28 மே, 2007

'மொட்டை அடிப்பது ஏன்' அப்டீன்னு ஒரு அறிவாலி கேட்டிருக்காரு.

தாலி கட்றது ஏனுன்னு கேட்ட கனிமொழி கேள்விக்கு நேரடியா பதில் சொல்ல முடியாம திணறுகிற ஒரு பதிவாளரு ஸ்டாலின் மொவனுக்கு மொட்ட அடிச்சிது ஏனுன்னு கேட்டிருக்காரு.

மொட்டைய பற்றிய உலக வழக்கம்.

சிசுவா தாய் வயித்துல இருக்கறப்பவே மொளச்ச கருமுடிய எடுக்கறதுதான் இந்த மொட்ட போடறதோட ஆழக்கருவே. தொப்புள் கொடி அருத்ததை போலவே இதுவும் சிறு பிள்ளைய தாய்கிட்ட இருந்து பிரிச்சி எடுக்கிற விஷயந்தான். எங்க குலத்தில பாட்டிங்களாம் இந்த முடிய தொடகூட அருவருப்பு படுவாங்க. ஏன்னா கருமுடி அசிங்கமாம். தாய்க்கும் மகனுக்கும் இனி பிறப்பு சம்பந்தமா எந்த உறவும் இல்லை. சமுதாயத்துல அவன் ஒருவன். இந்த சமயத்திலிருந்து அவன் ஆண்கள் கூட இருந்து போர் செய்ய, வேட்டை ஆட கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை குறிக்கும் மைல்கல். இன்னிக்கும் ஒரு சில ஆப்பிரிக்க ஆஸ்த்ரேலிய பழங்குடி இனத்தவர்கள் இடையேயும் இதே போன்ற பழக்கங்கள் இருக்குது. அவங்க இந்த முடிய கையாலேயே பிய்ச்சி புடுங்கி எடுக்கிற வழக்கமும் உண்டு. இது ஏன்னா, அப்பதான் சிறுவன் மனசை, வலிய அடக்கி அழுவாம பொறுத்துக்கனும். இதன் பிறகுதான் இவன் மற்ற பெரியவனுங்க சமுதாயத்தில சேர தகுதி பெற உரியவன் ஆகிறான். இதையே வேறு விதத்தில சொன்னால், தாயின் அடைக்கலத்தில் இருந்து குழந்தை பையனை பிரித்தெடுத்து அவனை ஒரு தனி ஆள் ஆக்குவதற்கு செய்யப்படும் முதல் காரியமே இது. இந்த காரியத்த தெய்வ நம்பிக்கை உள்ளவங்க கோயில்ல வெச்சி செய்றாங்க. அவ்ளோதான் அம்பிங்களா. இப்ப புரிஞ்சுதா அறிவாலிங்களா? இல்ல இன்னும் வேணுமா.

5 கருத்துகள்:

  1. பெயரில்லா28/5/07, 10:45 AM

    appadingala aiya...appo kalaingar nadathi vaikara pala thirumanagalil Thali eduthu kodukarare...athu yen???

    Avanga appa kitta muthala kettu irukalame...

    பதிலளிநீக்கு
  2. //சிசுவா தாய் வயித்துல இருக்கறப்பவே மொளச்ச கருமுடிய எடுக்கறதுதான் இந்த மொட்ட போடறதோட ஆழக்கருவே. தொப்புள் கொடி அருத்ததை போலவே இதுவும் சிறு பிள்ளைய தாய்கிட்ட இருந்து பிரிச்சி எடுக்கிற விஷயந்தான். //

    தொப்புள் கொடிஅறுப்பு என்பது குழந்தையை தாயிடம் இருந்து பிரிப்பது என்பதை விட பனிக்குடம் என்றழைக்கப்படும் தற்காலிக உறுப்பான குழந்தை கருவாக பிறக்கும் வரையில் தாயின் கருப்பையில் இருந்த "ப்ளாசண்டா" எனப்படும் பை போன்ற அமைப்புடன் தொப்புள் கொடி இணைந்திருப்பதால் வெளி உலகம் வந்து பிறந்துவிட்ட குழந்தையை ப்ளாசண்ட்டாவிலிருந்து விடுவித்தல் அவசியமாகிறது.


    //எங்க குலத்தில பாட்டிங்களாம் இந்த முடிய தொடகூட அருவருப்பு படுவாங்க. ஏன்னா கருமுடி அசிங்கமாம்.//

    என்னங்க பாட்டிங்க பாசம் மீதுஇப்படி குண்டை வீசிட்டீங்க!

