செய்யும் அத்தனை தவறுகளுக்கும், பாவங்களுக்கும் நீங்கள் தண்டனை அனுபவிக்க நேரிடும். என்றாவது ஒரு நாள், அது இன்றே கூட இருக்கலாம், வசமாக மாட்டிக்கொள்வீர்கள்.

முன் காலத்தில் போலல்லாமல் இப்போது ஊடகங்கள், இணையம், நவீண கால தொடர்பு சாதனங்களின் மூலம் செய்திகள் பரவவுவதை உங்களால் தடுக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது என்பதை நீங்கள் நன்கறிவீர். இந்தியாவில் எந்த ஒரு மூலையில் ஒரு சிறு அநியாயம் நடந்தாலும், அடுத்த நிமிடமே உலகத்தின் மறு கோடிக்கு பரவும் இவ்வேலைகளில் யாராலும் எதையும் மறைக்க முடியாது. அநியாயம் செய்யும் உங்கள் அப்பன்கள் அதிகார துஷ்பிரயோகத்திலோ, பண பலத்திலோ தண்டனையில் இருந்து இப்போது தப்பித்துக் கொண்டாலும், இதை படிக்கும் நீ தப்பித்துக்கொள்ள வழி கிடையாது. உங்களை சுற்றிலும் இப்போது தடுப்பு சுவர்கள் எழும்பிக்கொண்டிருக்கிறது. உங்களை காப்பாற்றுவதற்கல்ல. உங்களை சமூகத்தில் இருந்து தனிமை படுத்த. உங்கள் தலைமேல் ஒரு ஈட்டியும் தொங்கி கொண்டிருக்கிறது. தற்போது அகன்று இருக்கும் இச்சுவர் தடுப்பினுள், ஈட்டி உன் தலையில் விழுவதை தவிர்த்து விடலாம். ஆனால் உன் அப்பன்கள் உன் ஆத்தாள்களுடன் ஆசியுடன் தொடர்ந்து செய்து வரும் கொடுமைகளினால் நாளடைவில் சுவர் இறுகி சிறிதாகி, வேறு இடமில்லாமல் ஈட்டிக்கு நேராக "நீ" நிற்க வேண்டிவரும். ஈட்டி ஒரு நாள் அறுந்து உன் தலையில் விழும்.

உனக்கு இது தேவையா?
நீ வாழ பிறந்தவன்.

உன் அப்பனிடம், ஆத்தாளிடம், சகோதர, சகோதரி மற்றும் கொல வெறி பிடித்த அனைத்து மிருகங்களிடமும் விளக்கி சொல்லி உடனடியாக அநியாயத்தை நிறுத்தச்சொல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக