19 ஜனவரி, 2010

சீன திரை அரங்குகளிருந்து வெளியேறும் அவாத்தார்! ஏன்?

கடந்த 4ஆம் தேதி சீன திரை அரங்குகளில் வெளிவந்த அவாத்தார், மற்ற எப்போதும் இல்லாத அள்விற்கு மிக பிரம்மாண்ட வரவுகளை கொடுத்து புதிய சாதனை நிகழ்த்தி இருக்கிறது. பீக்கிங்கின் முக்கிய மூன்று IMAX 3D அரங்குகளில் கடந்த 59 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வெளியில் நீண்ட வரிசையில் காத்து நின்றும் மக்கள் படத்தை பார்த்து சென்றனர்.

சீன இயக்குனர் லியு சுயான் கூறுகையில், "இப்படமானது சீனாவின் அனைத்து திரைப்பட தயாரிப்பாள்ர்களுக்கும் தங்களது பின்தங்கிய சீன சினிமா உலகின் மிகப்பெரிய ஒரு தோல்வியின் அடையாள்த்தையே நினைவுபடுத்தும் சின்னம்" என்றார். "இது எந்த அளவிற்கு எங்களது அனைத்து சீன சினிமா உலகமானது உண்மை, அழகு, தூய்மை போன்ற மிகச்சாதாரண நிலைகளை விட்டு வெகு தூர விலகி இருக்கிறது என்பதை எங்களுக்கு சவுக்கடியுடன் உணர்த்துகிறது" என்றும் கூறினார். மொத்தத்தில், இப்படத்தின் திறமைகள் அருகில் சீன முழு சினிமா உலமும் ஒரு பூஜ்ஜியம் என சொல்லாமல் சொன்னார்.

ஆனால், இப்பிரமிக்க வைக்கும் அவாத்தார் பட வெற்றியானது சீன மைய அரசினை கொஞ்சம் ஆட்டம் காணவும் வைத்து விட்டது. இதனால், 3D அல்லாத புற நகர் மற்றும் தூரத்து ஊர் அரங்குகளில் 2D ஆக அதிக அளவில் காட்சி இட்ப்பட்ட இப்படங்களை விலக்குமாறு சீன அரசாங்கம் உத்தரவு இட்டுவிட்டது.


avatar2.1263902442.jpgபிப்ரவரி கடைசிவரை காட்சியிடப்பட வேண்டிய படத்தை இவ்வளவு அவசரமாக சீன அரசாங்கம் விலக்கியதின் பின்புலம் என்ன?

இப்படம் உள்நாட்டு தயாரிப்பு படங்களை பின்னுக்கு தள்ளி அளவுக்கு மிகுந்த வசூலை அள்ளியது மட்டும் ஒரு காரணமிலலை. இதில்லாமல், பொருளாதார வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம் என்கிற பெயரில் சீனாவில் கடந்த சில பத்தாண்டுகளாகவே சாதாரண குடிகள், விவசாயிகள் அவர்களது மண்ணிலிருருந்து அகற்றப்பட்டும், அவர்களது மண், நிலங்களை அரசின் பக்க பலத்துடன் பன்முக கட்டிட கட்டுமான முதலாளிகளால் அராஜக முறையில் பலவந்தமாக பறிக்கப்பட்டு வருவதை நினைவு படுத்தும் வகையில் அவாத்தார் படத்திலும் சில காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. கடந்த சில வாரங்களாக சீன வலைப்பதிவாளர்கள் சிலர் இவ்விரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பல வாதங்களை முன்வைத்து எழுதியும் வருகின்றனர். இதனால், சட்ட அமைதிக்கு ஏதும் கேடு வந்துவிடக்கூடாதே என அஞ்சிதான் சீன மைய அரசு இவ்வித அவசர முடிவுகளை எடுத்திருக்கிறது என யூகிக்கிப்படுகிறது.

சீன புகழ்பெற்ற வலைப்பூ பதிப்பாளர் ஹான் ஹான் கூறுகையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள மக்களிடம் இருந்து அடாவடித்தனமாக அவர்களது மண்ணை பிடுங்கி நிலங்களை கையகப்படுத்தி மண் நிலமற்ற அநாதைகளாக அலையும் காட்சிகள் ஒன்று சீனாவிலும் மற்றது இவ்வுலகை அற்ற தூரத்து கிரகங்களில் மட்டும்தான் நடக்க வாய்ப்பு உள்ளது என மக்கள் நம்ப இடமுள்ளது என்றார் (இந்தியாவிலும் நடக்கும் இதை போன்ற அநியாயங்கள் அவருக்கு தெரியாததை மன்னித்துவிடுவோம்)

தற்போதைக்கு, அகண்ட சீனா முழுவதிலும் உள்ள சற்றே 550 _ 3D அரங்குகளில் மட்டும்தான் இப்படம் முன் குறிப்பிட்ட தேதிவரையில் ஓடும். அதாவது ஆடம்பர வசதி படைத்த மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே. இதன் மூலம், சாதாரண அதிகபட்ச அடித்தள மக்கள் இப்படத்தை பார்த்து தங்களது பரிதாப நிலைகளை இன்ங்கண்டு ஒப்பிட்டு எவ்வித மன எழுச்சி அல்லது போராட்ட முயற்சிகள் துளிர்விடுவதை அடியோடு தவிர்த்து தடுக்கப்பட்டன.

நன்றி : Le Monde / French News Paper.

இதுவே நம்ம அகண்ட சீனாவின் பயந்தாங்கொள்ளி கொள்கை.

(எப்படியோ! அனைத்து சீன் அடித்தள மக்களும் எழுச்சி கண்டு சீனா முழுதிலும் புரட்சிகள் வெடித்து நாடு சின்னாபின்னமானால், இந்தியாவிற்கு நல்லது.தான். யார் கண்டது? அது போன்ற வேளைகளில், தேச ஒற்றுமை கருதி இந்திய் மீது வேண்டுமென்றே (பொய்) போர் தொடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. எவ்வளவு காலம்தான் பொய் கம்யூனிசத்தை வைத்து மக்களை ஏமாற்ற முடியும். என்றாவுது ஒரு நாள் உண்மை உலகிற்கு சீன மக்கள் வந்தே தீரவேண்டும்.)

2 கருத்துகள்:

  1. முன்பு சீனாவின் இரசிகனா இருந்த நான், இப்போதெல்லாம் சீனாவை பிடிப்பதில்லை. மக்களின் தேவைக்கு மதிப்பளிக்காமல் இருக்கும் எந்த அரசும் நிலைக்க முடியாது இதை உணரும் காலம் விரைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மயூரேசன். அனைத்து சீன மக்களும் கெட்டவர்கள் அல்லதான். பழமை வாய்ந்த சீன சமூகங்களை நாம் ஒருபோதும் குறை கூறுவதற்கில்லை. அதற்கான தகுதியும் நமக்கில்லை. நாம் சுட்டிக் காட்ட முயல்வது அத்தனையும் சீன மைய கம்யூனிச அரசின் மக்களின் குரலை மதிக்காத அராஜக போக்கு அரசியலைத்தான்.

    பதிலளிநீக்கு