    //தாய்க்கும் மகனுக்கும் இனி பிறப்பு சம்பந்தமா எந்த உறவும் இல்லை. சமுதாயத்துல அவன் ஒருவன்.//

    மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு??

    //இந்த சமயத்திலிருந்து அவன் ஆண்கள் கூட இருந்து போர் செய்ய, வேட்டை ஆட கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை குறிக்கும் மைல்கல்.//

    ஒரு வயசுக் குழந்தை மொட்டை அடிச்சவுடனே கையில ஆயுதம் ஏந்திப் போரிடணுமாமா?

    சரி நம்மூர்ல இன்னும் பெண் குழந்தைகளுக்கும் மொட்டை அடிக்கும் பழக்கம் இருக்கு என்பதை அறிவீர்கள் தானே?

    //இன்னிக்கும் ஒரு சில ஆப்பிரிக்க ஆஸ்த்ரேலிய பழங்குடி இனத்தவர்கள் இடையேயும் இதே போன்ற பழக்கங்கள் இருக்குது. அவங்க இந்த முடிய கையாலேயே பிய்ச்சி புடுங்கி எடுக்கிற வழக்கமும் உண்டு. இது ஏன்னா, அப்பதான் சிறுவன் மனசை, வலிய அடக்கி அழுவாம பொறுத்துக்கனும். இதன் பிறகுதான் இவன் மற்ற பெரியவனுங்க சமுதாயத்தில சேர தகுதி பெற உரியவன் ஆகிறான். //

    சார் நம்மூர் பழக்கத்துக்கு விளக்கம்னா அவுஸ்திரேலியா ஆப்ரிக்கான்னு தொலைதூரம் போயிட்டீங்க.

    சீக்கிரமா ப்ளைட் பிடிச்சு திரும்பி நம்மூர் மேட்டர்க்கு வாங்க சார்!

    //இதையே வேறு விதத்தில சொன்னால், தாயின் அடைக்கலத்தில் இருந்து குழந்தை பையனை பிரித்தெடுத்து அவனை ஒரு தனி ஆள் ஆக்குவதற்கு செய்யப்படும் முதல் காரியமே இது.//

    அதுசரி! மொட்டை அடிச்சு காதுகுத்திய குழந்தை தாயிடம் முற்றிலும் சரணடைஞ்சு அடைக்கலம் தேடுவதைக் காணவில்லையா நீங்கள்?

    // இப்ப புரிஞ்சுதா அறிவாலிங்களா? இல்ல இன்னும் வேணுமா.//

    மாசிலா என்ன இப்படி பயமுறுத்துறீங்க!! இதுவே கண்ணைக் கட்டிருச்சு! நீங்க வேற!!

    பதிலளிநீக்கு
  3. அது சரி Hariharan # 03985177737685368452

    நீங்கதான் மொட்டை போடுவதன் காரணத்தை கொஞ்சம் சொல்லுங்களேன். உங்களுடைய கருத்த எதையும் சொல்லாம இப்படி நழுவினு போயிடாம்னு பாக்கறீங்களே!

    பதிலளிநீக்கு
  4. ஐய்யா Vivek's, பதிவு தவறி வந்துட்டீங்க போல இருக்கு. இருந்தாலும் பதில் சொல்லிடேறங். நாம பேசறது கனிமொழி சொன்னத பத்தி. கலைஞர் பத்தியது இல்ல. கேட்ட கேள்விக்கு நேரடியா பதில் சொல்லுவியா? இல்ல சுத்தி வலைச்சி காது குத்த பாக்குறியா?

    கேக்கறவங்க 18 வயது தாண்டின வாலிப வயது பொறுப்புள்ள மனிதருங்க. கயித்த சொமக்க போறவங்க அவங்க. அவங்களே வேணாம்னு சொல்ற போது, நீங்க யாருய்யா அத கட்டாய படுத்தறதுக்கு? நாளைக்கு ஆண்பிள்ளைங்கதான் இனிமேல் தாலிய சொமக்கனும்னு சொன்னா நீ ஒத்துக்குவியா?

    தூக்கி எட்ட தூர கெடாசுயா அந்த சனியன் புடிச்ச கயித்த.

    இனிமே இத பத்தி பொம்பளைங்க வெக்கறதுதான் சட்டம். அவங்க வேணும்னா வேணும். வேணாம்னா வேணாம். அவ்ளோதான். இதுல ஆம்பளைங்க பேசறதுக்கு ஒன்னுமே இல்ல.

    பதிலளிநீக்கு