28 செப்டம்பர், 2007

செப்டிக் டேங்க் சுத்தம் செய்கையில் மூச்சுத்திணறி மூன்று தமிழர்கள் பலி!



நன்றி தினகரன்.

அன்னாரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

எதிர்காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காதிருக்க அரசாங்கம், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், அனைவரும் உடனடியாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய பொறுப்பாளர்கள் ஆபத்து மிக்க இந்த தொழிலிற்கு தேவையான பாதுகாப்பு அணிகலன்கள் எதுவும் இன்றியும், பாதுகாப்பிற்கும் ஆபத்துகால அவசர உதவிகளுக்கும் எந்த வித ஏற்பாடுகளும் கவனிப்பும் இன்றி தன்னந்தனியே தவிக்க விட்டு உயிர்களை பலிவாங்கிய இவர்களின் செயல்களுக்கும் சட்டப்படி தண்டனை கொடுக்கவேண்டும்.

இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காதிருக்க என்னென்ன செய்யலாம்.

முதலில் அரசாங்கம் இவர்கள் பாதுகாப்பிற்கான தொழில் சட்டங்களை உருவாக்கி உடனடி அமுல் செய்தல் வேண்டும்,

மனிதர்கள் இது போன்ற தொட்டிகளின் இரங்காதிருக்க இயந்திரங்கள் கொண்டு உதவலாம்.

தொழிலாளர்களுக்கு அனைத்துவித பாதுகாப்பு அணிகலன்களை கொடுத்து உதவவேண்டும்.

அவசர ஆபத்து கால உதவிகளுக்கு, வேலை ஆரம்பம் முதல் கடைசி வரை இவர்கள் அருகாமையில் உயிர்பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தொடர்ந்த கவனிப்பில் இருக்க ஆவண செய்தல் வேண்டும்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்)

6 கருத்துகள்:

  1. மாசிலா!
    படிக்க வேதனையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் கூறும் எதுவுமே செய்து இந்த ஏழைகளை இவர்கள் காப்பாற்றப் போவதில்லை. பத்தோடு பதினொன்று ஒரு ஏழை போனால் என்ன??என்ற மனநிலையே அரசுக்கும் அதிகாரிகளுக்கும்.
    அன்றைய செய்தியுடன் இது பற்றிய கதை முடிந்து; அடுத்த அசம்பாவிதம் நடந்து செய்தியாகி அடுத்ததும் நடக்கும்;இது தான் நம் நாடுகளில் நடப்பது..

    பதிலளிநீக்கு
  2. I have sent a letter to the grievance cell (http://darpg-grievance.nic.in/DARPGN.ASP?WCI=homepg&WCU) citing this page of your blog:

    http://naalainamathae.blogspot.com/2007/09/blog-post_28.html

    The above is a link to a page of a blogger citing a news item in a Tamil Daily 'Dinakaran" on the death of 3 dalits who got killed when they were cleaning a common septic tank on Sep 28th, in Chennai.

    It appears we have at last come out of the bracket of 'developing countries' and at the threshold of being among the developed countries. It was a pround moment when I read yesterday that Ambani has become the 4th richest man in the world.

    BUT how long we are going to make the dalits to clean and carry the human wastes?

    A little money and some great will from our politicians and bureaucrats can make this condition completely changed if we introduce machanised system for doing such jobs.

    Is it asking too much to shell out some money for this by every state government and liberate the 'harijans' from this job thrusted on them for generations.


    http://darpg-grievance.nic.in/DARPGN.ASP?WCI=homepg&WCU

    Your Complaint is Successfully Registered.
    Note your Registration No. DARPG/E/2007/06791
    for later references.

    பதிலளிநீக்கு
  3. வருகை தந்து கருத்து சொன்ன தருமி மற்றும் யோகன் பாரிஸ் ஆகியவர்களுக்கு நன்றி.

    தருமி அன்பரே, தமிழில் எழுதவும். எனக்கு ஆங்கிலம் வராது. (ஹி!)

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பதிவில் உள்ள விஷயம் பற்றி, இந்தியாவின் நடுவண் அரசு அமைத்துள்ள குறைதீர்க்கும் அலுவலகத்திற்கு நான் அனுப்பிய கடிதத்தின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்.

    -----------------------------
    http://naalainamathae.blogspot.com/2007/09/blog-post_29.html

    தமிழ்ப் பதிவர் ஒருவர் கொடுத்துள்ள செய்தி ஒன்றின் தொடுப்புதான் மேலே கொடுக்கப் பட்டுள்ளது. தமிழ் நாளிதழ் ‘தினகரனில்’ வந்த ஒரு செய்தியை அவர் கொடுத்துள்ளார்; செப்டம்பர் 28ம்தேதி, சென்னையில், சுகாதார வேலைபார்க்கும் மூன்று தலித்துகள் பொது மலக்குழி (septic tank) யில் துப்புறவு செய்ய இறங்கியபோது இறந்துவிட்டார்கள் என்பதே அந்த செய்தி.


    பல ஆண்டுகளாக ‘வளரும் நாடாக ‘ இருந்துவந்த நமது நாடு இப்போதோ வளர்ந்துவிட்ட நாடாக உலகத்தால் ஒத்துக்கொள்ளப் பட்ட நிலைக்கு உயர்ந்து விட்டது. நேற்றைய தினசரியில் அம்பானி உலகின் நான்காவது பணக்காரராகி விட்டார் என்பதைப் படிக்கும்போது மகிழ்ச்சியாகவே இருந்தது.


    ஆனால் மனிதனின் மலக்கழிவுகளை மனிதனே சுமக்கும் கேவலத்தை, அதுவும் ஒரு சாதியினரே சுமக்க வேண்டும் என்ற அவலத்தை இன்னும் எத்தனைக் காலத்துக்கு அனுமதிக்கப் போகிறோம்?


    நம் அரசியல்வாதிகளிடமும், அரசதிகாரிகளிடமும் கொஞ்சம் பணமும், பெரிய உள்ளமும் இருந்தாலே போதும்; நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்து இந்த பழக்கத்தை உடனே மாற்ற முடியும்.


    நமது மாநில அரசுகளை இதற்குரிய பணத்தை ஒதுக்கீடு செய்யும்படி செய்து, பல நூற்றாண்டுகளாக இந்த வேலையைச் செய்ய வலிந்து ஆட்படுத்தப்படும் ‘ஹரிஜனங்கள்’ இதிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதானே?

    -----------------------------
    அந்த அலுவலகத்தின் மெயில் முகவரியும், அங்கிருந்து வந்த அத்தாட்சியும் அதற்குரிய எண்ணும் ஆங்கிலப் பின்னூட்டத்தின் இறுதியில் உள்ளன.
    ----------------------------
    இது பற்றிய சூடான விவாதம் ஒரு ஆண்டுக்கும் முன்னதாக நம் தமிழ்ப் பதிவுகளில் நடந்தது. அப்போதே இதை அடுத்து இயந்திர இறக்குமதி பற்றியெல்லாம் பேசப்பட்டது. முனைப்பாக அரசைச் செயல்பட வைக்கும் வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பது ஆவல்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. நன்றி தருமி அய்யா.

    ஏதோ பிறவிப்பயனை அடைந்ததை போன்ற ஒரு பிரமையாக இருக்கிறது.

    பிரான்சில் மனித கழிவுகளை அகற்றும் துறைசார்ந்த சில தொழில் குழுமங்களை கலந்து பேசி கூட்டுறவு முறையில் ஏதாவது செய்ய முடியுமா என பார்க்க போகிறேன்.

    முயற்சி எடுத்தால் எதுவும் நடக்கும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

    மீண்டும் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  6. கொடுமை,

    ஏழ்மையினால் இன்னும் இதுபோன்ற தொழில்களை வழியில்லாமல் தொடருகிறார்கள். படிப்பறிவு ஊட்டி அவர்களது சந்ததிகளையாவது காப்பாற்ற சமூக நல அமைப்புகள் முன்வரவேண்டும்.

    பதிலளிநீக்கு